ஹுண்டாய், மஹிந்திரா, டாடா நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிய டொயோட்டா....

Written By: Krishna

டொயோட்டா நிறுவனம் சத்தமில்லாமல் சில சாதனைகளை நடத்தி வருகிறது. மார்க்கெட்டில் ஹுண்டாய், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு 3 செக்மெண்ட்களில் விற்பனையில் முன்னணிக்கு வந்துள்ளது டொயோட்டா.

மொத்தமாக விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கை பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான் என்றாலும், குறிப்பிட்ட செக்மெண்ட்களின் லீடராக டொயோட்டா நிறுவனம் விளங்கி வருகிறது.

டொயோட்டா கார்

இன்றைய தேதியில் பெரும்பாலான செக்மெண்ட்களிலும் சரி, மொத்த கார் விற்பனையிலும் சரி, மாருதி நிறுவனம்தான் ராஜாதி ராஜா. அதைத் தொடர்ந்து, ஹூண்டாய், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

ஹுண்டாயைப் பொருத்தவரை யுட்டிலிட்டி வாகன செக்மெண்டில் கிரீட்டா மாடல் அதிகமாக விற்பனையாகி வருகிறது. மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் தயாரித்த வாகனங்கள் எந்த செக்மெண்டிலும் விற்பனையில் முதலிடம் பிடிக்கவில்லை.

எக்ஸிகியூட்டிவ் செடான் ரகத்தில் யுவி 2 மற்றும் யுவி 4 ஆகிய செக்மெண்ட்கள் உள்ளன.

அதாவது ரூ.15 லட்சத்துக்குக் குறைவான விலையுடைய எக்ஸிகியூட்டிவ் செடான் ரகங்கள் யுவி 2 என அழைக்கப்படுகிறது. அதேபோல், ரூ.25 லட்சத்துக்கு குறைவான செடான் கார்கள் யுவி 4 செக்மெண்டாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், அந்த செக்மெண்டுகளில் டொயோட்டாவின் இன்னோவா, ஃபார்ட்ச்யூனர், கொரோல்லா ஆகிய மாடல்கள் தெறி காட்டி முன்னணியில் நிற்கின்றன.

இன்னோவா 19,699 கார்களும், 1,999 ஃபார்ட்ச்யூனரும், 1,577 கொரோல்லா கார்களும் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா கிரிஸ்டாவும் கணிசமான விற்பனை எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் டொயோட்டா நிறுவன நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் (விற்பனைப் பிரிவு) என்.ராஜா, வாடிக்கையாளர் சேவைகளை டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.

அனைத்து செக்மெண்ட்களிலும் கணிசமான விற்பனையையும், மார்க்கெட் லீடர் என்ற அந்தஸ்தையும் அடைய வியூகம் வகுத்து காத்திருக்கிறது டொயோட்டா நிறுவனம்.

English summary
Three Areas Where Toyota Leads Hyundai, M&M And Tata Motors.
Please Wait while comments are loading...

Latest Photos