பிப்ரவரி விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்... ரெனோ க்விட் அசத்தல்

Written By:

வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் பயத்தால் கார் விற்பனை சற்றே அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட சற்று மந்தமான மாதமாகவே கார் நிறுவனங்களுக்கு அமைந்தது. மேலும், ஹரியானாவில் நடந்த ஜாட் சமூகத்தினரின் போராட்டத்தால், மாருதி நிறுவனத்தின் விற்பனையில் சிறிது சுணக்கம் காணப்பட்டது.

ஆயினும், பிப்ரவரி நிலவரத்தில் முதல் 10 இடங்களில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் அதிக அளவில் இடம்பிடித்து அசத்தியுள்ளன. அதேநேரத்தில், ரெனோ க்விட் காரும் டாப் 10 பட்டியலில் சிறப்பான எண்ணிக்கையுடன் இடம்பிடித்து காலரை தூக்கி விட்டுக் கொண்டுள்ளது. வாருங்கள், விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்த டாப் 10 கார் மாடல்களின் விபரங்களை காணலாம்.

 10. மாருதி சியாஸ்

10. மாருதி சியாஸ்

கடந்த மாதம் மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் முதலிடத்தில் ஆட்சி செய்து வந்த ஹோண்டா சிட்டி காரை மாருதி சியாஸ் வீழ்த்தியது. கடந் மாதம் 4,880 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், 5,162 மாருதி சியாஸ் கார்கள் விற்பனையாகி மிட்சைஸ் செக்மென்ட்டில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த பட்டியலில் 10வது இடத்தையும் பெற்றது. மாருதி சியாஸ் காரின் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாடலுக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதும் முக்கிய காரணம்.

09. ஹூண்டாய் இயான்

09. ஹூண்டாய் இயான்

சிறிய கார் செக்மென்ட்டில் ரெனோ க்விட் வருகையால், ஹூண்டாய் இயான் காரின் விற்பனையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 5,539 இயான் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. வரும் மாதங்களில் ரெனோ க்விட் காரின் நெருக்கடியை ஹூண்டாய் இயான் சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

08. மாருதி பலேனோ

08. மாருதி பலேனோ

கடந்த மாதம் 8வது இடத்தில் மாருதி பலேனோ கார் உள்ளது. கடந்த மாதத்தில் 6,888 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகியுள்ளன. சிறப்பான டிசைன், இடவசதி, விலை ஆகியவை இந்த காரின் விற்பனைக்கு சாதகமான அம்சங்களாக இருக்கின்றன.

07. ரெனோ க்விட்

07. ரெனோ க்விட்

கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் 7வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது ரெனோ க்விட் கார். அசத்தலான டிசைன், விலை, சிறப்பம்சங்களில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. கடந்த மாதம் 7,544 ரெனோ க்விட் கார்கள் விற்பனையாகியுள்ளன. உற்பத்தியை அதிகரிக்க ரெனோ திட்டமிட்டு இருப்பதால், வரும் மாதங்களில் விற்பனை எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளது. பட்டியலில் 6 மாருதி கார்களும், 3 ஹூண்டாய் கார்களும் பிடித்துவிட்ட நிலையில், ஒரேயொரு தப்பு முதலாக ரெனோ க்விட் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் 6வது இடத்தை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பிடித்தது. கடந்த மாதத்தில் 8,419 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியுள்ளன. மாருதி பலேனோ வருகையின் காரணமாக யாதொரு பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது. டிசைன், வசதிகள்தான் இந்த காரை விற்பனையில் தூக்கிப் பிடித்து வருகிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் 5வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பெற்றது. பட்ஜெட் விலையில் பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடல் என்பதே இதன் பலம். டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் சிறந்த சரிவிகிதம் கொண்ட சாய்ஸாக விளங்குகிறது. கடந்த மாதத்தில் 8,898 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியுள்ளன.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதத்தில் 14,209 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன. குறைந்த பராமரிப்பு செலவு, அதிக ஹெட்ரூம், வசதிகள், விலை, மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை இந்த காரின் விற்பனையை ஸ்திரமாக வைத்திருக்கிறது.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி பலேனோ வருகை தந்தாலும், மாருதி ஸ்விஃப்ட் காரின் மவசு குறையவில்லை. கடந்த மாதத்தில் 15,475 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. டிசைன், விலை, மைலேஜ் போன்ற அம்சங்களில் வெற்றிகரமான மாடல்.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

நடுத்தர வர்க்கத்தினரின் செடான் கார் ஆசையை எளிதாக நிறைவேற்றும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனால், விற்பனையில் தொடர்நது உயர பறக்கிறது. கடந்த மாதத்தில் 17,410 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன. குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ், சரியான விலை, சிறப்பான சர்வீஸ் கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

ரெனோ க்விட் காரின் வருகையால் பாதிப்பு இல்லாமல் தனது முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது மாருதி. கடந்த மாதத்தில் 21,286 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. சிறிய கார் மார்க்கெட்டுக்கு சர்வீஸ் கட்டமைப்பு, உதிரிபாகங்கள் சப்ளை, பராமரிப்பு செலவு போன்றவற்றில் மாருதி ஜாம்பவான். மேலும், நம்பகமான மாடல் என்பதும் ஆல்ட்டோ மார்க்கெட் நிலையாக செல்கிறது.

 
English summary
Let's take a look at top 10 selling cars for the month of November 2015.
Story first published: Friday, March 4, 2016, 12:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark