ஸீக்கா வைரஸ் கொடுத்த அதிர்ச்சி: டாடா ஸீக்கா காரின் பெயர் மாற்றம்

By Ravichandran

டாடா ஸீக்கா காரின் பெயர் 'டியாகோ' என மாற்றப்பட்டிருக்கிறது.

பெயர் மாற்றம் குறித்தும், இந்த டாடா 'டியாகோ' குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

ஸீக்கா;

ஸீக்கா;

டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முதலாக, டாடா கைட் என்று குறியீட்டுப் பெயரில் அழைத்தது.

அதன் பின் முறைப்படி ஸீக்கா என்று பெயர் சூட்டியது.

பெயர் மாற்றம்?

பெயர் மாற்றம்?

இந்த மாடலுக்கு முறைப்படி டாடா ஸீக்கா என்று பெயர் சூட்டி இருந்தாலும், சமீப காலமாக ஸீக்கா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கியது.

தாமதமான அறிமுகம்!

தாமதமான அறிமுகம்!

டாடா ஸீக்கா முன்னதாக, ஜனவரி 2016-ல் அறிமுகம் செய்யபடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், ஸீக்கா வைரஸ் உலகம் பல்வேறு பகுதிகளில் பரவி பீதியை கிளப்பி வந்ததால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த ஹேட்பேக் மாடலின் பெயரை மாற்ற திட்டமிட்டது.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்த டாடா நிறுவனம், டியாகோ, சிவெட் மற்றும் அடோர் ஆகிய மூன்று பெயர்களை மக்கள் மத்தியில் வழங்கி, அதிலிருந்து அதிக வாக்குகள் பெரும் பெயரையே இந்த ஹேட்ச்பேக் காருக்கு பெயராக சூட்டலாம் என முடிவு செய்தது.

அந்த வகையில், டியாகோ என்ற பெயருக்கே அதிகப்படியான வாக்குகள் கிடைத்ததால், இறுதியாக இந்த ஹேட்ச்பேக் காருக்கு டாடா டியாகோ என்ற பெயர் சூட்டபட்டுள்ளது.

எழுச்சி இல்லாத விற்பனை;

எழுச்சி இல்லாத விற்பனை;

சமீப காலமாக, டாடா மோட்டார்ஸ் மூலம் உருவாக்கபட்ட டாடா போல்ட், டாடா செஸ்ட் மற்றும் டாடா ஜென் எக்ஸ் நேனோ ஆகிய மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

இதையடுத்து தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டியாகா என்று பெயர் மாற்றம் செய்யபட்டுள்ள இந்த மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டனர். டாடா டியாகா, இந்த நிறுவனத்தின் கார் விற்பனை அதிகபடுத்தும் என டாடா நிறுவனம் பெரிய வகையில் எதிர்பார்க்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.05 டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகள் கொண்டுள்ளதாக இருக்கும்.

டிரைவ் மோட்கள்;

டிரைவ் மோட்கள்;

இதன் செக்மண்டில் முதல் முறையாக, டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் 2 இஞ்ஜின்களும், சிட்டி மற்றும் எக்கோ என மல்டி டிரைவ் மோட்களுடன் வருகிறது.

எக்கோ மோட் மூலம், அதிகப்படியான மைலேஜ் கிடைக்கிறது. சிட்டி மோட்டில், பவர் கூடிய பெர்பார்மன்ஸ் மற்றும் மைலேஜ் கிடைக்கிறது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டிசைன், இளைய தலைமுறையினரை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த டாடா டியாகோ ஹேட்ச்பேக் மூலம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறிய கார் செக்மண்ட்டில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், இந்த ஆண்டின் மார்ச் மாத இறுதியில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி?

போட்டி?

டாடா டியாகோ ஹேட்ச்பேக், மாருதி சுஸுகி செலெரியோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், சுமார் 4 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டாடா ஸீக்கா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட்' பிரச்சாரம் மூலம் டாடா ஸீக்கா பெயர் வெளியீடு

டாடா கைட் காரின் புதிய நாமகரணம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Tata Motors has again renamed its latest Hatchback Zica, as Tiago. Tata Motors conducted a poll with the choices of names between Tiago, Civet and Adore. Finally, the name Tiago got more votes. This renaming was again done because, the name of the Virus-Zika virus, which killed many people and their car model Zica was sounding similar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X