பென்ட்லீ பென்டைகா - உலகின் மிக வேகமான எஸ்யூவி பற்றிய அறியாத தகவல்கள்

By Ravichandran

உலகின் மிக வேகமான எஸ்யூவியான பென்ட்லீ பென்டைகா, சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது. நீங்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும், இந்த பென்டைகாவில் நீங்கள் காணலாம். நீங்கள் எதிர்பார்க்காத சில விஷயத்தையும் இதில் காணலாம்.

இந்த பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியை நீங்கள் ஆஃப்-ரோட் பிரயோகத்திற்கும் பயன்படுத்தலாம். ஆனால், அப்படி செய்து, உங்களிம் விலை உயர்ந்த எஸ்யூவியின் பெயிண்ட் வேலைப்பாடுகளை பாழாக்கமாட்டீர்கள் என நம்புகிறோம்.

நீங்கள் எதிர்பார்த்திடாத சில வினோத சாதனை படைக்கும் பென்ட்லீ பென்டைகா குறித்து நீங்கள் அறிந்திடாத விஷயங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

முதல் எஸ்யூவி - பென்டைகா;

முதல் எஸ்யூவி - பென்டைகா;

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் பென்ட்லீ நிறுவனம், ஜனவரி மாதம் 18-ஆம் தேதி, 1919-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

வடக்கு லண்டன் பகுதியில் க்ரிக்கிள்வுட் என்ற இடத்தை சேர்ந்த ஹெச்.எம். பென்ட்லீ மற்றும் டபுள்யூ.ஓ. பென்ட்லீ என்ற 2 சகோதரர்கள் இணைந்து இந்த பென்ட்லீ நிறுவனத்தை ஸ்தாபித்தனர்.

இந்த 96 ஆண்டுகால சரித்திரத்தில், பென்டைகா தான் பென்ட்லீ நிறுவனம் வழங்கும் முதல் எஸ்யூவி ஆகும்.

அசிங்கமான டக்லிங் (வாத்து குட்டி);

அசிங்கமான டக்லிங் (வாத்து குட்டி);

பென்டைகா முதன் முதலாக இஎக்ஸ்பி 9எஃப் கான்செப்ட் என்ற பெயரில் 2012 ஜெனீவா மோட்டார் ஷோவில் காணப்பட்டது. அப்போது, இதன் தோற்றம், விமர்சகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து, பென்ட்லீ நிறுவனம் இந்த பென்டைகா காரை மறுவடிவமைத்து, உற்பத்திக்கு தயாராக இருந்த 2015-ல் இந்த எஸ்யூவியை ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

பென்டைகா என இந்த எஸ்யூவிக்கு பெயர் சூட்டபடுவதற்கு சில காரணங்கள் உள்ளது.

உலகின் மிகப் பெரிய கண்டம் கடந்த பனி காடான டெய்கா என்ற பெயரில் இருந்து இந்த பென்டைகா பெயர் தழுவ பட்டுள்ளது.

மேலும், கிரான் கெனாரியா எனப்படும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தீவு பகுதியில் உள்ள ராக் பென்டைகா என்ற கல் தோற்றத்தில் இருந்தும் இதன் பெயர் சூட்டபட்டுள்ளது.

அசாதாரன எஸ்யூவி;

அசாதாரன எஸ்யூவி;

பென்டைகா தான் உலகிலேயே மிகவும் அதிக திறன் வாய்ந்த எஸ்யூவி என பென்ட்லீ நிறுவனம் கூறுகிறது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, 6-லிட்டர், டபுள்யூ 12 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 600 பிஹெச்பியையும், 900 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பென்ட்லீ கான்டினென்டல் ரேஞ்ச் மாடலில் உபயோகிக்கபடும் அதே இஞ்ஜின் தான், இந்த பென்டைகா எஸ்யூவி மாடலிலும் உபயோகிக்கபட்டுள்ளது.

உலகின் மிக வேகமான எஸ்யூவி;

உலகின் மிக வேகமான எஸ்யூவி;

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் இஞ்ஜின், 8-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இந்த 8-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலம் தான், பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் அபாரமான பவர் மற்றும் டார்க், 4 சக்கரங்களுக்கு கடத்தபடுகிறது.

பென்ட்லீ பென்டைகா நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.1 நொடிகளில் எட்டிவிடுகிறது. மேலும், இது உச்சபட்சமாக, மணிக்கு 301 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

இத்தகைய அபாரமான திறன் வெளிபாட்டால், பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி தான் உலகின் மிக வேகமான எஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ளது.

பிரம்மாண்டமான இஞ்ஜின் - அடங்காத தாகம்;

பிரம்மாண்டமான இஞ்ஜின் - அடங்காத தாகம்;

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் பிரம்மாண்டமான டபுள்யூ இஞ்ஜினை எளிமையானதாக இருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். பென்டைகா எஸ்யூவி லிட்டர் கணக்கான பெட்ரோலை திகிலூட்டும் வகையில் விழுங்குகிறது.

இதன் விளைவாக, பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 7.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

பென்ட்லீயின் முதல்...

பென்ட்லீயின் முதல்...

எப்படி பார்த்தாலும், பென்டைகா தான் பென்ட்லீயின் முதல் எஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ளது.

வெளிப்புற தோற்றம் படி, இதன் முன் பகுதியில் உள்ள கிரில் மற்றும் ஏர் இன் டேக் பகுதியில் ஏராளமான குரோம் பூச்சு வழங்கபட்டுள்ளது. மேலும், இது பென்ட்லீயின் பிரத்யேக குவாட் எல்இடி ஹெட்லைட் காம்போ கொண்டுள்ளது.

B = பென்ட்லீ அல்லது பென்டைகா;

B = பென்ட்லீ அல்லது பென்டைகா;

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் பின் பகுதியில் வழக்கதிற்கு மாறான குரோம் பூச்சு வழங்கபட்டுள்ளது. மேலும், மனதை கொள்ளை கொள்ளும் வகையில், ‘B' (பி-) வடிவத்திலான எல்இடி-க்கள் கொண்ட டெயில்லேம்ப் உள்ளது.

இந்த வித்தியாசமான பி எழுத்து வடிவத்திலான டெயில்லேம்ப்கள், நீங்கள் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியில் தான் பயணிக்கிறீர்கள் என உலகிற்கு கர்வத்துடன் வெளிபடுத்தும்.

மரக்கட்டை, லெதர்...

மரக்கட்டை, லெதர்...

பென்டைகா எஸ்யூவியின் உட்புறத்தில் உங்களுக்கு வழக்கமான பென்ட்லீ தரத்திலான சொகுசுகள் மற்றும் ஆடம்பர அம்சங்கள் கிடைக்கும். இந்த படத்தில் காணப்படுவது போல், பென்டைகா எஸ்யூவியின் டேஷ்போர்ட் மரக்கட்டையினால் செய்யபட்டுள்ளது.

மேலும், இதன் உட்புறத்தில் அதிக அளவிலான அலுமினியம் உபயோகிக்கபட்டுள்ளது. கூடுதலாக, சொகுசு அம்சங்களை அதிகரிப்பதற்காக பல நிலைகளில் லெதர் பிரயோகிக்கபட்டுள்ளது.

ஆடம்பரத்திற்கு ஏற்ற விலை;

ஆடம்பரத்திற்கு ஏற்ற விலை;

பென்டைகா எஸ்யூவியில் வழங்கபட்டுள்ள இந்த அனைத்து சொகுசுகள், ஆடம்பரங்கள் மற்றும் ஆஃப்-ரோட் திறன் ஆகியவை மிக அதிகமான விலையில் தான் கிடைக்கிறது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, இந்தியாவில் 3.85 கோடி ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, ஏப்ரல் 22-ல் இந்தியாவில் அறிமுகம்

பென்ட்லீ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Britain based Luxury carmaker has launched their Bentley Bentayga SUV in India recently. It has become the World's Fastest SUV. There are lots of special facts about Bentayga. Bentley can be used for off-road purposes also. Bentley Bentayga is first ever SUV from Bentley. To know more about the Top 10 and best Facts of the Bentley Bentayga SUV, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X