பட்ஜெட்டில் கூடுதல் வரி: டாடா கார்களின் விலை கணிசமாக உயருகிறது

Written By:

பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டதையடுத்து, டாடா கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட உள்ளது.

ஒரு சில தினங்களுக்கு முன்பு தான், மத்திய அரசின் பட்ஜெட் வெளியிடபட்டது. அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாசெஞ்ஜர் (பயணியர்) வாகனங்களின் விலைகள் 2,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை உயர்த்தபட்டுள்ளது.

இந்த விலைஉயர்வு உடனே அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

புதிய பட்ஜெட்டின் பரிந்துரைகள் படி, சப்-4 மீட்டட் கேட்டகரி அல்லது 1,500 சிசி அளவிற்கும் குறைவான இஞ்ஜின் கொள்ளளவு கொண்ட டீசல்வாகனங்கள் மீது 2.5% செஸ் வரி விதிக்கபடுகிறது. மேலும், அதிக இஞ்ஜின் கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கு 4% செஸ் வரி விதிக்கபடுகிறது.

இதனால் தான், இந்த விலையேற்றம் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

tata-motors-increase-passenger-vehicles-prices

இந்த சமீபத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள கூடுதல் வரிகளினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் பாதிக்கபடவில்லை. ஹூண்டாய் நிறுவனமும் தங்கள் கார்களின் விலைகளை மாடல்களை பொருத்து 3,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை விலையை உயர்த்த யோசித்து வருகின்றனர்.

மேலும், ஹோண்டா நிறுவனமும், தங்கள் கார்களின் விலைகளை 4,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை உயர்த்த உள்ளனர்.

English summary
Tata Motors has increased prices of their passenger vehicles by upto Rs. 35,000/-. This Price Hike comes to implementation with immediate effect. This price hike is done, after new budget proposal as government imposes a cess of 2.5 percent on diesel vehicles, under sub-4 metre category and engine capacity not exceeding 1,500cc.
Story first published: Wednesday, March 2, 2016, 15:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark