டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 செடான் அறிமுகம் செய்யபட்டுள்ளது

Written By:

டெஸ்லா நிறுவனம், மாடல் 3 என்ற புதிய செடானை அறிமுகம் செய்துள்ளனர். டெஸ்லா தயாரிப்பு கார் மாடல்கள அனைத்தும் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை

ஏற்படுத்தி வருகிறது.

இந்த மாடல் 3, குறைந்த விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. மேலும், எலக்ட்ரிக் காராக இருப்பதனாலும் புக்கிங் குவிந்து வருகிறது.

புக்கிங்கில் பட்டையை கிளப்பி வரும் டெஸ்லாவின் புதிய வெளியீடான மாடல் 3 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மாடல் 3...

மாடல் 3...

மாடல் 3 தான், டெஸ்லா நிறுவனம் சார்பாக தயாரிக்கபட்ட மாடல்களிலேயே மிக சிறிய செடான் மாடல் ஆகும்.

மாடல் 3, உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட மாடல்களின் ஒன்றாக உள்ளது.

1,30,000+ புக்கிங்;

1,30,000+ புக்கிங்;

டெஸ்லாவின் மாடல் 3 செடான், தற்போது தான் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஆனால், அறிமுகம் செய்யபடுவதற்கு முன்பே ப்ரீ-லாஞ்ச் புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் என்ற வகையில், சுமார் 1,30,000+ புக்கிங் குவித்து சாதனை படைத்துள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, டெஸ்லாவின் மாடல் 3 செடான், மாடல் எஸ் செடான் மற்றும் மாடல் எக்ஸ் எஸ்யூவி ஆகிய மாடல்களின் கூட்டு போல் காட்சி அளிக்கிறது.

டெஸ்லா மாடல் 3, ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெய்ல் லேம்ப்கள் கொண்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

டெஸ்லா மாடல் 3 செடான், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெரும் 6 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

பேட்டரி திறன்;

பேட்டரி திறன்;

டெஸ்லா மாடல் 3 செடானின் பேட்டரியை, ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம், 346 கிலோமீட்டர் பயணிக்க முடியும்.

பேட்டரி பேக்;

பேட்டரி பேக்;

மாடல் 3 செடானில் என்ன மாதிரியான பேட்டரி பேக் பொருத்தபட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை டெஸ்லா நிறுவனம் இது வரை வெளியிடவில்லை.

எனினும், பெரிஸ்கோப் என்ற ஆப் / தளத்தில் வெளியிடபட்டுள்ள வீடியோவில், இந்த மாடல் 3 வாகனத்தில், சிங்கிள் மோட்டார் மற்றும் ட்யூவல் மோட்டார் ஆகிய 2 மோட்டார் வேரியண்ட்களிலும், நீண்ட ரேஞ்ச் பேட்டரி பேக்குகள் இருக்கும் என டெஸ்லாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உற்பத்தி;

உற்பத்தி;

மாடல் 3 செடான், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பிராந்தியத்தில் ஃப்ரெமாண்ட் என்ற இடத்தில் உள்ள டெஸ்லா உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடுகிறது.

இதன் பேட்டரி பேக்குகள், அமெரிக்காவின் நெவெடா பிராந்தியத்தில் உள்ள டெஸ்லாவிற்கு சொந்தமான கிகாஃபேக்டரி 1 உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடுகிறது.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

டெஸ்லா மாடல் 3 செடான், சிங்கிள் பேனல் யூனிட்டால் ஆனது. இது பெரிய டேப்லட் போன்ற டிஸ்பிளே கொண்டுள்ளது. இது தான் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கட்டுபடுத்துகிறது.

இட வசதி;

இட வசதி;

டெஸ்லா மாடல் 3 செடானின், 2 பக்கங்களிலும் 2 பூட்களை கொண்டுள்ளது. மாடல் 3 காரில், தாராளமாக 5 பேர் பயணிக்கலாம்.

சார்ஜிங் வசதி;

சார்ஜிங் வசதி;

டெஸ்லா நிறுவனம், தாங்கள் விற்கும் கார்களை சார்ஜ் செய்யும் வகையில் ஆங்காங்கே சூப்பர்சார்ஜர்களின் நெட்வர்க்கை கொண்டுள்ளது.

2017-ஆம் ஆண்டிற்குள் டெஸ்லா நிறுவனம், தங்களின் சூப்பர் சார்ஜர்களின் நெட்வர்க்கை இரு மடங்காக ஆக்க திட்டமிட்டு வருகிறது.

இந்த சார்ஜர் நெட்வர்க்கில் வாடிக்கையாளர்கள் தங்களின் டெஸ்லா கார்களை இலவசமாக சார்ஜிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

டெலிவரி;

டெலிவரி;

டெஸ்லா மாடல் 3 செடானின் டெலிவரி, 2017-ஆம் ஆண்டு இறுதியில் தான் வாடிக்கையாளர்களை சென்று அடையும் என எதிர்பார்க்கபடுகிறது.

புக்கிங்;

புக்கிங்;

டெஸ்லா மாடல் 3 செடானின் புக்கிங், 1,000 டாலர்கள் என்ற விலையில் ஏற்கபடுகிறது.

விலை;

விலை;

டெஸ்லா மாடல் 3 செடான், அமெரிக்காவில் 35,000 டாலர்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டெஸ்லா எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் - வியப்பில் ஆழ்த்தும் அம்சங்கள்!!

பிஎம்டபிள்யூ, ஆடி கார்களை ஓவர்டேக் செய்த டெஸ்லா மாடல் எஸ் கார்!

டெஸ்லா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Tesla has launched their Model 3 Sedan. This Electric Car is priced at an very affordable price. It is priced at starting price of $35,000. As Pre-launch Bookings, it has already gathered 1,30,000+ Bookings. From standstill, Model 3 can hit 100km/h in under 6 seconds. Deliveries of Tesla Model 3 Sedan will commence in 2017 end. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more