டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார் மார்ச் 28-ஆம் தேதி அறிமுகம்

By Ravichandran

டாடா டியாகோ ஹேட்ச்பேக் மாடல், இந்த மாதம் 28-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.

விரைவில் அறிமுகம் செய்யபட உள்ள டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

டியாகோ பற்றி...

டியாகோ பற்றி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார், முதன்முதலாக டாடா கைட் என்று குறியீட்டுப் பெயரில் அழைக்கபட்டது.

அதன் பின்னர், இந்த மாடலுக்கு முறைப்படி டாடா ஸீக்கா என்று பெயர் சூட்டபட்டது. சமீப காலமாக ஸீக்கா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கியது. இதனால், இந்த பெயரை மாற்றி, புதிய பெயர் சூட்டபட்டது.

அறிமுகம் தாமதம்?

அறிமுகம் தாமதம்?

முன்னதாக, டாடா டியாகோ மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜனவரி 2016-ல் அறிமுகம் செய்ய உத்தேசித்து வந்தது. பிறகு, இந்த பெயர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், இதன் அறிமுகம் தாமதமாகி வந்தது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக் மாடல், 2 விதமான இஞ்ஜின் தேர்வுகள் கொண்டுள்ளது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக் மாடலின், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக் மாடலின், 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின் 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரைவ் மோட்கள்;

டிரைவ் மோட்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள், இரண்டுமே பல்வேறு டிரைவ் மோட்களுடன் வெளியாகிறது.

இதன் செக்மண்ட்டில், இந்த மாடல் தான் முதன்முறையாக பல்வேறு டிரைவ் மோட்களுடன் வெளியிடப்படுகிறது.

பாதுகாப்பு வசதிகள்;

பாதுகாப்பு வசதிகள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், முன் பகுதியில், ட்யூவல் ஏர்பேக்குகளுடன் வழங்கப்படுகிறது.

மேலும், இதன் இஞ்ஜினுக்கு கிளட்ச் லாக் போன்ற வசதிகள் வழங்கபடுகிறது. இந்த கிளட்ச் லாக் தாழ்த்தபடும் வரை, இது இஞ்ஜினை ஸ்டார்ட் செய்யவிடுவதில்லை.

பொழுதுபோக்கு அம்சம்;

பொழுதுபோக்கு அம்சம்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கில், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் நிறுவனத்தின் ஆடியோ சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

நவீன நேவிகேஷன் சிஸ்டம்;

நவீன நேவிகேஷன் சிஸ்டம்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கில், மேப்மைஇந்தியா நிறுவனம் வழங்கும் நவீன டர்ன் பை டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது.

இதன் செக்மண்ட்டில், இந்த டாடா டியாகோ ஹேட்ச்பேக் தான் முதன் முறையாக இந்த வசதியுடன் வெளியாகிறது.

இண்டிகா இவி2-வுக்கு மாற்று?

இண்டிகா இவி2-வுக்கு மாற்று?

டாடா டியாகோ ஹேட்ச்பேக், நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள இண்டிகா இவி2 மாடலுக்கு மாற்றாக விளங்க உள்ளது.

அறிமுகம்?

அறிமுகம்?

டாடா டியாகோ ஹேட்ச்பேக் மாடல், மார்ச் 28-ஆம் தேதி அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி;

போட்டி;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், மாருதி செலரியோ மற்றும் ஹூண்டாய் ஐ10 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை?

விலை?

டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார், சுமார் 4 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஸீக்கா வைரஸ் கொடுத்த அதிர்ச்சி: டாடா ஸீக்கா காரின் பெயர் மாற்றம்

புதிய டாடா ஸீக்கா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா ஸீக்கா காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Tata Motors will be launching their renamed 'Tiago' hatchback in India on March 28th. Tiago was earlier called as 'Zica', but Tata had to change its name due to Zika virus outbreak in South America. The Tiago hatchback will replace the ageing Indica eV2. Tiago is expected to come with a Price tag of around Rs. 4 lakhs (ex-showroom).
Story first published: Monday, March 7, 2016, 12:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X