2015ம் ஆண்டில் அதிகம் விற்பனையான டாப் - 10 கார் மாடல்கள்!

Written By:

கடந்த 2014ம் ஆண்டு நம் நாட்டில் 2.54 மில்லியன் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு 2.69 மில்லியன் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனால், 2014ம் ஆண்டை காட்டிலும், கடந்த ஆண்டு கார் விற்பனை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே, கடந்த ஆண்டு கார் தயாரிப்பு துறைக்கு சிறப்பான வருடமாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு கடும் சந்தைப்போட்டிக்கு மத்தியிலும், மாருதி நிறுவனம் டாப் 10 பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையில் விற்பனையான கார்களின் அடிப்படையில் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது. இப்போது டாப் 10 பட்டியலை பார்க்கலாம்.

10. மாருதி ஓம்னி

10. மாருதி ஓம்னி

பல புதிய மாடல்களும், சிறந்த கார்களும் கடந்த ஆண்டு அறிமுகமாயிருந்த போதிலும், இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து ஆச்சரியப்படுத்துகிறது மாருதி ஓம்னி. கடந்த ஆண்டு முதல் 11 மாதங்களில் 72,778 மாருதி ஓம்னி வேன்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதிகம் பேர் பயணிப்பதற்கான இடவசதி, சரக்கு போக்குவரத்து பயன்பாட்டிற்கு ஏற்ற கதவுகள் டிசைன் மற்றும் இடவசதி என்பதோடு, மிக குறைந்த விலை கொண்ட மாடல். மாதத்திற்கு சராசரியாக 6,166 ஓம்னி மினி வேன்கள் விற்பனையாகின்றன.

09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

கடந்த ஆண்டு முதல் 11 மாதங்களில் ஒட்டுமொத்த விற்பனையில், மாருதி செலிரியோ கார் 9வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 74,942 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. ஏஎம்டி கியர்பாக்ஸ், டீசல் எஞ்சின் மற்றும் குறைவான விலை கொண்ட கச்சிதமான மாருதி கார் என்பதால், வலுவான விற்பனையை பதிவு செய்திருக்கிறது. மாதத்திற்கு சராசரியாக 6,812 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகின்றன.

08. ஹோண்டா சிட்டி

08. ஹோண்டா சிட்டி

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்து விடக்கூடிய மாடல் ஹோண்டா சிட்டி. மாருதி சியாஸ் காரின் ஹைபிரிட் அரட்டல் உருட்டல்களை மீறி, விற்பனையில் சிறப்பான இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த ஆண்டில் முதல் 11 மாதங்களில் 76,546 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், தரம், நம்பகமான எஞ்சின், வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் சிறந்த கார். மாதத்திற்கு 6,958 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகின்றன.

07. மஹிந்திரா பொலிரோ

07. மஹிந்திரா பொலிரோ

ஹூண்டாய் க்ரெட்டா, தனது பங்காளியாக வந்த டியூவி300 ஆகிய மாடல்களின் கடும் போட்டியையும் விஞ்சி, விற்பனையில் சாதித்து வருகிறது மஹிந்திரா பொலிரோ. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 80,914 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம், விற்பனையில் நம்பர்-1 இடத்தை தொடர்ந்து தக்க வைக்கிறது. தோற்றம், பராமரிப்பு, மைலேஜ், இடவசதி என அனைத்திலும் தன்னிறைவை தருவதோடு, மிகச்சரியான விலையும் இந்த எஸ்யூவிக்கு வலு சேர்க்கிறது. மாதத்திற்கு 7,355 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகின்றன.

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

மார்க்கெட்டில் சிறந்த ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையின் மூலமாக சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10. கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் 1,11,306 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், வசதிகள் மற்றும் சரியான விலை இதற்கு வலு சேர்க்கிறது. மாதத்திற்கு சராசரியாக 10,118 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகின்றன.

 05. ஹூண்டாய் எலைட் ஐ20

05. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த 2015ம் ஆண்டில் சிறந்த கார் விருதை பெற்ற மாடல். இதன் அசத்தலான டிசைன் வாடிக்கையாளர்களை சொக்க வைத்துவிட்டது. இதனால், விற்பனையும் மிகச்சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு விற்பனை பட்டியலில் 5வது இடத்தை பெறுகிறது. கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1,19,705 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 10,822 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியுள்ளன.

 04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

விற்பனையில் டாப் 10 பட்டியலில் தனது ஆஸ்தான 4வது இடத்தை தக்க வைத்துள்ளது மாருதி வேகன் ஆர் கார். கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1,55,754 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த பராமரிப்பு, உயரமானவர்களுக்கும் சிறப்பான ஹெட்ரூம், வசதிகள், குறைந்த பட்ஜெட் விலை போன்றவை முன்னிறுத்தும் அம்சங்கள். மாதத்திற்கு சராசரியாக 14,159 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் கார் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1,92,376 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கவர்ச்சியான தோற்றம், மைலைஜ், விலை, குறைவான பராமரிப்பு போன்றவை இந்த காரை முன்னிலைப்படுத்தும் அம்சங்கள். கடந்த ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 17,488 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த ஆண்டு 2வது இடத்தை மாருதி டிசையர் பெறுகிறது. முதல் 11 மாதங்களில் 2,19,248 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மாதத்திற்கு 19,931 டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன. மைலேஜ், குறைந்த பராமரிப்பு, விலை, மாருதியின் சிறப்பான சர்வீஸ் கட்டமைப்பு போன்றவை இந்த காரின் மார்க்கெட்டை உச்சத்தில் வைத்துள்ளது. கடந்த ஆண்டு மாதத்திற்கு 19,931 டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

தொடர்ந்து 10வது ஆண்டாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்தது மாருதி ஆல்ட்டோ கார். கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 2,49,507 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. குறைந்த விலை, பராமரிப்பு செலவு குறைவு, வலுவான மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை இந்த காரை முன்னிலைப்படுத்துகிறது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 22,682 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், ரெனோ க்விட் காரின் வருகையால் இந்த ஆண்டு இதே நிலையை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 
English summary
Top 10 Best Selling Cars Of 2015.
Story first published: Friday, January 1, 2016, 18:42 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos