டாடா மோட்டார்ஸ் வழங்கிய டி1 பிரைமா டிரக் ரேசிங் சாம்பியன்ஷிப் 2016 நிறைவு

Written By:

டாடா மோட்டார்ஸ் வழங்கிய டி1 பிரைமா டிரக் ரேசிங் சாம்பியன்ஷிப் 2016, வெற்றிகரமாக நிறைவேறியது.

tata-t1-prima-truck-racing-championship-2016-final-results-released

இதன் இறுதி சுற்று சில தினங்களுக்கு முன்னதாக முடிவடைந்தது. இதில் முதல் முறையாக ஜகத் சிங், நாகார்ஹுனா ஏ என்ற இரு இந்தியர்கள் சூப்பர் கிளாஸ் பிரிவில் (கேட்டகரி) வெற்றி பெற்றுள்ளனர். ப்ரோ கிளாஸ் பிரிவில் டாடா டெக்னாலஜீஸ் டீமின் டேவிட் ஜென்கின்ஸ் வெற்றி பெற்றார்.

இது டாடா டி1 பிரைமா டிரக் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் 3-ஆம் பதிப்பு ஆகும். இருப்பினும், இந்த போட்டியில், இந்த முறை தான், முதன் முதலாக இந்திய டிரைவர்கள் பங்கேற்றனர். இந்திய டிரைவர்கள் தனி கிளாஸ் மற்றும் சர்வதேச டிரைவர்கள் மற்றொரு கிளாஸ் என இரு பிரிவிகளில் ரேசிங் செய்தனர்.

டீம் கேஸ்ட்ரால் வெக்டான் என்ற குழுவை சேர்ந்த மேட் சம்மர்ஃபீல்ட், ப்ரோ க்ளாஸ் பிரிவில் நடைபெற்ற முதல் 8-லேப் (சுற்று) ரேஸ், பிரிவில் வெற்றி பெற்றார். இந்த போட்டி டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள 3.1 கிலோமீட்டர் அளவு கொண்ட புத் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்றது. இங்கு, 1:50:691 நொடிகள் என்ற மிக வேகமான சுற்றுக்கான சாதனையை மேட் சம்மர்ஃபீல்ட் படைத்தார்.

12 இந்திய டிரைவர்களும் ஒரு மாதிரியாக தோன்றும் பிளாக் ரேஸ் டிரக்குகளில் போட்டியிட்டனர். சர்வதேச டிரைவர்களும் அதே அளவிலான பவர் கொண்ட டிரக்குகளில் போட்டியிட்டனர். ஆனால், அவை வேறு வண்ணங்களில் இருந்தது.

இறுதி முடிவுகள்;

இந்திய டிரைவர்கள் ரேஸ் - 1 (சுப்பர் கிளாஸ்)

(1) ஜகத் சிங்

(2) மல்கீத் சிங்

(3) ராஜ்குமார் மஹதோ

இந்திய டிரைவர்கள் ரேஸ் - 2 (சுப்பர் கிளாஸ்)

(1) நாகார்ஜுனா . ஏ

(2) பாக் சந்த்

(3) ஆனந்த்

இண்டர்நேஷனல் டிரைவர்ஸ் ரேஸ் - 1 (ப்ரோ கிளாஸ்);

(1) மேட் சம்மர்ஃபீல்ட்

(2) கிரஹாம் பவல்

(3) ரிக் காலெட்

இண்டர்நேஷனல் டிரைவர்ஸ் ரேஸ் - 2 (ப்ரோ கிளாஸ்);

(1) டேவிட் ஜென்கின்ஸ்

(2) ரிக் காலெட்

(3) கிரஹாம் பவல்

Story first published: Thursday, March 24, 2016, 16:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 
X