மார்ச்சில் டாப் 10 கார்கள்... ஹூண்டாய் கார்களை கீழே தள்ளிய க்விட்!

Written By:

கடந்த மாதம் விற்பனை பட்டியலில் மிக முக்கிய இடத்தை ரெனோ க்விட் கார் பிடித்து அசத்தியிருக்கிறது. மேலும், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களை பின்னுக்குத் தள்ளி கார் மார்க்கெட்டை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

கடந்த மாத்தில் ரெனோ க்விட் கார் எந்த இடத்தை பிடித்திருக்கிறது, பிற கார்களின் விற்பனை எண்ணிக்கை குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 10. ஹோண்டா சிட்டி

10. ஹோண்டா சிட்டி

கடந்த மாதம் 10வது இடத்தை ஹோண்டா சிட்டி கார் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 5,662 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட தற்போது ஹோண்டா சிட்டி விற்பனை 42 சதவீதம் குறைந்திருக்கிறது. இருந்தாலும், மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் முதல் இடத்தில் உள்ளது. டிசைன், தரம், மைலேஜ் போன்றவை இந்த காரின் விற்பனையை ஓரளவு நல்ல எண்ணிக்கையில் வைத்திருக்கிறது.

09. மாருதி பலேனோ

09. மாருதி பலேனோ

கடந்த மாதம் 9வது இடத்தில் மாருதி பலேனோ கார் உள்ளது. கடந்த மாதத்தில் 6,236 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. டிசைன், வசதிகள், இடவசதி, மைலேஜ், விலை போன்றவை இந்த காருக்கு வலு சேர்க்கின்றன.

08. ஹூண்டாய் எலைட் ஐ20

08. ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 8வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 8,713 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைனிலும், வசதிகளிலும் அசத்தும் இந்த கார் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் விற்பனையுடன் ஒப்பிடுகையில், விற்பனை 16 சதவீதம் குறைந்துள்ளது.

 07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

கடந்த மாதம் 7வது இடத்தை மாருதி செலிரியோ பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 8,859 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அடக்கமான வடிவம், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன், டீசல் மாடல், சிறப்பான மைலேஜ், குறைவான விலை, குறைந்த பராமரிப்பு என இந்த காரின் சாதகமான அம்சங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த சில மாதங்களாக 5வது இடத்தில் இருந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 9,544 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட விற்பனை 8 சதவீதம் கூடியிருக்கிறது. சிறந்த டிசைன், வசதிகள் போன்றவை இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

05. ரெனோ க்விட்

05. ரெனோ க்விட்

அதிரடியாக ஹூண்டாய் கார்களை கீழே இறக்கிவிட்டு, 5வது இடத்தை பிடித்து ஜம்மென்று அமர்ந்துள்ளது ரெனோ க்விட் கார். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் கார் முன்பதிவிலும் அசத்தி வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக க்விட் காரின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆம், கடந்த ஆண்டு 9,743 க்விட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அசத்தலான க்ராஸ்ஓவர் ரக டிசைன், சிறப்பம்சங்கள், மிக குறைவான விலை போன்றவை இந்த காரை தூக்கிப் பிடிக்கின்றன.

 04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

முதல் நான்கு இடங்கள் மாருதி கார்களுக்குள்ளேயே சுற்றி வருகின்றன. அந்த வகையில், நான்காவது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் கார் பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 14,524 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. தொடர்ந்து மூன்றாவது இடத்திலிருந்து வந்த ஸ்விஃப்ட் காருக்கு தனது பங்காளியான பலேனோ மூலமாக நெருக்கடி ஏற்பட்டிருப்பது விற்பனை மூலமாக தெரிகிறது. கடந்த ஆண்டு மார்ச் விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச்சில் 13 சதவீதம் விற்பனை குறைந்துவிட்டது.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர் கார் 3வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 14,577 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த மாதத்தில் 4 சதவீதம் விற்பனை குறைந்தது. அதிக ஹெட்ரூம் இடவசதி, குறைவான விலை, நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற டிசைன், அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு போன்றவை இந்த காரின் சாதகமான அம்சங்கள்.

 02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த மாதம் 2வது இடத்தை மாருதி டிசையர் பிடித்தது. மார்ச்சில் 17.796 டிசையர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. செடான் கார் ரகத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். விலை, குறைவான பராமரிப்பு, வசதிகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

ரெனோ க்விட் பூகம்பம் வந்தாலும், விற்பனையில் அசைக்க முடியாத எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது மாருதி ஆல்ட்டோ கார் பிராண்டு. கடந்த மாதத்தில் 22,101 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. குறைந்த விலை, மாருதியின் சிறப்பான வாடிக்கையாளர் சேவை, குறைவான பராமரிப்பு செலவு போன்றவை இந்த காரின் சாதகமான அம்சங்கள்.

 
English summary
Let's take a look at top best 10 selling cars for the month of March 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark