டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும், இந்த டாடா நெக்ஸன், புதிய உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டு சோதிக்கப்படுகிறது.

இந்த முறை, டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களுடன் காணப்பட்டது.

டாடா நெக்ஸன்;

டாடா நெக்ஸன்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா நெக்ஸன், முதன் முதலாக 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

அதன் பின்னர், உற்பத்திக்கு மிக நெருக்கமான மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, மாடுலார் எக்ஸ்ஓ பிளாட்ஃபார்ம் எனப்படும் பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாட்ஃபார்ம் தான், டாடா டியாகோ ஹேட்ச்பேக் தயாரிக்க ஸ்டாண்டர்ட் பிளாட்ஃபார்மாக பயன்படுத்தப்படுகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, தேர்வு முறையிலான பெட்ரோல் இஞ்ஜின் அல்லது டீசல் இஞ்ஜினுடன் வழங்கப்படும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, மேனுவல் மற்றும் தேர்வு முறையிலான ஏஎம்டி சிஸ்டம் கொண்ட டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

டாடா நெக்ஸன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவியில் செக்மன்ட்டில் போட்டி போட உள்ளது.

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி3OO மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஆகிய மாடல்களுடன் கடுமையாக போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் 6 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, என்பது குறித்த அதிகார்பபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சிறந்த தேர்வு;

சிறந்த தேர்வு;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் உருவாக்கத்தில் 2014-ஆம் ஆண்டில் இருந்து ஈடுபட்டு வருகிறது.

தற்போதைய நிலையில், காம்பேக்ட் எஸ்யூவி செக்மன்ட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் எதுவும் இல்லை.

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த குறையை தீர்ப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்?

நெக்ஸன் தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.rushlane.com

English summary
Spy Pics of Tata Nexon Compact SUV made by Tata Motors, is released once again. This time, Nexon was spied with projector headlamps. Nexon is based on modular XO platform, which is standard platform used by Tiago. Tata Motors does not have any model in compact SUV category. Launch of Tata Nexon is believed to fill this gap. To know more, check here...
Story first published: Saturday, June 11, 2016, 13:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark