டாடா டியாகோ ஹேட்ச்பேக் 20,000-ற்கும் மேற்பட்ட புக்கிங் குவித்து சாதனை

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா டியாகோ ஹேட்ச்பேக் 20,000-ற்கும் மேற்பட்ட புக்கிங் குவித்து, பட்டையை கிளப்பி வருகிறது.

டாடா நிறுவனம், தங்களின் டாடா டியாகோ ஹேட்ச்பேக்கை ஏப்ரல் 6, 2016-ல் அறிமுகம் செய்தனர். தற்போது வரை, டியாகோ ஹேட்ச்பேக்கிற்கு சுமார் 1,40,000 விசாரணைகள் குவிந்தது. அவற்றில், டாடா நிறுவனம், 20,000-ற்கும் மேற்பட்ட விசாரணைகளை புக்கிங்காக மாற்றியுள்ளது.

tata-tiago-hatchback-registered-over-20000-bookings

சமீபத்தில், வெளியாகிய தகவல்கள் படி, டாடா டியாகோ ஹேட்ச்பேக்கிற்கு அபாரமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, டாடா நிறுவனம் டியாகோவின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. டாடா டியாகோ ஹேட்ச்பேக், குஜராத்தில் உள்ள சனந்த் கார் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்டு வருகிறது. இந்த உற்பத்தி ஆலையில், டியாகோ ஹேட்ச்பேக்கின் உற்பத்தி, கூடுதலாக 2-வது ஷிஃபட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு தான், டாடா நானோ காரும் தயாரிக்கபட்டு வருகிறது.

டாடா நிறுவனம் வெளியிட்ட விற்பனை அறிக்கை படி, மொத்தம் விற்பனையாகிய கார்களில், 85% டியாகோ கார்கள் பெட்ரோல் மாடலாகவும், மீதமுள்ள 15% டியாகோ கார்கள் டீசல் மாடலாகவும் உள்ளன. டாடா நிறுவனம் இந்தியாவில் விற்கும் கார்களிலேயே, டியாகோ காருக்கு தான் அதிகப்படியான விசாரணைகள் கிடைத்துள்ளது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 மாடல்களிலுமே கிடைக்கிறது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடல், 3-சிலிண்டர்கள் உடைய 1199 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும். இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல், ஒரு லிட்டருக்கு, 23.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டீசல் மாடல், 3-சிலிண்டர்கள் உடைய 1047 சிசி டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும். இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல், ஒரு லிட்டருக்கு, 27.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

English summary
Tata Motors' newest launch, Tata Tiago hatchback has registered over 20,000 bookings from about 1,40,000 enquiries till date. Tata Tiago was launched on April 6, 2016. Tata has increased production of Tiago in Second shift also in its Sanand plant, alongside Nano. According to company statistics, 85% of Tiago sales were petrol models and 15% of sales were Diesel models...
Story first published: Wednesday, June 8, 2016, 17:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark