லியோனல் மெஸ்ஸிக்கு தண்டனை - கலக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

Written By:

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்த அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், சில மாதங்களுக்குள் அவர் தனது ஓய்வை அறிவித்தார்.

அப்படி இருந்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பெரிய அளவில் கவலை கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் லியோனல் மெஸ்ஸி, வரி ஏய்ப்பு செய்த புகாரில் சிக்கி, அவருக்கு தண்டனையும் அறிவிக்கபட்டுள்ளது. இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சற்று கலக்கத்தில் உள்ளது.

tata-motors-worried-about-lionel-messi-tax-conviction-in-spain

எனினும், "இது குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை, நாங்கள் எதுவும் கூறுவதற்கில்லை" டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில், லியோனல் மெஸ்ஸி அவருடைய தந்தையான ஜார்ஜ் (Jorge) உடன் இணைந்து, 4.1 மில்லியன் யூரோ அளவிற்கு வரி ஏய்ப்பு செய்த புகாரில் சிக்கினர். இதில், இருவருக்கும் 21 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த இந்த தண்டனையினால், தங்கள் பிரான்ட் வேல்யூ-வுக்கு (மதிப்பு) ஏற்படும் பரிணாமத்தை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்து வருகிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சட்ட குழு, மெஸ்ஸிக்கு கிடைத்த இந்த தண்டனை குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், லியோனல் மெஸ்ஸியின் மேனேஜர் உடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டு சட்டப்படி, லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த இந்த தண்டனைக்கு, சிறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், தங்கள் இமேஜுக்கு எந்த விதமான களங்கமும் இல்லாமல் இருந்தால் நல்லது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நினைக்கிறது. எனினும், லியோனல் மெஸ்ஸி, புரொபேஷன் எனப்படும் கண்காணிப்பில் இருப்பார் என தெரிகிறது. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி, முதல் முறை அஹிம்சை குற்றத்திற்கு (first-time non-violent crime) 2 வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்றிருந்தால், சிறை செல்லாமல் புரொபேஷனிலேயே வைக்கப்படும் நடைமுறை உள்ளது.

லியோனல் மெஸ்ஸியை மிக அதிகமான அளவில் பணம் கொடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் பிரான்ட் அம்பாஸிடராக நியமித்தது. இந்நிலையில், லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளை புரமோட் செய்து கொண்டிருப்பார். முதன் முதலாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா டியாகோ ஹேட்ச்பேக் அறிமுகம் செய்யப்படும் போது, லியோனல் மெஸ்ஸி பிரான்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டார்.

English summary
Tata Motors made roped in Footballer Lionel Messi to promote their company's products. Soon, Messi retired. Now, since Messi's tax conviction came into light, Tata Motors seems worried. Messi, with his father Jorge were convicted of evading taxes amounting to 4.1 million Euros and was sentenced to 21 months imprisonment. By this, Tata Motors is worried now. To know more, check here...
Story first published: Friday, July 8, 2016, 16:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark