சொகுசு கார்களும், அதன் மலைக்க வைக்கும் இன்ஸ்யூரன்ஸ் தொகையும்...!!

Written By:

கார்கள் வாங்குவது என்பது மிகவும் அதிக பொருட்செலவுகள் ஆகும் விஷயம் ஆகும். அதுவும் விலை உயர்ந்த கார்களை வாங்க நினைத்தால், அதற்கு ஏற்ற பணத்தையும் செலவு செய்ய நேரிடுகிறது.

கார்களை வாங்கும் செலவுகள் ஒரு பங்கு என்று நினைத்து வாங்கி முடித்துவிட்டால், அத்துடன் செலவுகள் நிற்பதில்லை. நீங்கள் வாங்கிய கார்களை இன்சூரன்ஸ் செய்தற்கும் செலவுகள் ஆகிறது.

இந்த தகவல்கள் Insure.com என்ற வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தித் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இன்சூரன்ஸ் என்பது சாதாரன விஷயமல்ல. கூடுதல் சொகுசுகளுக்காக செய்யபடும் செலவுகளை தவிர, அமெரிக்காவில் இன்சூரன்ஸ் செய்வதற்கு விலை உயர்ந்த கார்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

10. போர்ஷே 911 கரெர்ரா ஜிடி3 ஆர்எஸ்;

10. போர்ஷே 911 கரெர்ரா ஜிடி3 ஆர்எஸ்;

இன்சூரன்ஸ் செலவுகளை தவிர்த்து, அமெரிக்காவில் விலை உயர்ந்த கார்களின் பட்டியலில் 10-வது இடத்தில் போர்ஷே 911 கரெர்ரா ஜிடி3 ஆர்எஸ் உள்ளது.

இந்த போர்ஷே 911 கரெர்ரா ஜிடி3 ஆர்எஸ் மாடலின் விலை 1.18 கோடி ரூபாய் ஆகும். இதை இன்சூரன்ஸ் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு 2.17 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

9) ஆடி ஆர்எஸ்7 குவாட்ரோ பிரெஸ்டீஜ்;

9) ஆடி ஆர்எஸ்7 குவாட்ரோ பிரெஸ்டீஜ்;

9-வது இடத்தில் ஆடி ஆர்எஸ்7 குவாட்ரோ பிரெஸ்டீஜ் மாடல் உள்ளது. இதை ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய 2.18 லட்சம் ரூபாய் செலவாகிறது.

ஆடி ஆர்எஸ்7 குவாட்ரோ பிரெஸ்டீஜ் மாடலின் விலை, 67 லட்சம் ரூபாய் ஆகும்.

ஆடி ஆர்எஸ்7 குவாட்ரோ பிரெஸ்டீஜ், 4.0 லிட்டர், ட்வின் டர்போ, வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 560 பிஹெச்பியை, 4 வீல்களுக்கும் கடத்துகிறது.

8) ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி பிளாக் லாங்க் வீல் பேஸ்;

8) ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி பிளாக் லாங்க் வீல் பேஸ்;

8-வது இடத்தில், ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி பிளாக் லாங்க் வீல் பேஸ் மாடல் உள்ளது. இந்த மாடலின் முழு பெயரையும் படிக்கும் போதே, இதற்கான இன்சூரன்ஸ் செலவுகளும் அதிகமாகும் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்த ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி பிளாக் லாங்க் வீல் பேஸ் (எல்வீபி) தான் இந்த நிறுவனம் சார்பாக கட்டபட்ட மிகவும் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஆகும். இதன் விலை அமெரிக்காவில் 1.34 கோடி ரூபாய் ஆகும்.

இந்த எஸ்யூவி, 550 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதற்ககான ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் செலவு 2.19 லட்சம் ரூபாய் ஆகும்.

7) பிஎம்டபுள்யூ எம்6 கிரான் கூபே;

7) பிஎம்டபுள்யூ எம்6 கிரான் கூபே;

பெர்ஃபார்மன்ஸ் மிகுந்த சொகுசு கார் வாங்க விரும்பினால், அதற்கு அதிக செலவு செய்ய நேரிடும். 7-வது இடத்தில் பிஎம்டபுள்யூ எம்6 கிரான் கூபே மாடல் உள்ளது. இது போன்ற மாடலை வாங்க விரும்பினால், அதற்கு ஆகும் செலவு 79 லட்சம் ரூபாய் ஆகும்.

பிஎம்டபுள்யூ எம்6 கிரான் கூபே மாடல் காரை இன்சூரன்ஸ் செய்ய, ஒரு வருடத்திற்கு, 2.23 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

6) நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ;

6) நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ;

6-வது இடத்தில் நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ மாடல் உள்ளது. இது தான், நிஸான் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்டும் மிகவும் திறன் வாய்ந்த கார் ஆகும்.

நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ மாடல், 3.8 லிட்டர், ட்வின்-டர்போ, வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. 600 பிஹெச்பியை வெளிபடுத்தும் இந்த காரின் விலை அமெரிக்காவில் 1.01 கோடி ரூபாய் ஆகும். இதை ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய, 2.34 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

5) போர்ஷே பனமெரா எஸ் எக்சிக்யூட்டிவ்;

5) போர்ஷே பனமெரா எஸ் எக்சிக்யூட்டிவ்;

5-வது இடத்தில் போர்ஷே பனமெரா எஸ் எக்சிக்யூட்டிவ் மாடல் உள்ளது. பெர்ஃபார்மன்ஸ் நிறைந்த மற்றும் முழு குடும்பத்தை ஏற்றி செல்லும் வகையிலான மாடலாக வேண்டுமெனில் போர்ஷே பனமெரா எஸ் எக்சிக்யூட்டிவ், கட்டாயம் அத்தகைய மாடலாக இருக்கும்.

பயணிகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையிலான, போர்ஷே பனமெரா எஸ் எக்சிக்யூட்டிவ் மாடலை ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய 2.35 லட்சம் ரூபாய் செலவாகிறது.

4) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி;

4) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி;

4-வது இடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி மாடல் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி மாடல், ஏற்கனவே அதிகமான விலையுடைய எஸ்-கிளாஸ் மாடலின் பெர்ஃபார்மன்ஸ் வெர்ஷன் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி மாடல், அமெரிக்காவில் 96.84 லட்சம் ரூபாய் விலையில் விற்கபடுகிறது. இது 5.5 லிட்டர், பை-டர்போ இஞ்ஜின் கொண்டுள்ளது. இதை ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய, 2.37 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

3) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600;

3) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600;

அமெரிக்காவில் இன்சூரன்ஸ் செய்ய, மிகவும் விலை உயர்ந்த கார்களின் பட்டியலில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600, 3-வது இடத்தில் உள்ளது. இது எஸ்-கிளாஸ் மாடலின் நான்-பெர்ஃபார்மன்ஸ் வெர்ஷன் ஆகும்.

நான்-பெர்ஃபார்மன்ஸ் வெர்ஷன் வெர்ஷன் என்று சொல்லபடுவதால், இந்த மாடலை பற்றி சாதாரனமாக நினைத்து விட வேண்டாம். இதன் ஸ்டாண்டர்ட் வெர்ஷனே, பை-டர்போ, வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த மாடலின் விலை 1.14 கோடி ரூபாய் ஆகும். இதை ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய, 2.39 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

2) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்65 ஏஎம்ஜி;

2) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்65 ஏஎம்ஜி;

2-வது இடத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் மறுபடியும் 2-வது இடத்தில் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்65 ஏஎம்ஜி மாடல், 577 பிஹெச்பி, பை-டர்போ, வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது.

அமெரிக்காவில், இந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்65 ஏஎம்ஜி மாடலின் விலை, 1.01 கோடி ரூபாய் ஆகும். ஒரு வருடத்திற்கு, இந்த மாடலை இன்சூரன்ஸ் செய்ய 2.56 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

1) டாட்ஜ் வைபர் ஜிடி;

1) டாட்ஜ் வைபர் ஜிடி;

அமெரிக்காவில் இன்சூரன்ஸ் செய்ய, மிகவும் விலை உயர்ந்த கார்களின் பட்டியலில் டாட்ஜ் வைபர் ஜிடி மாடல் தான் உள்ளது. முதலாவது இடத்தில் லம்போர்கினி அல்லது இருந்திருக்கலாம் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கலாம்.

அமெரிக்காவில் தயாரிக்கபடும் டாட்ஜ் வைபர் ஜிடி மாடலின் விலை, அமெரிக்காவில் 66.24 லட்சம் ரூபாய் ஆகும். இதனை இன்சூரன்ஸ் செய்ய ஒரு வருடத்திற்கு 2.73 லட்சம் ரூபாய் செலவாகிறது.

முக்கிய அறிவிப்பு;

முக்கிய அறிவிப்பு;

அமெரிக்காவில் இந்த மாடல்களின் விலைகள், இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டால், இதன் குறைவாக இருக்கலாம் என தவறாக நினைத்து விடக்கூடாது.

உதாரணமாக, பிஎம்டபுள்யூ எம்6 கிரான் கூபே மாடலின் விலை, அமெரிக்க சந்தைகளில் சுமார் 79 லட்சம் ரூபாய் ஆகும். அதை ஒரு வருடத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய 2.23 லட்சம் ரூபாய் செலவாகிறது.

இதே பிஎம்டபுள்யூ எம்6 கிரான் கூபே மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரபட்டால், இதன் ஆன் - ரோட் விலை 1.95 கோடி ரூபாயாக இருக்கும். மேலும், இதை இந்தியாவில் இன்சூரன்ஸ் செய்ய ஒரு வருடத்திற்கு 5.96 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள்!

வெள்ளத்தில் மூழ்கிய காரில் ஏற்படும் பிரச்னைகளும், சரிசெய்யும் முறைகளும்...!!

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
The Top 10 Expensive Cars to be insured in America are presented. These data are gathered from Insure.com . Some might think that, cost of Cars and their insurance expenses are more in US and less in India. But, it is vice-versa. When Cars are brought to India, they cost double than their original cost and insurance expenses also becomes double or more.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark