கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியில் கலக்கிய டாப் 10 கார்கள்!

Written By:

நம் நாட்டில் விற்பனையில் சொதப்பி வரும் அல்லது மிதமான விற்பனையை பதிவு செய்து வரும் மாடல்கள் ஏற்றுமதியில் கலக்கி வருகின்றன.

அந்த வகையில், கடந்த 2015- 16ம் நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் மாடல்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியில் கலக்கிய டாப் 10 கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஹூண்டாய் க்ரெட்டா

10. ஹூண்டாய் க்ரெட்டா

கடந்த நிதி ஆண்டில் பட்டியலில் 4 இடங்களை ஹூண்டாய் கார்கள் பிடித்தன. இதில், 10வது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா கார் இடம்பெற்று இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 19,442 க்ரெட்டா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அசத்தலான டிசைன் காரணமாக, உள்நாட்டில் விற்பனையில் கலக்கி வரும் ஹூண்டாய் க்ரெட்டா ஏற்றுமதியிலும் சிறப்பான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09. ஹூண்டாய் ஐ10

09. ஹூண்டாய் ஐ10

மிதமான விற்பனையை பதிவு செய்து வரும் ஹூண்டாய் ஐ10 கார் ஏற்றுமதியில் 9வது இடத்தை பிடித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை ஏற்றுமதியில் முதன்மையான இடங்களை பிடித்து வந்த இந்த கார் தற்போது ஹூண்டாயின் மற்றொரு மாடலான கிராண்ட் ஐ10 வருகையால் சற்றே மதிப்பை இழந்தது. கடந்த நிதி ஆண்டில் 21,133 ஐ10 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் நம்பகமான கார் மாடல் என்ற காரணம் நம் நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

08. ஹூண்டாய் எக்ஸென்ட்

08. ஹூண்டாய் எக்ஸென்ட்

கடந்த நிதி ஆண்டில் 29,540 ஹூண்டாய் எக்ஸென்ட் கார்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. முந்தைய நிதி ஆண்டைவிட கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி 48 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறப்பான இடவசதி, சிறப்பம்சங்கள் கொண்ட காம்பேக்ட் செடான் என்பது இதன் பலம்.

07. நிசான் சன்னி

07. நிசான் சன்னி

இந்திய மார்க்கெட்டில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையை பெற்று இந்தியாவின் 7வது சிறந்த ஏற்றுமதி கார் என்ற பெருமையை நிசான் சன்னி பெற்றிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 31,027 நிசான் சன்னி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இடவசதியில் சிறந்த கார்.

06. செவர்லே பீட்

06. செவர்லே பீட்

இந்தியாவில் விற்பனையில் சொதப்பி வரும் செவர்லே பீட் கார் ஏற்றுமதியில் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 37,082 செவர்லே பீட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது செவர்லே பிராண்டிற்கு உற்சாகம் தரும் செய்தி.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

மாதாமாதம் விற்பனையில் இந்தியாவின் சிறந்த டாப் 10 கார்களில் பெரும்பாலும் 5வது இடத்தை பிடிக்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்தான் கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியில் கலக்கிய டாப் 10 கார்களின் பட்டியலிலும் 5வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 44,672 கிராண்ட் ஐ10 கார்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகியிருக்கின்றன. டிசைன், வசதிகளில் சிறந்த காம்பேக்ட் கார் மாடல் என்பது இதன் பலம்.

04. மாருதி ஆல்ட்டோ

04. மாருதி ஆல்ட்டோ

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 கார் மாடலான மாருதி ஆல்ட்டோ ஏற்றுமதியில் 4வது இடத்தையே பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 54,656 ஆல்ட்டோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. முந்தைய நிதி ஆண்டைவிட கடந்த நிதி ஆண்டில் ஆல்ட்டோ காரின் ஏற்றுமதி 73 சதவீதம் உயர்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டிய விஷயம்.

03. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

03. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியில் டாப் 10 கார்களில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 63,157 வென்ட்டோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சிறந்த கட்டுமானம், வசதிகள், வடிவமைப்பு கொண்ட மிட்சைஸ் செடான் காராக வென்ட்டோ வலம் வருகிறது. இது மிகச்சிறந்த கார் மாடலாக இருந்தாலும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் செலவு போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இல்லை.

02. நிசான் மைக்ரா

02. நிசான் மைக்ரா

முந்தைய நிதி ஆண்டில் ஏற்றுமதியில் நம்பர்-1 கார் மாடலாக இருந்த நிசான் மைக்ரா கார் கடந்த நிதி ஆண்டில் ஒரு இடம் இறங்கி இரண்டாவது இடத்தை பிடித்தது. கடந்த நிதி ஆண்டில் 75,456 மைக்ரா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன.

01. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

01. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தியாவில் போட்டியாளர்களால் கடும் நெருக்கடியை சந்தித்தாலும், ஏற்றுமதியில் யாரும் எட்ட முடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். கடந்த நிதி ஆண்டில் 83,325 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் ஏற்றுமதியயாகியிருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் ஏற்றுமதி 51 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

பெருமை

பெருமை

இந்தியாவின் ஏற்றுமதியில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் 7 கார்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாருதி ஆல்ட்டோ, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் செவர்லே பீட் கார்களை தவிர்த்து, பிற அனைத்து கார்களுமே சென்னையிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலமாக, இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது சென்னை!!

 
English summary
Some of these cars are not best sellers in the domestic market, however, they are the most exported from India in FY16. Below is the list of top 10 cars exported from India in FY16.
Story first published: Sunday, May 8, 2016, 12:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark