உலகின் அதிவேக மின்சார காரை அறிமுகப்படுத்திய டெஸ்லா!

Written By:

மின்சார கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, உலகின் அதிவேக மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. பேட்டரி கார்கள் என்றாலே செயல்திறன் குறைவு பிம்பத்தையும் இப்போது உடைத்தெறிந்துள்ளது டெஸ்லா மோட்டார்ஸ்.

தற்போது விற்பனையில் இருக்கும் டெஸ்லா மாடல் எஸ் செடான் காருக்கும் மாடல் எக்ஸ் எஸ்யூவி வகை மின்சார காருக்கும் அதிசெயல்திறன் மிக்க புதிய பேட்டரியை டெஸ்லா அறிமுகம் செய்துள்ளது. இந்த பேட்டரி கொண்ட மாடல்கள் டெஸ்லாவின் வர்த்தகத்தை புதிய கோணத்தில் திசை திருப்பும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 புதிய பேட்டரி

புதிய பேட்டரி

டெஸ்லா மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்களுக்கு P100D என்ற மாடல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த மாடல்கள் 100 kWh திறன் கொண்ட பேட்டரியும் கிடைக்கிறது.

 ரெண்டு மாங்காய்

ரெண்டு மாங்காய்

இதன்மூலமாக, இரண்டு பயன்களை இந்த மாடல்கள் பெற்றிருக்கின்றன. ஒன்று அதிவேகத்தில் இந்த கார்களை இயக்கும் வகையில் மின் மோட்டார்களுக்கு தேவையான மின்சாரத்தை தங்கு தடையில்லாமல் வினியோகிக்கும் திறன் கொண்டது.

வாம்மா மின்னலு

வாம்மா மின்னலு

இதன் காரணமாக, மாடல் எஸ் கார் 0 - 96 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும். மாடல் எக்ஸ் கார் 0 - 96 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும் என்று டெஸ்லா அறிவித்துள்ளது. இது பல முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனங்களுக்கே கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

போங்கு ஆட்டம்

போங்கு ஆட்டம்

பெட்ரோலில் இயங்கும் ஃபெராரி, போர்ஷே போன்ற கார்களின் செயல்திறனுக்கு இணையாக இந்த டெஸ்லா மாடல்கள் போட்டி போடுகின்றன. லாஃபெராரி, ஃபோர்ஷே 918 ஸ்பைடர் கார்களுக்கு அடுத்து, உலகிலேயே அதிவேக செயல்திறன் கொண்ட தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது டெஸ்லா மாடல் எஸ்.

அசத்தும் ரேஞ்ச்

அசத்தும் ரேஞ்ச்

இதுமட்டுமில்லை, பேட்டரியிலிருந்து மின்சாரம் அதிவேகத்தில் உறிஞ்சப்படும்போது ரேஞ்ச் என்று சொல்லப்படும் பயண தூரம் குறையும் என்பதுதான் சட்டென உங்கள் மனதில் எழும் கேள்வி. ஆனால், இந்த கார் இரண்டிலும் குறைவைக்காத அளவு நவீன தொழில்நுட்பத்தில் வந்திருக்கின்றன.

ஒரே சார்ஜில்...

ஒரே சார்ஜில்...

இதனால், டெஸ்லா மாடல் எஸ் P100D மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக ந்த கார் 315 மைல் [480 கிமீ] தூரம் வரை பயணிக்கும். மாடல் எக்ஸ் எஸ்யூவி காரின் பி100டி மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 465 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

கவலைய விடுங்க

கவலைய விடுங்க

ஃபெராரி, லம்போர்கினி, மெக்லாரன் போன்ற கார்களில் டிரிப் செல்லும்போது பின்னால் பெட்ரோல் பேரல்களுடன் எஸ்யூவி கார் ஒன்றையும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், இந்த டெஸ்லா கார்களுக்கு அது தேவையிருக்காது. அதாவது, செயல்திறன், ரேஞ்ச் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது டெஸ்லா.

இதுவும் சரிதான்...

இதுவும் சரிதான்...

மேலும், பிரபல ஸ்போர்ட்ஸ் கார்கள் மாடல்கள் லிமிடேட் எடிசன் மாடல்களாகவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுவதால், பல நடைமுறை பிரச்னைகள் உள்ளன. ஆனால், இந்த டெஸ்லா கார்களை வாங்க விரும்புவோர்க்கு இந்த பிரச்னைகள் இல்லை. அடுத்த சில ஆண்டுகளில் டெஸ்லா கார்கள் உலக அளவில் பரவிவிடும் வாய்ப்புள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

டெஸ்லா மாடல் எஸ் கார் மணிக்கு 250 கிமீ டாப் ஸ்பீடு வேகம் கொண்டது என்பதையும் இங்கே தெரிவிப்பது அவசியம். இந்த கார்களை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 
English summary
Theres No Stopping Tesla Now — Ludicrous Mode Just Went Bezerk.
Story first published: Saturday, August 27, 2016, 17:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark