டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விலைகள் விரைவில் உயரும்

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் கார்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வப்போது தங்கள் தயாரிப்புகளில் விலைகளை உயர்த்துவது வழக்கம். அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தங்கள் கார்களின் விலைகளை பண்டிகை காலங்களின் போது உயர்த்த உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்யும் விலைஏற்றம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ட்ரென்ட்;

ட்ரென்ட்;

விலைஏற்ற நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் மேற்கொள்ளவில்லை. ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், ஹூண்டாய் நிறுவனம் மற்றும் மாருதி சுஸுகி உள்ளிட்ட ஏராளமான கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலைகளை உயர்த்திவிட்டனர் அல்லது உயர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்அதிகாரி கருத்து;

உயர்அதிகாரி கருத்து;

இந்த விலையேற்றம் குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர்அதிகாரி மயான்க் பரீக் பல்வேறு முக்கிய தகவல்களை அளித்தார். "இந்த விலை உயர்வானது, அதிகரிக்கும் உள்ளீட்டு செலவுகளால் மேற்கொள்ளப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக தங்களின் கார்களின் விலைகளை உயர்த்தவில்லை. இந்த விலை உயர்வு, பண்டிகை காலங்களின் போது அமலுக்கு வரலாம்" என மயான்க் பரீக் தெரிவித்தார்.

ஏராளமான தேர்வுகள்;

ஏராளமான தேர்வுகள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு விதமான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஏறக்குறைய அனைத்து செக்மென்ட்டிலும் விதவிதமான தேர்வுகளை வழங்குகின்றனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நுழைவு நிலை வாகனமான நானோ முதல் யூட்டிலிட்டி வாகனமான ஆரியா வரை பல்வேறு வாகனங்களை அளிக்கிறது.

கார்களின் விலைகள்;

கார்களின் விலைகள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் கார்கள், 2.15 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்து 16.3 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரையிலான விலை வரையில் விற்கப்படுகிறது.

மஹிந்திரா;

மஹிந்திரா;

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் சில பாசஞ்சர் கார்கள் மற்றும் சிறிய கார்களின் விலைகளை 1% சதவிகிதம் உயர்த்தியுள்ளனர். இந்த விலை இந்த அக்டோபர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

ஹூண்டாய்;

ஹூண்டாய்;

ஹூண்டாய் நிறுவனமும், தங்கள் கார்களின் விலைகளை சமீபத்தில் தான் உயர்த்தியது. இந்த விலையேற்றம் ஆகஸ்ட் 2016 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தங்கள் போர்ட்ஃபோலியோ உள்ள கார்களின் விலைகளை சுமார் 20,000 ரூபாய் உயர்த்தினர்.

மாருதி சுஸுகி;

மாருதி சுஸுகி;

மாருதி சுஸுகி நிறுவனமும் தங்களின் பல்வேறு மாடல்களின் விலைகளை, 20,000 ரூபாய் வரை உயர்த்தி இருந்தனர்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

மல்லையா போலவே மதிப்பிழந்த அவரது சொகுசு கார்கள்... அடிமாட்டு விலைக்கு விற்பனை!

லம்போகினி ஹுராகேன் காரை ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதிய எம்எல்ஏ மனைவி...

மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்... வெளிநாட்டு ரயில் நிறுவனங்களுக்கு அழைப்பு!

English summary
Tata Motors is planning to increase prices of its passenger vehicles during festival season. This is mainly to offset its rising input cost. Earlier, Mahindra & Mahindra, Hyundai and Maruti Suzuki increasing prices due to raise in input cost. This new prices might be implemented from the festive season. Tata Motors has wide range of vehicles from entry level Nano to utility vehicle Aria. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark