டியாகோ காருக்கு 50,000 புக்கிங்... தலைகால் புரியா சந்தோஷத்தில் டாடா மோட்டார்ஸ்!

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் மத்தியில் இருந்த அவப்பெயர்களை அடித்து நொறுக்கி வருகிறது டாடா டியாகோ கார். டிசைன் அர்தபழசு, சர்வீஸ் மோசம் என்ற தேய்ந்த ரெக்கார்டு குறைகளை டியாகோ மூலமாக களைந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

ஆம், நவீன காலத்துக்கு இணையான டிசைன் அம்சங்கள், வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ கார் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. ஏன், டாடா மோட்டார்ஸ் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு முன்பதிவுகளை குவித்து இருக்கிறது டியாகோ.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ கார் இதுவரை 50,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது. தற்போது டாடா டியாகோ காரின் சில வேரியண்ட்டுகளுக்கு 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறதாம்.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

டாடா டியாகோ கார் இந்தளவு வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம், அதன் மாடர்ன் டிசைன். ஒவ்வொரு அங்கமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு கவர்கிறது.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

இந்த காரில் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 83.8 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வழங்கும். போட்டியாளர்களைவிட இது சக்திவாய்ந்த எஞ்சினாக இருப்பதால், பெட்ரோல் மாடலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

அதேபோன்று, டீசல் மாடலில் 1.05 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் இந்த எஞ்சின் எரிபொருள் சிக்கன பிரியர்களுக்கு மிகச் சிறந்த சாய்ஸாக மாறியிருக்கிறது.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் தயாராகி வருகிறது. தவிரவும், விருப்பத்திற்கேற்ப எஞ்சின் இயக்கத்தை Eco மற்றும் City ஆகிய இருவிதமான இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ளும் நுட்பமும் உண்டு. மேலும், டிஜிட்டல் ஓடோமீட்டரும் உள்ளது.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

அதாவது, டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் இந்த இரு மாடல்களும் சிறப்பான மைலேஜை தரும் என்ற நம்பிக்கையும் அமோக வரவேற்புக்கு காரணமாகியிருக்கிறது.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின், அதிக மைலேஜ் போன்றவற்றுடன் சிறப்பான வசதிகளையும் டாடா டியாகோ கார் கொண்டுள்ளது. அதற்கு முத்தாய்ப்பாக ஹார்மன் ஆடியோ சிஸ்டமும், நேவிகேஷன் சிஸ்டம் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

புக்கிங்கில் அசத்தி வரும் புதிய டாடா டியாகோ கார்!

இத்தனை வசதிகளையும் நிரம்பப்பெற்றிருக்கும் இந்த காரின் அமோக விற்பனைக்கு குறைவான விலையும் மிக முக்கிய காரணம். ஆம், டாடா டியோகா காரின் பெட்ரோல் மாடல் ரூ.3.20 லட்சம் முதல் ரூ.4.81 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.3.94 லட்சம் முதல் ரூ.5.60 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
Tata Tiago Records 50,000 Bookings — Waiting Period Up To Four Months
Story first published: Thursday, October 13, 2016, 10:48 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos