எலக்ட்ரிக் டாடா நானோ காரின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் எலக்ட்ரிக் டாடா நானோ காரின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

எலக்ட்ரிக் டாடா நானோ கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா நானோ தான், இந்தியாவிலேயே மிகவும் விலை குறைந்த காராக உள்ளது.

இப்போது, இந்த விலை குறைந்த காரின் வித்தியாசமான வேரியன்ட், லேசான உருமறைப்புடன் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் டாடா நானோ...

எலக்ட்ரிக் டாடா நானோ...

ஸ்பை படங்கள் வெளியிடபட்டுள்ள டாடா நானோ, இன்டர்னல் கம்பஸ்ட்ஷன் இஞ்ஜின் உபயோகிக்கும் டீசல் வேரியன்ட் அல்ல.

இது எலக்ட்ரிக் டாடா நானோ கார் மாடல் ஆகும்.

எலக்ட்ரிக் சாக்கெட்;

எலக்ட்ரிக் சாக்கெட்;

ஸ்பை படங்கள் வெளியாகிய இந்த டாடா நானோ, எலக்ட்ரிக் மாடல் தான் என்பதை உறுதி செய்யும் வகையில், இதன் இடது புறத்தில் உள்ள ரியர் ஃபெண்டர் பகுதியில், ஒரு எலக்ட்ரிக் சாக்கெட் காணப்படுகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

எலக்ட்ரிக் டாடா நானோ மாடலில், இதன் சஸ்பென்ஷன் எவ்வளவு என்பது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயமாக உள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் டாடா நானோ மாடலை காட்டிலும், எலக்ட்ரிக் டாடா நானோ மாடலில், வீல் ஆர்ச் மற்றும் டயர்களுக்கு இடையே உள்ள இடைவெளி, மிகவும் குறுகியதாக உள்ளது.

குறுகிய இடைவெளிக்கான காரணம்;

குறுகிய இடைவெளிக்கான காரணம்;

எலக்ட்ரிக் டாடா நானோ மாடலில், பேட்டரி பேக் பொருத்தபட்டுள்ளதாலும், அது குறுப்பிடத்தக்க வகையில் காரின் எடையை கூட்டிவிடும் என்பதாலும், வீல் ஆர்ச் மற்றும் டயர்களுக்கு இடையே உள்ள இடைவெளி, மிகவும் குறுகியதாக உள்ளதாக கூறப்படுகிறது.

இஞ்ஜின், அறிமுகம்;

இஞ்ஜின், அறிமுகம்;

எலக்ட்ரிக் டாடா நானோ மாடலின் இஞ்ஜின் பற்றி, தற்போதே விவாதிப்பதோ அல்லது யூகிப்பதோ அவசரப்படுவதாக கூட இருக்கலாம்.

ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலக்ட்ரிக் டாடா நானோவை விரைவில் அறிமுகம் செய்தாலும் அது ஆச்சர்யமான விஷயம் அல்ல. இதற்கு காரணம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2010 ஜெனீவா மோட்டார் ஷோவிலேயே டாடா நானோ மாடலின் ஒரு எலக்ட்ரிக் வேரியன்ட்டை காட்சிபடுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

Spy Pictures Credit ; www.rushlane.com

Most Read Articles

Tamil
English summary
Tata Motors is very famous for launching least priced Car in Automobile market. Now, Tata Motors is making Electric variant of Tata Nano. Spy Pics of Tata Nano Electric caught, while testing on Roads was released recently. This Electric Nano has an electric socket on its left rear fender. Gap between wheel arch and tyre is lot narrower in Electric Nano. To know more, check here...
Story first published: Wednesday, June 15, 2016, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more