டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக் தென் ஆஃப்ரிக்காவில் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக்கின் ஸ்பெஷல் எடிஷன் தென் ஆஃப்ரிக்காவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டாடா செனான் எவால்வ் பிக்கப் டிரக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா செனான் எவால்வ்;

டாடா செனான் எவால்வ்;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா ஸெனான் எவால்வ் என்ற பிக்கப் டிரக்கை வழங்கி வருகிறது.

இதன் ஸ்பெஷல் எடிஷன், தற்போது தென் ஆஃப்ரிக்காவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக் ஸ்பெஷல் எடிஷன், 2.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 145 பிஹெச்பியையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

2 சக்கரங்களுக்கோ அல்லது 4 சக்கரங்களுக்கோ 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலமாக தான் பவர் கடத்தப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

டாடா ஸெனான் எவால்வ் மாடலை பிற வேரியன்ட்களில் இருந்து வேறுப்படுத்தும் வகையில் இந்த பிக்கப் டிரக் பிளாக் நிறத்தில் பெயின்ட் செய்யபட்டுள்ளது.

இதன் லோடிங் பே உடைய சுவர்களிலும், 2-ஆம் செட் டோர்களின் அடிப்பகுதியில், வைட் டீகேல்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக்கின் ஸ்பெஷல் எடிஷன் மாடலில், பிளாக் அல்லாய் வீல்கள், சில்வர் ஃபுட் போர்ட், கேபினின் பின் புறம் தடிமனான குரோம் பூச்சு ரோல்ஓவர் ஹூப், ஃபிரண்ட் பம்பரில் புல் பார் மற்றும் ஒரு டோ பார் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

புதிய டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக்கின் உள்ளே லெதர் சீட்கள், புளுடூத் கனெக்டிவிட்டி உடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக்கில், ட்யூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தபட்டுள்ளது.

விலை;

விலை;

டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக்கின் ஸ்பெஷல் எடிஷனின் 4x2 வேரியன்ட், 2,69,995 ZAR ((ZAR-தென் ஆஃப்ரிக்கன் ராண்ட்) - இந்திய மதிப்பில் 12,44,760 ரூபாய்) ரூபாய் என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4x4 வேரியன்ட்கள், ஆர்டரின் பேரிலேயே செய்து தரப்படுகின்றது.

இந்திய வருகை;

இந்திய வருகை;

டாடா ஸெனான் எவால்வ் பிக்கப் டிரக், இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து டாடா நிறுவனம் எந்த விதமான அதிகார்ப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

English summary
Tata Motors has launched special edition version of Tata Xenon Evolve pickup truck in South Africa. Tata Xenon Evolve pickup truck is priced at ZAR 2,69,995 (Rs. 12,44,760) for 4x2 variant. 4x4 variant is made on order only. This has new black alloy wheels, silver foot board, thick chrome rollover hoop behind the cabin, bull bar on front bumper and tow bar. To know more, check here...
Story first published: Wednesday, June 22, 2016, 17:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark