டாடா மோட்டார்ஸ் நடத்தும் கார்களுக்கான மெகா சர்வீஸ் முகாம் துவங்கியது

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தேசிய அளவிலான மெகா சர்வீஸ் கேம்ப் ஒன்று 8 மார்ச் 2016 (இன்று) துவங்கியது.

இன்று துவங்கிய இந்த மெகா சர்வீஸ் கேம்ப், மார்ச் 14, 2016 வரை நடைபெற உள்ளது. இந்த மெகா சர்வீஸ் கேம்ப் ஆனது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தும் 4-வது பதிப்பு ஆகும்.

இந்த முழுமையான வாகன சோதனைகளுக்கான மெகா சர்வீஸ், அனைத்து டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சேவை மையங்களில் நடத்தபடுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முழுமையான இலவச வாகன சோதனை நடத்துவதோடு, கார்களின் எக்ஸ்டீரியர்களுக்கு இலவச வாஷிங் செய்து தரப்படுகிறது.

மார்ச் 8 ஆகிய இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களுக்காகவும், ஆர்எஸ்ஏ எனப்படும் ரோட் சைட் அசிஸ்டன்ஸ் பாலிசியில் 20% தள்ளுபடி வழங்கபடுகிறது.

tata-motors-nationwide-mega-service-camp-held-8th-march-14th-march-2016

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆயில் மற்றும் லூப்ரிகண்ட்ஸ் மற்றும் வேல்யூ ஆட்டட் சர்வீஸ் எனப்படும் மதிப்பு கூட்டபட்ட சேவைகள் மீது 10% தள்ளுபடி வழங்கபடுகிறது. இதோடு மட்டுமல்லாமல், டாடா மோட்டார்ஸ் ஒரிஜினல் உதிரி பாகங்கள் மற்றும் லேபர் கட்டணங்களில், 20% தள்ளுபடி வழங்கபடுகிறது.

மேலும், வேல்யூ கேர் (கோல்ட் ஏஎம்சி-வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம்) பேக்கேஜ் மீது 699 ரூபாயும், புதிய பேட்டரிகள் மீது 1000 ரூபாய் தள்ளுபடியும் வழங்கபடுகிறது.

English summary
Tata Motors conducts Nationwide 'Mega Service Camp', which starts from today (March 8th) and happens till 14th March. This is 4th edition of their nationwide 'Mega Service Camp' conducted by Tata Motors. Free comprehensive vehicle check-up camp is organized across all Tata Motors dealerships and authorized service centers across India. Also there are many offers and discounts.
Story first published: Tuesday, March 8, 2016, 12:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark