டாடா நானோ பெலிக்கன் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

டாடா நானோ பெலிக்கன் என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை டாடா நானோவின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

டாடா நானோ பெலிக்கன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் அடுத்த தலைமுறை டாடா நானோ மாடலுக்கு தான், 'பெலிக்கன்' என்ற கோட்நேம் சூட்டப்பட்டுள்ளது.

கடுமையான உருமறைப்புடன் இதன் சோதனைகள், பூனே அருகே மேற்க்கொள்ளப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஸ்டைலிங் பொறுத்த வரை, பெரிய அளவிலான புரட்சிகரமான மாற்றங்கள் எதுவும் இருக்காது.

பரிணாம வளர்ச்சியின் பகுதியாக, தற்போதைய டாடா ஜென் எக்ஸ் நேனோ டிசைனில் இருந்து சில சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படுள்ளது.

டாடா ஜென் எக்ஸ் நேனோ, முன் பம்பரும், பின் பம்பரும் அப்படியே தக்க வைத்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதன் பானட் மற்றும் ஹெட்லேம்ப்கள், நானோ யுரோப்பா கான்செப்ட்டில் இருந்து ஏற்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா நானோ பெலிக்கன் மாடலில், 3-சிலிண்டர்கள் உடைய பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால், டாடா நானோ பெலிக்கன், மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ரெனோ கவிட் ஆகிய மாடல்களுடன் போட்டிபோடும் வகையில் இருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டாடா நானோ பெலிக்கன் மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

டாடா நானோ பெலிக்கன், டீசல் இஞ்ஜின் தேர்வுடனும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வதந்திகள், 2008-ஆம் ஆண்டில், டாடா நானோ மாடல் வெளியிடப்பட்ட சமயம் முதல் வெளியாகி கொண்டிருந்தது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

டாடா நானோ பெலிக்கன் மாடலின் இன்டீரியரின் படங்கள் வெளியான போது, இதில் ஏராளமான மாற்றங்கள் காணப்பட்டது.

டெஸ்டிங் வாகனத்தில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் இந்த மாற்றங்களை தெளிவாக காண முடிந்தது. காரின் டேஷ்போர்ட் மத்தியில் இருந்த ஸ்பீடோமீட்டர், இப்போது அதன் சரியான இடத்தில் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் பொருத்தப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

டாடா நானோ பெலிக்கன் மாடலில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேரடியாக டியாகோ மாடலில் இருந்து ஏற்றுகொள்ளப்பட்டு பொருத்தப்பட்டதாக தெரிகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா நானோ பெலிக்கன் காரின் ஸ்பை படங்கள் வெளியிடப்பட்டது

நானோ தொடர்புடைய செய்திகள்

டாடா நானோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.zigwheels.com

Most Read Articles
English summary
Next generation of the Tata Nano codenamed as 'Pelican', was spotted testing once again under heavy camouflage near the city of Pune. Spy Pics of this vehicle tested near Pune was released recently. Pelican could also very well be the Nano, which will have that elusive diesel engine. Centre mounted speedometer sits in its rightful place behind its steering wheel. To know more, check here...
Story first published: Tuesday, July 12, 2016, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X