ஆல்ட்டோ அஸ்திவாரத்தை கடகடக்க வைத்த க்விட்.... ஏப்ரலில் டாப் 15 கார்கள்!

Written By:

யாருமே எதிர்பாராத வகையில், ஆல்ட்டோ மார்க்கெட்டை கடகடக்க வைத்திருக்கிறது ரெனோ க்விட் கார். ஆம், கடந்த மாத விற்பனையின்படி, ஆல்ட்டோ கார் விற்பனை தடாலடியாக சரிந்தது. அதேவேளையில், ரெனோ க்விட் காரின் கை ஓங்கியது.

எனவே, அடுத்து வரும் மாதங்களில் ஆல்ட்டோ காருக்கு கடும் நெருக்கடியை ரெனோ க்விட் கார் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாத விற்பனையில் டாப் 10 கார்களையும், ரெனோ க்விட் கார் பிடித்த இடத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

 15. மஹிந்திரா பொலிரோ

15. மஹிந்திரா பொலிரோ

டாப் 10 பட்டியலில் 5வது இடத்தில் ஜம்பமாய் அமர்ந்திருந்த மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி தற்போது புத்தம் புது மாடல்களின் வரவால், அடித்து கீழே தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த மாதத்தில் 5,785 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. போட்டிகள் நிறைந்திருந்தாலும், மஹிந்திராவுக்கு குறிப்பிடத்தக்க விற்பனை பங்களிப்பை வழங்கி வருகிறது.

14. ஹோண்டா சிட்டி

14. ஹோண்டா சிட்டி

கடந்த மாதம் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையின்படி, ஹோண்டா சிட்டி முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் 5,793 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அசத்தலான டிசைன், தரம் போன்றவை வாடிக்கையாளர் மனதில் நிறைந்துவிட்டது.

13. மாருதி ஈக்கோ

13. மாருதி ஈக்கோ

மாருதி ஈக்கோ காரும் டாப் 15 பட்டியலில் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது. விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார் என்பதே இதன் பலம். கடந்த மாதம் 6,164 ஈக்கோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

12. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

12. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி நம்பிக்கையை விட்டாரா பிரெஸ்ஸா வீணடிக்கவில்லை. கடந்த மாதத்தில் 7,832 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மினி எஸ்யூவி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டா அளவுக்கு கவர்ச்சியாக இல்லையென்றாலும், குறைவான பராமரிப்பு, மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க், சரியான விலை போன்றவை இந்த காரை தேர்வு செய்வதற்கான காரணங்கள்.

11. ஹூண்டாய் க்ரெட்டா

11. ஹூண்டாய் க்ரெட்டா

எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச்சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது க்ரெட்டா. கடந்த மாதத்தில் 7,900 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. கவர்ச்சியான டிசைன், வசதிகள், எஞ்சின் ஆப்ஷன்கள் இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

10. மாருதி ஓம்னி

10. மாருதி ஓம்னி

மாருதி ஈக்கோ கார் போன்றே டாப் 15 பட்டியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தம் மற்றொரு மாருதி கார் மாடல். கடந்த மாதத்தில் 8,356 மாருதி ஓம்னி கார்கள் விற்பனையாகிருக்கின்றன. மிக குறைவான விலையில், அதிகம் பேர் பயணிப்பதற்கும், குறுகலான இடங்களில் பயன்படுத்துவதற்கும் சிறந்த மாடல். தவிரவும், சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ் போன்ற பயன்பாடுகளிலும் இருக்கிறது.

09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ கார் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் 8,548 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. குறைவான விலையில் டீசல் எஞ்சின் ஆப்ஷன், அதிக மைலேஜ், ஏஎம்டி கியர்பாக்ஸ், குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட அடக்கமான கார் என்பது இதன் பலம்.

08. ஹூண்டாய் எலைட் ஐ20

08. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதத்தில் சிறிய வித்தியாசத்தில் மாருதி பலேனோவிடம் பின்தங்கியது ஹூண்டாய் எலைட் ஐ20. கடந்த மாதத்தில் 9,400 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. சிறந்த டிசைன்தான் இந்த காரின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தும் விஷயம்.

07. மாருதி பலேனோ

07. மாருதி பலேனோ

கடந்த மாதத்தில் 9,562 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. வாடிக்கையாளர்களை நிறைவை தரும் விலை, கவரும் வடிவமைப்பு, வசதிகள் இந்த காரை முன்னிலைப்படுத்துகிறது.

06. ரெனோ க்விட்

06. ரெனோ க்விட்

டாப் 10 பட்டியலில் அதிரடியாக நுழைந்து, தற்போது வெகவேகமாக மேலே ஏறி வருகிறது ரெனோ க்விட் கார். கடந்த மாதத்தில் 9,795 ரெனோ க்விட் கார்கள் விற்பனையாகிருக்கின்றன. மிக குறைவான விலையில் எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்றமும், சிறப்பம்சங்களும் முன்னிலைப்படுத்துகிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதத்தில் 9,840 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகிருக்கின்றன. பட்ஜெட் விலையில் சிறந்த வசதிகள், டிசைன் அம்சங்கள் கொண்ட கார் என்பதே இதன் விற்பனை சிறப்பாக இருப்பதற்கான காரணங்கள்.

04. மாருதி டிசையர்

04. மாருதி டிசையர்

கடந்த மாதம் மாருதி வேகன் ஆர் காரிடம் பின்தங்கியது மாருதி டிசையர். கடந்த மாதத்தில் 13,256 டிசையர் கார்கள் விற்பனையாகிருக்கின்றன. குறைவான பராமரிப்பு கொண்ட செடான் கார் என்பதும், மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த காரை தூக்கிப் பிடிக்கும் விஷயங்கள்.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல். அதிக ஹெட்ரூம் இருப்பதோடு, நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது. கடந்த மாதத்தில் 15,323 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி உள்ளன.

 02. மாருதி ஸ்விஃப்ட்

02. மாருதி ஸ்விஃப்ட்

இந்தியர்களின் மனம் கவர்ந்த ஹேட்ச்பேக் கார் மாடல். கடந்த மாதம் 15,661 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகிருக்கின்றன. துள்ளலான தோற்றம், நம்பகமான எஞ்சின்கள், அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு, சரியான விலை போன்றவை இந்த காருக்கான மார்க்கெட்டை நிலையாக வைத்திருக்கிறது.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதம் மாருதிக்கு சிறப்பான மாதம்தான். இல்லையென்று சொல்லவில்லை. மொத்த விற்பனை சிறப்பாக இருந்தாலும், ஆல்ட்டோ காரின் விற்பனை தடாலடியாக குறைந்திருப்பது அந்த நிறுவனத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாதத்திற்கு சராசரியாக 20,000 முதல் 22,000 என்று இருந்த ஆல்ட்டோ விற்பனை கடந்த மாதம் 16,583 கார்களாக குறைந்துவிட்டது. க்விட் காரின் தாக்கம் வந்த புதிதில் இல்லையெனினும், கடந்த மாதம் மாருதிக்கு அதிகமாக தெரிந்துள்ளது. வரும் மாதங்களில் ஆல்ட்டோ மீண்டு வருமா அல்லது க்விட் காரிடம் தன் இடத்தை விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 
English summary
Top 10 Selling Cars In April 2016; A New Car Is Threatening The Top Seller.
Story first published: Tuesday, May 10, 2016, 18:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark