சென்னையின் முதல் 100 டாடா டியாகோ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி

Written By:

சென்னையின் முதல் 100 டாடா டியாகோ வாடிக்கையாளர்களுக்காக, பிரத்யேக கொண்டாட்ட நிகழ்ச்சிச்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டியாகோ என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக்கை ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஒரு மாதத்திற்குள் சென்னையில் மட்டும் 100 டியாகோ ஹேட்ச்பேக்குகளை வெற்றிகரமாக விற்றுள்ளது.

tata-tiago-first-100-chennai-customers-special-celebration-event-held

இதற்காக, சென்னையில் முதல் 100 டாடா டியாகோ வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரத்யேக கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டது.

ஆச்சர்யமூட்டும் வகையில், சென்னையில் விற்கபட்ட முதல் 100 டாடா டியாகோவில், 86 கார்கள் பெட்ரோல் மாடலாகவும், 14 கார்கள் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்ட மாடல்களாகவும் உள்ளது. அதிலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள், பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்ட டாப்-என்ட் வேரியன்ட்டை தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில், பழையபடி மக்கள் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்ட கார்களை வாங்கும் வழக்கம் அதிகரிப்பதையே இது உணர்த்துகிறது.

tata-tiago-first-100-chennai-customers-special-celebration-event-held-recently

இது வரை, டியாகோ ஹேட்ச்பேக் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சுமார் 1,00,000 விசாரணைகளை பெற்றுள்ளது. அவற்றில், 15,000 விசாரணைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புக்கிங்களாக மாற்றியுள்ளது. டாடா டியாகோ ஹேட்ச்பேக், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மற்றும் வருங்கால நோக்குடைய டிசைன் சித்தாந்தத்தை எடுத்து காட்டுகிறது. இது, இந்தியாவில் உள்ள இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களை தேர்வு செய்தது. இவர்களுக்கு, டியாகோ பிராண்டின் அம்பாஸிடராக உள்ள லியோனல் மெஸ்ஸியை நேரில் காணும் வாய்ப்பு வழங்கபட்டது. இந்த 11 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களும், கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸியை நேரில் சந்திப்பதற்காக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு அழைத்து செல்லபட்டனர்.

tata-tiago-first-100-chennai-customers-special-celebration-organized

English summary
Tata Motors held a special Celebration event for their first 100 Chennai Customers of Tata Tiago Hatchback. Out of the 100 Tiagos sold, 86 models were fitted with Petrol Engine, while remaining 14 models were diesel-powered hatchbacks. Tata Motors received over 1,00,000 lakh inquiries for Tiago model. From that, 15,000 inquiries were converted into bookings across India...
Story first published: Tuesday, May 31, 2016, 15:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more