பலேனோ, எலைட் ஐ 20-க்கு சவால் விடுக்குமா டாடாவின் புதிய ப்ரிமீயம் ஹேட்ச்பேக் கார்?

By Meena

அண்மையில் தில்லியில் சர்வதேச அளவிலான ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. அதில் டாடா நிறுவனம் தனது மூன்று கார்களை காட்சிப்படுத்தியது. ஹேட்ச்பேக் மாடலில் டியாகோ, காம்பேக்ட் செடான் மாடலில் கைட் 5, காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் நெக்ஸான் ஆகிய மூன்று கார்கள் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தன.

டாடா நிறுவன தயாரிப்பான அந்த மூன்று மாடல்களுமே அட்வான்ஸுடு மாடுலர் பிளாட்ஃபார்ம் அதாவது, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

டாடா கார்

அதே தொழில்நுட்பத்தில் மேலும் 6 புதிய கார்களை வடிவமைத்து, மார்க்கெட்டில் களமிறக்கும் நடவடிக்கைகளில் டாடா தீவிரமாக இறங்கியுள்ளது. உள்நாடு மட்டுமின்றி, சர்வதேச நாடுகளுக்கும் அந்த புதிய கார்களை ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் அவை அறிமுகமாகலாம். டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல் அவற்றில் முதலாவதாக மார்க்கெட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மாடல், தாற்காலிமாக எக்ஸ் 451 என்ற சங்கேத பெயரால் குறிப்பிடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ப்ரீமீயம் ஹேட்ச்பேக் மாடலில் மாருதி சுஜுகி நிறுவனத்தின் பலேனோ, ஹுண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 ஆகிய இரு கார்கள்தான் மார்க்கெட் லீடராக வலம் வருகின்றன.

டாடா கார்

அவை இரண்டுக்குமே கணிசமான வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் டாடாவின் எக்ஸ் 451, அந்த இரு மாடல்களுக்குப் போட்டியாக அடுத்த ஆண்டு அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

எக்ஸ் 451-இன் டிசைன் கிட்டத்தட்ட நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி மாடலைப் போலவே உள்ளது. பக்கா ஸ்போர்டிவான வடிவமைப்புடன், அதே பாணியிலான முகப்பு விளக்குகள் (ஹெட் லேம்ப்) மற்றும் பின்புற விளக்குள் (டெய்ல் லேம்ப்) கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரீமியம், ஸ்போர்டி மற்றும் இடவசதி ஆகியவற்றுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கும். அந்த வகையில் பார்த்தால், எக்ஸ் 451 மாடலிலும் அத்தகைய சிறப்பம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். அதுவே அந்த மாடலின் விற்பனைக்கான தனித்துவமான காரணமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

மாருதி பலேனோ, ஹுண்டாய் எலைட் ஐ20 ஆகிய இரு மாடல்களுக்கும் டாடாவின் புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் சிம்மசொப்பனமாக விளங்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source

Most Read Articles
English summary
Tata To Compete With Baleno & Elite i20 Models By 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X