கார்களில் லோகோவை குறிவைத்து திருடும் கும்பல்... உஷார்...!

Written By: Krishna

ஒரு சில பெரிய நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு பிரம்மாண்டமான லுக்கைத் தருவதில் அதன் முகப்பில் பொருத்தியிருக்கும் மோனோகிராம் எனப்படும் கம்பெனி லோகோவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஜாக்குவார் மாடலில் பாயும் சிறுத்தையின் உருவம் பொருத்தப்பட்டிருந்தது. விரைவில் அது விழுந்து விடுவதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது முகப்பில் ஜாகுவார் நிறுவன லோகோ ஒட்டப்படுகிறது.

கார் லோகோ

அதுபோலவே ஆடி, மெர்சிடைஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களுக்கும் லோகோதான் ஹைலைட். வித்தியாசமான சொகுசு காராக இருக்கிறதே என்று அதன் வடிவமைப்பைப் பார்த்தாலும், நம்மை அறியாமல் கண்கள் அந்த லோகோவின் பக்கம்தான் செல்லும். அப்படி ஒரு ஈர்ப்பு விசை சில நிறுவனங்களின் லோகோவுக்கு உண்டு.

சரி, விஷயத்துக்கு வருவோம். மங்களூரில், இப்போது கார் திருட்டைக் காட்டிலும், லோகோ திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறதாம்.

அதிலும் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்களில் உள்ள லோகோ மட்டும் திருடுபோவதாக புகார் எழுந்துள்ளது. லோகோ இல்லாமல் காரை ஓட்டினால், மொட்டைத் தலையுடன் வெளியே செல்வதைப் போன்று இருக்கும் என்பதால் உடனடியாக மீண்டும் அதை வாங்கி கார் உரிமையாளர்கள் பொருத்துகின்றனர். ஆனால், இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பது சொகுசு கார்களை வைத்திருப்பவர்களுக்கும், போலீஸாருக்கும் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

லோகோ திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான் என்கிறது போலீஸ் தரப்பு. அதை ஆட்டோமொபைல் மார்க்கெட்டுகளில் குறைந்த விலைக்கு அவர்கள் விற்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திருட்டுச் சம்பவங்களால், ஆடி நிறுவன விநியோகஸ்தருக்கு மட்டும் மாதத்துக்கு 20-இலிருந்து 30-லோகோ ஆர்டர்கள் வருவதாகத் தெரிகிறது. அதேபோல் ஃபோக்ஸ்வேகன் நிறுவன லோகோ சராசரியாக இருபதும், பென்ஸ் லோகோ மூன்றும், பிஎம்டபிள்யூ லோகோ ஐந்தும் விற்பனையாவதாகத் தெரிகிறது.

உள்ளே பொருத்தாமல் மேல் பகுதியில் லோகோக்களை ஒட்டுவது திருடர்களுக்கு மித சௌகரியமாகப் போய்விடுகிறது. பார்க்கிங்கில் ஐந்து நிமிடம் காரை நிறுத்தினாலே அவர்கள் கைவரிசையைக் காட்டி விடுவார்கள். எனவே, காரை எடுக்கும்போது இனிமேல் லோகோ மீதும் உங்கள் கவனம் இருக்கட்டும்.

கார் நிறுவனங்களின் சின்னங்களும், அதன் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்...!!

English summary
Thieves Now Fancy The Logos Of Luxury Cars.
Please Wait while comments are loading...

Latest Photos