உங்களது காரிலும் இந்த 10 நவீன தொழில்நுட்பங்கள் விரைவில் இடம்பெறலாம்!

Written By:

நாளுக்கு நாள் ஆட்டோமொபைல் துறையின் தொழில்நுட்பங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதுடன், புதிய தொழில்நுட்பங்களின் வருகையும் வெகுவாக அதிகரித்துள்ளன. இதனால், மலிவான விலையில் நவீன தொழில்நுட்பங்களை பெறும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தற்போது ரூ.4 லட்ச ரூபாய்க்கும் குறைவான ரெனோ க்விட் காரில் கூட நேவிகேஷன் வசதியுடன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது உயர்வகை கார்களில் வழங்கப்படும் பல நவீன வசதிகள், அடுத்த சில ஆண்டுகளில் ஸ்விஃப்ட், ஐ20 உள்ளிட்ட கார்களில் கூட வந்துவிடும் என நம்பலாம். அதுபோன்று, நடுத்தர பட்ஜெட் கொண்ட கார்களிலும் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகளை இங்கே பார்க்கலாம்.

10 ஏசி இருக்கைகள்

10 ஏசி இருக்கைகள்

வெளியில் அதிக வெப்பம் நிலவும் காலங்களில் ஏசி சிஸ்டம் சில சமயங்களில் முழுமையான குளிர்ச்சியை வழங்காது. அவ்வாறான சமயங்களுக்கு ஏற்ப குளிர்ச்சி காற்றை வழங்கும் துளைகள் கொண்ட ஏசி இருக்கைகள் அறிமுகமாக இருக்கின்றன. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் சில கார் மாடல்களில் இது கிடைக்கிறது. இதனை ஆக்டிவ் சீட் வென்டிலேசன் என்று குறிப்பிடுகின்றனர். இந்த வசதியை விரைவில் நடுத்தர பட்ஜெட் கார்களில் எதிர்பார்க்கலாம்.

09. சிக்னலை கண்டுணரும் திறன்

09. சிக்னலை கண்டுணரும் திறன்

சாலையில் இருக்கும் போக்குவரத்து சமிக்ஞைகளை கண்டுணர்ந்து எச்சரிக்கும் வசதிதான் இது. வலது புறம் அல்லது இடதுபுறம் செல்வதற்கான குறியீடுகள் மற்றும் வேக வரம்பை கண்டறிந்து தெரிவிக்கும். காரின் முன்புறத்தில் பொருத்தப்படும் நவீன கேமரா மூலமாக குறியீடுகள் கண்டுணரப்பட்டு, சாப்ட்வேர் மூலமாக, மீட்டர் கன்சோலில் இருக்கும் திரையின் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் வாங்கப்போகும் புதிய காரில் இந்த வசதியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

08. நைட் விஷன் கேமரா

08. நைட் விஷன் கேமரா

இரவு நேரத்தில் பாதசாரிகள் மற்றும் விலங்குகள் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் வசதி. காரின் மீட்டர் கன்டோலில் இருக்கும் திரை மூலமாக இது எச்சரிக்கப்டும். வால்வோ வி40, எஸ்60 போன்ற கார்களில் இந்த வசதி இருக்கிறது. அடுத்து என்ன ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற கார்கள் வரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 07. ஹெட் அப் டிஸ்ப்ளே

07. ஹெட் அப் டிஸ்ப்ளே

விலை உயர்ந்த கார் மாடல்களில் இந்த வசதி இடம்பெற்று இருக்கிறது. அதாவது, காரின் வேகம், தடம் மாறும்போது அருகில் வரும் வாகனங்கள் உள்ளிட்ட பல தகவல்களை முன்புற கண்ணாடியில் காட்டும் வசதி இது. இதன்மூலமாக, கார் ஓட்டுனரின் கவனம் சிதறாது. மேலும், கார் எஞ்சின் உள்ளிட்ட பாகங்களில் ஏற்படும் பிரச்னை குறித்தும் எச்சரிக்கும். தற்போது இதனை தனியாக வாங்கிகூட வைக்க முடியும்.

06. இன்டெலிஜென்ட் ஹெட்லைட்ஸ்

06. இன்டெலிஜென்ட் ஹெட்லைட்ஸ்

எதிரில் வரும் வாகனங்களை கண்டுணர்ந்து, அதற்கு தக்கவாறு ஹெட்லைட்டின் பிரகாசத்தை தானாகவே குறைத்துக் கொள்ளும். அதேநேரத்தில், ஓட்டுனருக்கு தேவைப்படும் இடங்களில் போதிய வெளிச்சத்தை வழங்கும். இதன்மூலமாக, எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு கூச்சம் ஏற்படாது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களின் அடுத்த தலைமுறை மாடல்களில் இது நிச்சயம் இடம்பிடிக்கும்.

05. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

05. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஓட்டுனர் ஆக்சிலரேட்டரை மிதிக்காமல், சீரான வேகத்தில் காரை செலுத்தும் தொழில்நுட்பம்தான் க்ரூஸ் கன்ட்ரோல். அதிலும், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்ட கார்கள், அருகில் அல்லது முன்னால் செல்லும் வாகனங்களை கண்டுணர்ந்து அதற்கு தக்கவாறு இடைவெளியில் வேகத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ளும். தற்போதே பல இந்திய கார்களில் கிடைக்கிறது. அடுத்து என்ன ஸ்விஃப்ட், ஃபிகோ போன்ற கார்களில் வரவேண்டியதுதான் பாக்கி.

04. தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம்

04. தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம்

தற்போது அவசியம் இருக்க வேண்டிய தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. சாலையின் குறுக்கே வரும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் மற்றும் வாகனங்களை கண்டுபிடித்து, தானியங்கி முறையில் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தும் தொழில்நுட்பம்தான் இது. மேலும், மோதும் நிலை ஏற்படுவது குறித்து முதலில் ஓட்டுனரை எச்சரிக்கும். ஓட்டுனர் செயல்படவில்லை எனில், தானியங்கி முறையில் வாகனம் பிரேக் பிடித்து நின்றுவிடும். இதனை மத்திய அரசு நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற செய்தாலும் செய்யலாம்.

03. வி2வி கனெக்ட்டிவிட்டி

03. வி2வி கனெக்ட்டிவிட்டி

எதிர்காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பம். முன்னால், பின்னால் மற்றும் அருகில் வரும் வாகனங்களின் வேகம், இடைவெளி போன்றவற்றை வைத்து பாதுகாப்பான வேகத்திலும், இடைவெளியிலும் அனைத்து கார்களும் செல்லும் வகையிலான வலை பின்னல் தொடர்பு அமைப்பாக இது செயல்படும். காரில் வைஃபை வசதி இருந்தால், இந்த தொழில்நுட்பத்தை இயக்க வழியுண்டு. இது உடனடியாக நம் நாட்டில் சாத்தியப்படாது. ஆனாலும், அடுத்த ஒரு தசாப்தத்தில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

02. 180 டிகிரி கேமரா

02. 180 டிகிரி கேமரா

பார்க்கிங் கேமராவை பலர் பயன்படுத்தி வருவீர்கள். ஆனால், இந்த கேமரா காரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். 180 டிகிரி கோணத்தில் சாலையை காட்டும். இதன்மூலமாக, ஓட்டுனரின் கண்களுக்கு புலப்படாத அல்லது கவனிக்க முடியாத இடங்களை இந்த கேமரா மூலமாக பார்க்க முடியும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் ஆப்ஷனலாக இந்த கேமரா வழங்கப்படுகிறது. விரைவில் ஹூண்டாய் க்ரெட்டா போன்ற வாகனங்களில் எதிர்பார்க்கலாம்.

01. செல்ஃப் டிரைவிங் கார் தொழில்நுட்பம்

01. செல்ஃப் டிரைவிங் கார் தொழில்நுட்பம்

இது இந்தியாவில் வருவதற்கு கொஞ்சம் கால தாமதமாகும் விஷயம்தான். ஆனாலும், முழமையான செல்ஃப் டிரைவிங் கார் தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும், நெடுஞ்சாலைகளில் மட்டும் செலுத்துகின்ற தானியங்கி கார் தொழில்நுட்பம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 
English summary
Here is a list of top 10 future technologies that could make it to your car.
Story first published: Friday, May 20, 2016, 16:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark