டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஏப்ரல் 6-ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம்

Written By:

டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஏப்ரல் 6-ஆம் தேதி அறிமுகம் செய்யபடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக, டாடா டியாகோ ட்விட்டர் ஹேண்டலில் மூலம் இந்த செய்தி வெளியிடபட்டது. கால்பந்து ஜாம்பவானான லியோனெல் மெஸ்ஸி பிராண்ட் அம்பாஸிடராக திகழும் இந்த ஹேட்ச்பேக் காரை வெரும் 10,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

முன்னதாக, இந்த டியாகோ காருக்கு ஸீக்கா என்று தான் பெயர் சூட்டபட்டிருந்தது. தென் அமெரிக்காவில் ஸீக்கா வைரஸ் என்ற பெயரிலான வைரஸ் மூலம் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதன் பெயரை மாற்ற முடிவு செய்தனர்.

tata-tiago-launch-confirmed-for-april-6th-in-india

டாடா டியாகோ ஹேட்ச்பேக் காருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் புதிய இஞ்ஜின்கள் பொருத்தபட்டுள்ளது. 3 சிலிண்டர்கள் கொண்ட 1119 சிசி பெட்ரோல் இஞ்ஜின் 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

3 சிலிண்டர்கள் கொண்ட, இதன் 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின், 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டாடா டியாகோ, 4 லட்சம் ரூபாய் முதல் 5.5 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

English summary
Tata Motors has finally decided to launch their Tata Tiago hatchback in India on April 6, 2016. This news was confirmed in a tweet sent out from the official Tata Tiago twitter handle. Tata Tiago can be booked for just Rs. 10,000. Tata Tiago might be priced in the range of Rs. 4 lakh to Rs. 5.50 lakh ex-showroom (Delhi). To know more, check here...
Story first published: Tuesday, March 29, 2016, 7:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark