விற்பனையில் கலக்கும் புதிய டாடா டியாகோ.... ஒரே மாதத்தில் 4,024 கார்கள் விற்பனை!

Posted By: Meena

ரூ.1 லட்சத்துக்கு நானோ காரை அறிமுகப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்த டாடா நிறுவனம், கார் விற்பனையில் சத்தமில்லாமல் சில சாதனைகளை செய்து வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு டாடா நானோ கார்களின் விற்பனை ஒரே மாதத்தில் நான்காயிரத்தைத் தொட்டது. அதன் பிறகு டாடா நிறுவனத்தின் எந்த கார்களும் அத்தனை அதிகமான விற்பனையை எட்டவில்லை.

டாடா டியாகோ

தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக டாடா டியாகோ கார், கடந்த மாதம் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 4,205 டியாகோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

இதில் டாடா நிறுவனத்துக்கு ஏகப்பட்ட சந்தோஷம். டியாகோ விற்பனை எப்படிங்க? என்று கேட்டால், கபாலி ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சி... எனக் கூறுகிறார்களாம் டாடா நிர்வாகிகள்.

இந்த விற்பனை அந்நிறுவனத்துக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது எனலாம். டியாகோவின் நேர்த்தியான வடிவமைப்பு, வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களே அதன் விற்பனை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த மாடலில் உள்ள ஹைலைட்டான அம்சங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் பார்த்துவிடலாம்....

டிசைனை எடுத்துக் கொண்டால் டியாகோ மாடல் பிரீமியம் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு கிரில் டிசைன் ஆகியவை ஸ்டைலான தோற்றத்தைத் தருகிறது. இன்டீரியர் டிசைனும் இந்த மாடலில் படு கிளாஸாக உள்ளது. ஸ்டியரிங்கின் நேர்த்தியான வடிவமைப்பு, ஏசி, டேஷ்போர்டு ஆகியவற்றின் ஸ்டைலான லுக் ஆகியவை ஈர்க்கும் வகையி்ல் உள்ளன.

எஞ்சின் திறனைப் பொருத்தவரை, டாடா டியாகோவில் 1.2 லிட்டர் திறன் 3 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 84 பிஎச்பி திறன், 115 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. இதில் 5 கியர்கள் உள்ளன.

இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், 2 ஏர் பேக்-கள், சென்ட்ரல் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை டியாகோவில் உள்ளன.

டாடா டியாகோ (ஆட்டோமேடிக் கியர்) காரின் விலை ரூ.4 லட்சம் - ரூ.5.5 லட்சமாக உள்ளது (தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை).

மொத்தத்தில், ஹேட்ச்பேக் மாடல் கார்களில் புதிய வெற்றி கொடியை நாட்டுவதற்கு டியாகோ முயன்று வருவது கண்கூடாகத் தெரிகிறது.

English summary
Tata Tiago — The New Best Selling Car For Tata Motors.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark