டாடா நானோ பெலிக்கன் காரின் ஸ்பை படங்கள் வெளியிடப்பட்டது

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா நானோ பெலிக்கன் காரின் ஸ்பை படங்கள் வெளியிடப்பட்டது.

டாடா நானோ பெலிக்கன் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா நானோ பெலிக்கன்..

டாடா நானோ பெலிக்கன்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை குறைந்த கார்களை வழங்கி மாபெரும் புரட்சி செய்தது.

அந்த வகையில், டாடா நிறுவனம் வழங்கும் அடுத்த விலை குறைந்த வேரியன்ட் தயாராகி வருகிறது. இது டாடா நானோ பெலிக்கன் என்ற குறியீட்டு பெயர் (கோட் நேம்) உடன் அழைக்கப்படுகிறது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஆட்டோகார் இந்தியா இதழ் வெளியிட்ட செய்தி படி, டாடா நானோ பெலிக்கன் காரின் சோதனை ஓட்டம் பூனே அருகே மேற்கொள்ளப்பட்டது.

டாடா நானோ பெலிக்கன் கார் முழுவதும் உருமறைக்கப்பட்ட நிலையில், அதன் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது. அப்போது, எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

டாடா நானோ பெலிக்கன், தற்போது விற்பனையில் உள்ள நானோ ஜென் எக்ஸ் மாடலில் உள்ளது போன்றே, ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் கொண்டுள்ளது.

எனினும், டாடா நானோ பெலிக்கன் காரின் முன் முனை, குறிப்பாக ஃபிரண்ட் போனட் மற்றும் ஹெட்லைட்கள், நானோ யுரோப்பா கான்செப்டை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

சோதனை ஓட்டம் செய்யப்பட்ட டாடா நானோ பெலிக்கன், 12 இஞ்ச் வீல்களுக்கு பதிலாக, 13 இஞ்ச் வீல்கள் கொண்டிருந்தது.

இதன் பின் பகுதியில், ரியர் ஃபென்டர் பகுதியில் உள்ள ஃப்யூவல் ஃபில்லர் கேப்-பினால், ஃப்யூவல் இன்லெட் இருப்பது தனியாக தெரிகிறது.

உட்புற மாற்றங்கள்;

உட்புற மாற்றங்கள்;

டாடா நானோ பெலிக்கன் காரின் உட்புறத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நன்கு அடையாளம் காணக்கூடியவையாக உள்ளன.

இதற்கு முன், ஸ்பீடோமீட்டர் காரின் செண்டர் பகுதியின் மேல் பக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது ஸ்டீயரிங்-கின் பின் பகுதியிலேயே ஸ்பீடோமீட்டர் பொருத்தபட்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கில் பொருத்தபட்ட அதே ஹர்மான் ஆடியோ சிஸ்டம் தான், இந்த டாடா நானோ பெலிக்கன் காரின் சென்டர் கன்சோல் பகுதியில் பொருத்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா நானோ பெலிக்கன் காருக்கு, அதிக கொள்ளளவு உடைய இஞ்ஜின் பொருத்தபட்டிருக்கும்.

அப்போது தான், ரெனோ க்விட் மற்றும் மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஆகிய மாடல்களுடன் திறன்பட போட்டியை எதிர்கொள்ள முடியும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா நானோ கார் வாங்கிய நடிகை ஹேமா மாலினி!

டாடா நானோ கார் தொடர்புடைய செய்திகள்

நானோ கார் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pics Credit ; www.autocarindia.com

English summary
Tata Motors is developing the next variant of India's least expensive car - the Tata Nano. According to Autocar India, new variant named Tata Nano Pelican was spotted Testing near Pune. Spy Pics of this new car, which was spotted under extensive camouflage on the road was released. Tata Nano Pelican features the same Harman infotainment system found in Tiago..

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more