டாடா டியாகோ ஹேட்ச்பேக் - மைலேஜ் ரிவியூ மற்றும் விவரக்குறிப்புகள் - முழு விவரம்

By Ravichandran

டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார் சில தினங்களுக்கும் முன்பு தான் அறிமுகம் செய்யபட்டது.

சிறிய கார்களின் செக்மண்ட்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா டியாகோ அறிமுகத்திற்கு முன்பில் இருந்தும், அறிமுத்திற்கு பிறகும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டாடா டியாகோ, டாடா மோட்டார்ஸின் பிரத்யேக வடிவமைப்பு உத்தியின் அணுகுமுறையால் மிகவும் புகழ் பெற்றுள்ளது.

டாடா டியாகோ டிசைன் விஷயத்தில் மட்டும் தான் சிறப்பாக உள்ளதா அல்லது தோற்றங்களை தாண்டி வேறு விஷயங்களிலும் அசத்துகிறதா?

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் விவரக் குறிப்புகள் மற்றும் மிக முக்கியமான விஷயமான மைலேஜ் உள்ளிட்டவற்றின் விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடலில் ரெவோட்ரோன் இஞ்ஜினும், டீசல் மாடலில் ரெவோடார்க் இஞ்ஜினும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரு இஞ்ஜின்களும், பிரத்யேகமாக டியாகோ ஹேட்ச்பேக்கிற்காக உருவாக்கப்பட்டவையாகும்.

ரெவோட்ரோன் இஞ்ஜின் பிரயோகம்;

ரெவோட்ரோன் இஞ்ஜின் பிரயோகம்;

முன்னதாக, ரெவோட்ரோன் இஞ்ஜின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் போல்ட் மாடலில் தான் பிரயோகிக்கபட்டது.

ஆராய் அமைப்பின் ஒப்புதல் படி, டாடா போல்ட் மாடல், ஒரு லிட்டருக்கு 17.57 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கியது. டாடா போல்ட் சற்றே எடை கூடிய மாடல் ஆகும்.

டியாகோவில் ரெவோட்ரோன் இஞ்ஜின்;

டியாகோவில் ரெவோட்ரோன் இஞ்ஜின்;

இப்படி இருக்கையில், போல்ட் மாடலில் உபயோகிக்கபட்ட அதே ரெவோட்ரோன் இஞ்ஜின் தான், டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடலிலும் பயன்படுத்தபடுகிறது.

டாடா போல்ட் மாடலை ஒப்பிடுகையில், டியாகோ ஹேட்ச்பேக் எடை குறைவானதாகும். இதனால், இது அதிக மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ் திறன் - பெட்ரோல் மாடல்;

மைலேஜ் திறன் - பெட்ரோல் மாடல்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெரோல் மாடலில் 3 - சிலிண்டர்கள், மல்டி டிரைவ் கொண்ட எம்பிஎஃப்ஐ உடனான 1.2 லிட்டர் ரெவோட்ரோன் இஞ்ஜின் உபயோகிக்கபடுகிறது.

இந்த இஞ்ஜின் 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த ரெவோட்ரோன் இஞ்ஜின் ஒரு லிட்டருக்கு 23. 84 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ் திறன் - டீசல் மாடல்;

மைலேஜ் திறன் - டீசல் மாடல்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டீசல் மாடலில் 3 - சிலிண்டர்கள், மல்டி டிரைவ் கொண்ட 1.05 லிட்டர் ரெவோடார்க் இஞ்ஜின் பிரயோகிக்கபடுகிறது.

இந்த இஞ்ஜின் 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த ரெவோடார்க் இஞ்ஜின் ஒரு லிட்டருக்கு 27.28 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

குறைந்தபட்ச மைலேஜ் உத்திரவாதம்;

குறைந்தபட்ச மைலேஜ் உத்திரவாதம்;

ஒட்டும் நிலபரப்புகள் மற்றும் நகரங்களில் உள்ள சாலைகளை பொருத்து, டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் இஞ்ஜின், குறைந்தபட்சம் ஒரு லிட்டருக்கு 18-19 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும்.

அதே போல், ஒட்டும் நிலபரப்புகள் மற்றும் நகரங்களில் உள்ள சாலைகளை பொருத்து, டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் இஞ்ஜின் குறைந்தபட்சம் ஒரு லிட்டருக்கு 21-22 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

விவரக் குறிப்புகள் கண்ணோட்டம் : டாடா டியாகோ

விவரக் குறிப்புகள் கண்ணோட்டம் : டாடா டியாகோ

  1. ரெவோட்ரோன் 1.2 லிட்டர் இஞ்ஜின் (பெட்ரோல்)
  2. வகை - ரெவோட்ரோன், 3 - சிலிண்டர்கள், மல்டி டிரைவ் கொண்ட எம்பிஎஃப்ஐ
  3. கனசதுர கொள்ளளவு (கியூபிக் கெப்பாசிட்டி) - 1199 சிசி
  4. அதிகப்படியான பவர் - 6000 ஆர்பிஎம்களில் 84 பிஹெச்பி
  5. அதிகப்படியான டார்க் - 3500 ஆர்பிஎம்களில் 114 என்எம்
  6. ஃப்யூவல் டேங்க் கொள்ளளவு - 35 லிட்டர்
விவரக் குறிப்புகள் கண்ணோட்டம் : டாடா டியாகோ

விவரக் குறிப்புகள் கண்ணோட்டம் : டாடா டியாகோ

ரெவோடார்க் 1.05 லிட்டர் இஞ்ஜின் (டீசல்)

வகை - ரெவோடார்க், 3 - சிலிண்டர்கள், மல்டி டிரைவ்

கனசதுர கொள்ளளவு (கியூபிக் கெப்பாசிட்டி) - 1047 சிசி

அதிகப்படியான பவர் - 4000 ஆர்பிஎம்களில் 69 பிஹெச்பி

அதிகப்படியான டார்க் - 1800-3000 ஆர்பிஎம்களில் 140 என்எம்

ஃப்யூவல் டேங்க் கொள்ளளவு - 35 லிட்டர்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான் முன் சக்கரங்களுக்கு பவர் கடத்தபடுகிறது.

டிரைவ் மோட்கள்;

டிரைவ் மோட்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், இகோ மற்றும் சிட்டி என்ற இரு வகையிலான டிரைவ் மோட்கள் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஏப்ரல் 6-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது. அன்று முதல், இந்தியாவில் உள்ள அனைத்து டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஹூண்டாய் ஐ10 கிராண்ட், ஃபோர்டு ஃபிகோ மற்றும் மாருதி சுஸுகி செலெரியோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி உள்ளது.

விலை;

விலை;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் அடிப்படை பெட்ரோல் வேரியண்ட், 3,20,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், டீசல் வேரியண்ட் 3,94,500 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டாடா டியாகோ ஹேட்ச்பேக் - அனுகூலங்களும், குறைபாடுகளும்: விரிவான தகவல்கள்

டியாகோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Tata Motors recently launched their Tata Tiago Hatchback in Indian Automobile Market. Tata Tiago base Variant is sold at price of 3,20,000 Rupees (Ex-Showroom Delhi). Tata Tiago has been attracting Customers in its Design aspects. It has other plus points also. To know more about the Mileage and Specifications of Tiago Hatchback, check here...
Story first published: Saturday, April 9, 2016, 18:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X