விற்பனையில் இந்தியாவின் மிக மோசமான அந்த 10 கார்கள்... !!

Written By:

கடந்த 2015- 16 ஆம் நிதி ஆண்டில் இந்திய கார் மார்க்கெட் 7.8 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. காம்பேக்ட் கார் செக்மென்ட்டில் வந்த பல புதிய மாடல்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்த காரணத்தால், இந்த சிறப்பான வளர்ச்சியை கார் மார்க்கெட் பதிவு செய்திருக்கிறது.

ஒருபுறம் பல கார் மாடல்கள் சிறப்பான விற்பனையை வளர்ச்சியை பதிவு செய்தபோதிலும், பல கார் மாடல்கள் விற்பனையில் தொடர்ந்து தடுமாறி வருகின்றன. அதில், மிக மோசமான விற்பனையை பதிவு செய்த 10 கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா

கடந்த நிதி ஆண்டில் 1,940 ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. 2015 நிதி ஆண்டைவிட இது 10 சதவீதம் குறைவு. மிகச்சிறப்பான கட்டுமானத்தரம், வசதிகள் இருந்தும் விற்பனையில் சோபிக்க முடியவில்லை என்பதற்கு ஃபோக்ஸ்வேகனின் சர்வீஸ் செலவு, சர்வீஸ் மையங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

09. ஃபியட் அவன்ச்சுரா

09. ஃபியட் அவன்ச்சுரா

ஃபியட் புன்ட்டோ எவோ காரின் க்ராஸ்ஓவர் மாடலாக மாறுதல்கள் செய்யப்பட்ட இந்த கார் விற்பனையில் எதிர்பார்த்த இலக்குகளை தொட முடியாமல் தவித்து வருகிறது. கடந்த 2016 நிதி ஆண்டில் 1,906 ஃபியட் அவென்ச்சுரா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ்

நிசான் மைக்ரா காரின் ரீபேட்ஜ் மாடல்தான் ரெனோ பல்ஸ். கடந்த நிதி ஆண்டில் 1,712 ரெனோ பல்ஸ் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. 2015 நிதி ஆண்டைவிட 2016 நிதி ஆண்டில் விற்பனை 26 சதவீதம் குறைந்துவிட்டது. விலை, சர்வீஸ் நெட்வொர்க், டிசைன் போன்றவற்றில் போட்டியாளர்களை விஞ்ச முடியவில்லை.

 ஹூண்டாய் எலான்ட்ரா

ஹூண்டாய் எலான்ட்ரா

கடந்த நிதி ஆண்டில் 1,708 ஹூண்டாய் எலான்ட்ரா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. 2015 நிதி ஆண்டைவிட 2016 நிதி ஆண்டில் விற்பனை 64 சதவீதம் குறைந்துவிட்டது. புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் மிகச்சிறப்பான டிசைன், வசதிகளை கொண்டிருந்தும் போட்டியாளர்களை விஞ்ச முடியாமல் பின்தங்கி நிற்கிறது.

செவர்லே செயில் யுவா

செவர்லே செயில் யுவா

கடந்த நிதி ஆண்டில் 1,507 செவர்லே செயில் யுவா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கவர்ச்சியில்லாத டிசைன், செவர்லே பிராண்டின் மீதான நம்பகத்தன்மை குறைவாக இருப்பதும் இந்த காரின் விற்பனை தொடர்ந்து சரிவு முகத்தில் உள்ளது.

 ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

கடந்த நிதி ஆண்டில் 1,447 ஃபியட் லீனியா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டின் விற்பனையை விட 37 சதவீதம் குறைவு. மிகச்சிறந்த கார்களை வைத்திருந்தும், வாடிக்கையாளர் சேவை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கில் ஃபியட் இன்னும் பின்தங்கியே இருப்பதுதான் அதன் கார் மாடல்களின் விற்பனை குறைவாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

செவர்லே க்ரூஸ்

செவர்லே க்ரூஸ்

கடந்த நிதி ஆண்டில் 935 செவர்லே க்ரூஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைன், சிறப்பான செயல்திறன் கொண்ட மாடலாக இருந்தும், செவர்லே பிராண்டின் மீதான நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஈர்ப்பு இல்லாததே இந்த காரின் விற்பனை படு பாதாளத்தி்ல இருக்கிறது.

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

நிசான் சன்னி காரின் ரீபேட்ஜ் மாடாலகவும், சற்றே கூடுதல் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட்ட இந்த காரின் விற்பனையும் வெகுவாக சரிந்தது. கடந்த நிதி ஆண்டில் 830 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. 2015 நிதி ஆண்டை விட கடந்த 2016 நிதி ஆண்டில் விற்பனை 44 சதவீதம் குறைந்தது. சிறப்பான இடவசதி இருந்தும், வெளிப்புற டிசைன் கவரவில்லை.

மஹிந்திரா வைப்

மஹிந்திரா வைப்

மஹிந்திரா வெரிட்டோ வைப் காரும் மிக மோசமான விற்பனையை பதிவு செய்திருக்கிறது. 2015 நிதி ஆண்டில் 1361 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், 2016 நிதி ஆண்டில் வெறும் 609 கார்களை விற்பனையாகியிருக்கின்றன. இந்த காரின் விற்பனையும் 55 சதவீதம் குறைந்தது. மிக மோசமான டிசைன்தான் இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்பாததன் காரணமாக இருக்கிறது.

ரெனோ ஃப்ளூயன்ஸ்

ரெனோ ஃப்ளூயன்ஸ்

2015 நிதி ஆண்டிலும், கடந்த நிதி ஆண்டிலும் மிக மோசமான விற்பனை பதிவு செய்து உள்ளது. 2015 நிதி ஆண்டில் 232 ரெனோ ஃப்ளூயன்ஸ் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், 2016ம் நிதி ஆண்டில் வெறும் 113 கார்களே விடிற்பனையாகியிருக்கிறது. விற்பனை சரிபாதியாக குறைந்தது. இதன் டிசைன் இந்திய வாடிக்கையாளர்களை கவரவில்லை.

 
English summary
Ten Worst selling cars in FY 16
Story first published: Tuesday, April 19, 2016, 10:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark