டாடா மோட்டார்ஸ் வழங்கும் 'ஹர் வீக் தீவாளி' சலுகைகள் அறிமுகம்

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 'ஹர் வீக் தீவாளி' சலுகைகள் அறிமுகம் செய்யப்படுள்ளது. தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்டவை அடங்கிய பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. அனைவரும் அவரவருக்கு பிடித்த முறையில் இதற்கான கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய அறிமுகங்கள் செய்தோ அல்லாதோ மேம்பாடுகள் செய்த மாடல்களை வெளியிட்டு கொண்டாடுகின்றனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 'ஹர் வீக் தீவாளி' சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஹர் வீக் தீவாளி;

ஹர் வீக் தீவாளி;

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்கள் தரப்பில் இருந்து, 'ஹர் வீக் தீவாளி' என்ற பெயரில் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

'ஹர் வீக் தீவாளி' என்பதற்கு ஒவ்வொரு வாரமும் தீபாவளி என்று பொருள் ஆகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'ஹர் வீக் தீவாளி', செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த 'ஹர் வீக் தீவாளி' சலுகைகள், இந்தியாவில் விற்கப்படும் டாடா நிறுவனத்தின் பாசஞ்ஜர் கார்கள் எனப்படும் பயணியர் கார்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.

'ஹர் வீக் தீவாளி' சலுகைகளில், டாடா கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது.

டாடா சஃபாரி ஸ்டார்ம்!

டாடா சஃபாரி ஸ்டார்ம்!

'ஹர் வீக் தீவாளி' சலுகைகளின் போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவி, 1,00,000 ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பெனிஃபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் முறையில் அளிக்கப்படுகிறது.

டாடா ஸெஸ்ட்;

டாடா ஸெஸ்ட்;

டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான், அதிகப்படியாக 20,000 ரூபாய் வரையிலான ஆதாயங்களுடன் கிடைக்கும்.

இதர சலுகைகள்;

இதர சலுகைகள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'ஹர் வீக் தீவாளி' சலுகைகளின் அடிப்படையில், டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கும் வகையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகின்றனர். மேலும், தற்போது வாங்கப்படும் அனைத்தும் டாடா கார்களுக்கும் இலவச இன்சூரன்ஸ் அளிக்கப்படும்.

மெகா சலுகை;

மெகா சலுகை;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் சலுகைகளிலேயே மிகவும் முக்கியமான சலுகையானது, தீபாவளியின் போது, வாடிக்கையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. டியாகோ உட்பட எந்த விதமான டாடா கார்களையும் வாங்கும் வாடிக்கையாளர்கள், இந்த 'ஹர் வீக் தீவாளி' சலுகைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவர். இப்படி 7 வாடிக்கையாளர்களுக்கு, இந்த 10 லட்சம் ரூபாய் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஃபைனான்ஸ்;

ஃபைனான்ஸ்;

எந்த விதமான சிக்கல்களும் இன்றி சுலபமாக டாடா கார்களை வாங்குவதற்கு, முன்னணி வங்கிகள் மற்றும் ஃபைனான்ஷியர்களிடம் இருந்து கடன் பெறுவதற்கு டாடா நிறுவனம் உதவுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செப்டம்பரில் செவர்லே கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள்

செப்டம்பரில் கார் மற்றும் டூ வீலர்கள் மீது அட்டகாசமான சலுகைகள்

டாடா டியாகோ ஹேட்ச்பேக் - மைலேஜ் ரிவியூ மற்றும் விவரக்குறிப்புகள் - முழு விவரம்

English summary
Tata Motors introduces ‘Har Week Diwali’ offer Pan India. Tata Motors is gearing up for festive season across Indian market and has introduced the 'Har Week Diwali' offer. Festive offers are applicable only on passenger cars in India. Har Week Diwali offer from Tata Motors commences from September 16. discounts and cash benefits worth up to Rs. 1 lakh are also offered. To know more, check here...
Story first published: Saturday, September 17, 2016, 7:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark