டெஸ்லாவின் மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு சூப்பர்சார்ஜிங் வசதி இலவசம் கிடையாது

By Ravichandran

மாடல் 3 என்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் டெஸ்லா மோட்டர்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும் எலக்ட்ரிக் கார் ஆகும்.

சமீபத்தில், டெஸ்லா மோட்டர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வழங்கினார்.

tesla-model-3-customers-will-not-get-free-supercharger-charging-access

"மாடல் 3 எலக்ட்ரிக் செடான் காருக்கு, சூப்பர்சார்ஜிங் நிலையங்களில் சார்ஜிங் செய்து கொள்ளும் வசதி இலவசமாக வழங்கப்படமாட்டாது. இந்த திட்டத்தின் படி தான், மாடல் 3 காரை, 35,000 அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படை விலையில் வழங்குவது சாத்தியமாகும்" என எலான் மஸ்க் கூறினார்.

"இதற்கு பதிலாக, வாழ்நாள் முழுவதற்குமான இலவச சூப்பர்சார்ஜிங் ('free supercharging for life'), தேர்வு முறையிலோ அல்லது பேக்கேஜ் முறையிலோ வாங்கி கொள்ளலாம். எனினும், இதற்கான கட்டணம் அல்லது பேக்கேஜ்-ஜூக்கு ஆகும் செலவு, வழக்கமான கார்கள் அல்லது ஃபாஸில் ஃப்யூவல் ஆகியவறிற்கு ஆகும் செலவுகளை செலவை விட குறைவாகவே இருக்கும்" என எலான் மஸ்க் தெரிவித்தார்.

"எனவே, சூப்பர்சார்ஜிங் என்பது கேஸோலின் நிரப்புவதற்கு ஆகும் செலவை விட மலிவானதாக இருக்கும். அதுவும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இந்த பேக்கேஜை வாங்காத வரை இது இலவசமாக கிடைக்காது" என எலான் மஸ்க் அறிவித்தார்.

Most Read Articles
English summary
Tesla Motors CEO Elon Musk gave shocking news that, Owners of upcoming Model 3 Electric Sedan will not get free access to Tesla's Supercharger charging stations. Instead Musk stated that, "Option for 'free supercharging for life' could be bought purchased as an option, or package. Supercharging will be very cheap - and cheaper than gasoline". to know more, check here...
Story first published: Friday, June 3, 2016, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X