உலகின் அதிவேக டாப் 10 எஸ்யூவி வகை கார் மாடல்கள்!

Written By:

அதிவேக கார் என்றாலே சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் தாழ்வான அமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படை விதிகள் மனதில் கொள்ளப்படுகின்றன. ஆனால், கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ப அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், இறுக்கமான சஸ்பென்ஷன் அமைப்புடன் வடிவமைக்கப்படும் எஸ்யூவி வகை மாடல்கள் அதிவேகத்தில் செல்லும்போது, அதன் நிலைத்தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பது தெரிந்த விஷயம்.

ஆனால், அதிவேகமும் வேண்டும், சிறந்த ஆக்சிலேரசன் கொண்டதாக இருப்பதோடு, அது எஸ்யூவி வகையறாவாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு லேண்ட்ரோவர், போர்ஷே, பென்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிவேக எஸ்யூவி மாடல்களை உருவாக்கி வருகின்றன. அதில், சிறந்த ஆக்சிலரேசன் கொண்ட அதிவேக எஸ்யூவி மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் வரிசைப்படுத்தியுள்ளோம். இந்திய சாலை நிலை எப்படியிருந்தாலும், இதில் பல மாடல்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு கிடைக்கிறது என்பதையும் மனதில் கொள்க.

10. லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்

10. லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்

ஆஃப்ரோடுக்கு உகந்த சொகுசு கார் தயாரிப்புக்கு லேண்ட்ரோவர் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. சிறந்த கட்டுமானம், பாதுகாப்பு வசதிகளுடன் தனது சொகுசு எஸ்யூவி மாடல்களை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அதில், சமீபத்திய மாடலாக வரும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியும் அதிவேகமான எஸ்யூவி மாடலாக குறிப்பிடப்படுகிறது.

ஆக்சிலரேசன் திறன்

ஆக்சிலரேசன் திறன்

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரை வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஸ்யூவி 0 - 100கிமீ வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

 09. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி

09. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டில் வெளிவரும் அதிசக்திவாய்ந்த எஸ்யூவி மாடல். மிக கம்பீரமான, அதிக இடவசதி கொண்ட இந்த இரண்டரை டன் எடை கொண்ட எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஞ்சின் ஆப்ஷன், ஆக்சிலரேசன் பவர் ஆகியவற்றை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஆகிசிலரேசன் பவர்

ஆகிசிலரேசன் பவர்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி எஸ்யூவியில் 557 குதிரைசக்தி திறனை வழங்க வல்ல 5.5 லிட்டர் பை-டர்போ வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை பறக்கும்.

08. ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி8

08. ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி8

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவியும் அதிவேக மாடல்களில் ஒன்று. இந்த பாரம்பரியம் மிக்க பிராண்டின் அதிசக்திவாய்ந்த மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிரம்மாண்ட சொகுசு எஸ்யூவியின் திறன்களை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

இந்த எஸ்யூவியில் இருக்கும் 6.4 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 475 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 257 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த எஸ்யூவி அதிவேகத்தில் மட்டுமல்ல, அதிக எரிபொருள் சிக்கனம் தரும் மாடல் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். முழுவதுமாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில், 800 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

07. ஆடி SQ5

07. ஆடி SQ5

ஆடி Q5 சொகுசு எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் மாடல்தான் ஆடி SQ5. மிக சிறப்பான இடவசதி, பாதுகாப்பு அம்சங்களுடன் நவநாகரீக டிசைனும் பலரையும் கவர்கிறது. இரண்டு டன் எடையுடைய இந்த எஸ்யூவியை அதிவேகத்தில் பயணிக்க செய்வதற்கு அதிசக்திவாய்ந்த எஞ்சின் வேண்டுமல்லவா? அந்த எஞ்சின் விபரத்தையும், அதன் டாப் ஸ்பீடு வல்லமையையும் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

ஆடி எஸ்க்யூ5 எஸ்யூவியில் இருக்கும் சூப்பர்சார்ஜ்டு 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 354 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும்.

06. போர்ஷே மசான் டர்போ

06. போர்ஷே மசான் டர்போ

போர்ஷே நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் என்பதுடன், அதிவேக மாடலாகவும் பெருமை பெறுகிறது. டிசைன், வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதுடன், விற்பனையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறது.

ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

இந்த எஸ்யூவியில் இருக்கும் 3.6 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சின் அதிகபட்சமாக 400 எச்பி பவரை அளிக்கும். இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 260 கிமீ வேகம் வரை செல்லும்.

05. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர்

05. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர்

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வடிவமைப்பு பிரிவு உருவாக்கிய முதல் மாடல். நர்பர்க்ரிங் டிராக்கை அதிவேகத்தில் கடந்து சாதனை படைத்தது. ஆஃப்ரோடு மட்டுமின்றி, ஆன்ரோடிலும் கலக்கும் இந்த எஸ்யூவியின் அதிவேக சிறப்புகளை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

இந்த எஸ்யூவியில் இருக்கும் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் அதிகபட்சமாக 550 எச்பி பவரை அளிக்க வல்லது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 260 கிமீ வேகம் வரை செல்லும்.

04. மெர்சிடிஸ் ஜிஎல்இ63 ஏஎம்ஜி

04. மெர்சிடிஸ் ஜிஎல்இ63 ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் விற்பனை செய்யப்படும் மற்றொரு எஸ்யூவி மாடல். ஏஎம்ஜி பாடி கிட் மட்டுமின்றி, அதன் பவர்ஃபுல் எஞ்சினும் இந்த எஸ்யூவியின் மதிப்பை உயர்த்துகிறது.

ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

இந்த எஸ்யூவியில் இருக்கும் 5.5 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 எஞ்சின் அதிகட்சமாக 577 எச்பி பவரை வெளிப்படுத்தும். அத்துடன், 0 - 100 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும்.

03. பென்ட்லீ பென்டைகா

03. பென்ட்லீ பென்டைகா

பென்ட்லீ ஆடம்பர கார் நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி மாடல். இதுவரை 4,000க்கும் அதிகமான முன்பதிவகளை பெற்று அசத்தியிருக்கிறது. உலகின் அதிவேக எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இந்த எஸ்யூவியின் வல்லமைகளை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

இந்த எஸ்யூவியில் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 600 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 301 கிமீ வேகம் வரை செல்லும்.

02. பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம்

02. பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் விற்பனையாகும் சக்திவாய்ந்த க்ராஸ்ஓவர் மாடல். பிற மாடல்களிலிருந்து வித்தியாசமான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின் போன்றவை வாடிக்கையாளர்களை வரிந்து கட்டி வாங்கத் தூண்டுகிறது.

 ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

இந்த க்ராஸ்ஓவர் மாடலில் இருக்கும் சக்திவாய்ந்த எஞ்சின் 567 எச்பி பவரை அளிக்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை 4.0 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும்.

01. போர்ஷே கேயென் டர்போ

01. போர்ஷே கேயென் டர்போ

போர்ஷே நிறுவனம் விற்பனை செய்யும் சக்திவாய்ந்த எஸ்யூவி மாடல். ஸ்டைலான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின், பாதுகாப்பு வசதிகள் இந்த எஸ்யூவின் மீதான ஆர்வத்தை வாடிக்கையாளர்களுக்கு பன்மடங்கு தூண்டுகிறது.

ஆக்சிலரேசன் பவர்

ஆக்சிலரேசன் பவர்

போர்ஷே கேயென் டர்போ எஸ்யூவியில் இருக்கும் வி8 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்மாக 570 எச்பி பவரை அளிக்க வல்லது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் கடந்து விடும். அதிகபட்சமாக 281 கிமீ வேகம் வரை செல்லும்.

 
English summary
Top 10 Fastest Production SUVs in The World Today. Read now in Tamil.
Story first published: Thursday, March 24, 2016, 12:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark