ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டன்... டாடா மோட்டார்ஸை பாதிக்குமா?

By Meena

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுதொடர்பாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என பிரசாரம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டாடா மோட்டார்ஸ்

கேமரூனுக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பிய யூனியனையும் பிரிட்டனையும் நம்பி வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்....

அதேபோன்றதொரு நிலையைத்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எதிர்கொள்ளும் சூழலில் உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஜாக்குவார் லேண்ட் ரோவரின் துணை நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது.

அப்படி இருக்கும் நிலையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்திருப்பதால், அதன் வர்த்தக் கொள்கைகள் நிச்சயமாக மாற்றம் பெறும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழோ அல்லது உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழோ பிரிட்டன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதார நிலையோ, வர்த்தச் சூழலோ தாற்காலிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது.

அதன் அடிப்படையில் பார்த்தால், ஜாக்குவார் லேண்ட் ரோவரின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து அந்நிறுவனத்துக்கு இறக்குமதியாகும் பொருள்கள் ஆகியவை தற்போதைக்கு தடைபடலாம்.

அந்தத் தாக்கமானது டாடா மோட்டார்ஸின் வர்த்தகத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

பொருளாதார மாற்றங்களால் அந்நிறுவனத்தின் கார்கள் ஒன்று விலையேற்றம் அடையலாம். அல்லது பிரிட்டனின் செலாவணியான பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மதிப்பு குறைந்து விலை வீழ்ச்சியடையலாம். எது எப்படியாயினும் அந்த விளைவுகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தையும் பாதிக்கும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Tata Motors Owned JLR Could Face Brexit Impact.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X