ஃபியட் மோபி ஏன் இந்தியாவில் அறிமுகம் ஆக வேண்டும் - முழு தகவல்கள்

By Ravichandran

ஃபியட் கார் உற்பத்தி நிறுவனம், மோபி என்ற ஹேட்ச்பேக் காரை பிரேசிலில் அறிமுகம் செய்துள்ளனர்.

சில மாடல்கள் உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்யபடும். ஆனால், சில பகுதிகளில் அறிமுகம் செய்யபடாமல் இருக்கும்.

இப்படி பிரேசில் ஆட்டோமொபைல் சந்தைகளில் மட்டும் அறிமுகம் செய்யபட்டுள்ள மோபி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மோபி ஹேட்ச்பேக்;

மோபி ஹேட்ச்பேக்;

ஃபியட் நிறுவனம் வழங்கும் மோபி ஹேட்ச்பேக் கார் பிரேசிலில் இந்திய மதிப்பில் சுமார் 7.06 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யபடும் மாடல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ள ஃபியட் மோபி ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டால் நல்ல வரவேற்ப்பை பெரும் என தெரிகிறது.

இது ஏன் இந்தியாவில் அறிமுகம் செய்யபட வேண்டும் என்பதை அலசி பார்ப்போம்.

சிறிய ஹெட்ச்பேக்கில் தேர்வுகள்;

சிறிய ஹெட்ச்பேக்கில் தேர்வுகள்;

எஸ்யூவி போன்ற தோற்றம் கொண்ட மோபி ஹேட்ச்பேக், ரெனோ க்விட் 1.0 லிட்டர் காருக்கு கடும் போட்டி வழங்கும் வகையில் உள்ளது.

சிறிய ஹேட்ச்பேக் கார் செக்மண்ட்டில் போட்டியை சமாளிக்க தேவையான அனைத்து அம்சங்களையும் மோபி ஹேட்ச்பேக் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

வாடிக்கையாளர்களாகிய நீங்கள் ஒரு சில மாடல்களை மற்றும் எதிர்பார்த்து கொண்டிருக்க தேவையில்லை. ஃபியட் மோபி ஹேட்ச்பேக், மாருதி ஆல்ட்டோ கே10, ஹூண்டாய் ஐ10 மற்றும் விரைவில் வெளியாக உள்ள 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் காருடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

தோற்றம்;

தோற்றம்;

தற்போது உள்ள மாடலிகளிலேயே, ரெனோ க்விட் தான் சிறந்த தோற்றம் கொண்ட காராக உள்ளது. விலை குறைவான கார்களை தயாரிக்கும் பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் கார்களின் தோற்றங்களில் சமரசம் செய்துவிடுகின்றனர்.

ஆனால், ரெனோ நிறுவனம் நல்ல துனிச்சலான மற்றும் சிறப்பான தோற்றம் கொண்ட க்விட் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தினர்.

ஃபியட் மோபி ஏன் இந்தியாவில் அறிமுகம் ஆக வேண்டும் - முழு தகவல்கள்

ஆல்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் உள்ளிட்ட மாடல்களில் எதுவும் சிறப்பான அம்சங்களை உணர முடியாததால், சிலர் ரெனோ க்விட் காரின் ஒட்டுமொத்த பேக்கேஜ் சிறப்பாக உள்ளதாக கூறலாம்.

பிரேசிலில் வெளியான மாடலின் படி, ஃபியட் மோபி ஹேட்ச்பேக் சிறந்த விகிதாச்சாரங்களுடன் அமைக்கபட்ட காராக உள்ளது. ரெனோ க்விட் மாடலுடன் ஒப்பிடுகையில், ஃபியட் மோபி ஹேட்ச்பேக்கின் வீல்கள் நல்ல விகிதாச்சாரங்கள் கொண்டுள்ளது.

ஃபியட் - பிராண்ட்;

ஃபியட் - பிராண்ட்;

ஃபியட் பிராண்ட் என்றாலே சிறந்த கட்டுமானம் மற்றும் இஞ்ஜினியரின்ங் கொண்டிருக்கும் என அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட அனைத்து மாடல்களும், அதற்கு என சொந்தமான ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளது.

மேலும், ஃபியட் நிறுவன தயாரிப்புகள் சிறந்த ஹேண்ட்லிங் திறன் கொண்டுள்ளது. மேலும் ஃபியட் நிறுவன தயாரிப்புகள் ஒட்டுமொத்த கட்டமைப்பு திடமானதாகவும், க்ரிப் கூடியதாக உள்ளது.

சவால் வழங்கும் மாடல்;

சவால் வழங்கும் மாடல்;

எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும், ஃபியட் நிறுவன தயாரிப்புகள், இந்திய வாகன சந்தைகளில் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது. மேலும், சமீப காலமாக ஃபியட் தயாரிப்புகளின் விற்பனையும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

ஃபியட் மோபி ஹேட்ச்பேக், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டால், அது மக்களை வெகுவாக கவர வாய்ப்புகள் உள்ளது. இது வாடிக்கையாளர்கள் மனதை நிச்சயம் கவருவதோடு மட்டுமல்லாமல், ஃபியட் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையையும் கூட்டும் வாய்ப்புகள் உள்ளது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

ரெனோ க்விட் மாடலோடு ஒப்பிடுகையில், ஃபியட் மோபி ஹேட்ச்பேக்கின் உயரமும், அகலமும் சற்று அதிகமாக உள்ளது. இப்படியாக, ஃபியட் மோபியின் இருக்கை இட வசதி (சீட்டிங் ஸ்பேஸ்) குறிப்பிடக்கூடிய வகையில் அதிகமாக உள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்;

கிரவுண்ட் கிளியரன்ஸ்;

தற்போது உள்ள நிலையில், ரெனோ க்விட் மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மில்லிமீட்டராகவும், மோபி மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 156 மில்லிமீட்டராகவும் உள்ளது. 2 மாடல்களுக்கு இடையில், க்விட் மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக உள்ளது.

ஆனால், மோபி மாடலை இந்தியாவில் அறிமுகம் முடிவு செய்தால், அதை இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மறு ட்யூன் செய்து, அதன் சஸ்பென்ஷனிலும் மாற்றங்களை செய்து தான் ஃபியட் நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகிறது.

அம்சங்கள்;

அம்சங்கள்;

பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யபட்டுள்ள ஃபியட் மோபி ஹேட்ச்பேக், நிகழ் தலைமுறை அம்சங்களான டிரைவ்-பை-வயர், லேன் சேஞ்ச் இண்டிகேட்டர் (சாலை மாறுவதை குறிக்கும் இண்டிகேட்டர்), இஎஸ்எஸ் (எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிக்னல்லிங்), ஃபால்லோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், ட்யூவல் ஏர்பேக்குகள், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரியூஷன் சிஸ்டம் உடைய ஏபிஎஸ் வசதி கொண்டுள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

கடுமையான போட்டிகள் எழும் போது தான், சிறந்த விஷயங்கள் வெளிப்படுகிறது.

இதனால், ஃபியட் நிறுவனம் தங்களின் ஃபியட் மோபி ஹேட்ச்பேக்கை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். இப்படி கொண்டு வரும் பட்சத்தில், சிறிய கார் செக்மண்ட்டில் பலத்த போட்டி உருவாகும். இப்படியாக அனைத்து நிறுவனங்களின் சிறந்த படைப்புகள் வெளியாகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபியட் கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள்

புதிய ஃபியட் புன்ட்டோ ப்யூர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஃபியட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Fiat recently launched their hatchback 'Mobi' in Brazil, with starting price of Rs. 7.06 lakh onwards (In Indian Value). Fiat Mobi rivals Maruti Alto K10, Hyundai i10 and new Renault Kwid with 1-litre spec. Mobi might boost Fiat sales in India. To know Top 10 reasons as to why SUVish looking Fiat Mobi hatchback should be launched in India, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X