விற்பனையில் டாப் 10 கார்கள்... பட்டியலில் இடம்பிடித்த டாடா டியோகா கார்!

Written By:

செல்லாது அறிவிப்பால் நாடே பரபரப்பான நிலையிலும், கடந்த நவம்பர் மாதம் கார் விற்பனை ஓரளவு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக, மாருதி கார் நிறுவனத்தின் மாடல்கள் வழக்கம்போல் அசத்தியது. ஆனால், இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மாடல்கள் செல்லாது அறிவிப்பின் தாக்கத்தால் சற்று சரிவை சந்தித்துள்ளன.

அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவழியாக டியாகோ கார் மூலமாக இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது. எந்தெந்த கார் மாடல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

 10. டாடா டியாகோ

10. டாடா டியாகோ

டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது டாடா டியாகோ கார். கடந்த மாதம் 6,008 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அருமையான டிசைன், நவீன வசதிகள், குறைவான விலை போன்றவை இந்த காருக்கு சிறப்பான இடத்தை பெற்று தந்துள்ளது.

 09. ஹூண்டாய் எலைட் ஐ20

09. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனை கணிசமாக குறைந்தது. செல்லாது அறிவிப்புதான் முக்கிய காரணமாக பார்க்கலாம். கடந்த மாதத்தில் 7,601 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், தரம், வசதிகள் என அனைத்திலும் சிறப்பான மாடல்.

 08. ரெனோ க்விட்

08. ரெனோ க்விட்

ரெனோ க்விட் காரின் விற்பனையிலும் லேசான சுணக்கம் ஏற்பட்டது. கடந்த மாதத்தில் 7,847 க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட் விலையில் அந்தஸ்தை கூட்டும் அம்சங்கள் நிரம்பவே உள்ளன.

 07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ கார் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 9,543 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அனைத்திலும் சிறப்பான பட்ஜெட் கார் மாடல் என்பது இதன் பலம்.

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விற்பனையிலும் சிறிது சரிவு காணப்பட்டது. கடந்த மாதத்தில் 11,059 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், தரம், வசதிகள் என அனைத்திலும் நிறைவான பட்ஜெட் கார் மாடல்.

05. மாருதி பலேனோ

05. மாருதி பலேனோ

முதல் 5 இடங்கள் மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடித்துள்ளன. அந்த வகையில், 5வது இடத்தை மாருதி பலேனோ கார் பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த மாதத்தில் 11,093 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிரிமியம் ஹேட்ச்பேக் காரை விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாருதி மாடல் என்பது இதன் பலம்.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் 4வது இடத்தை தக்க வைத்தது. கடந்த மாதத்தில் 14,594 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் துள்ளலான தோற்றமும், செயல்திறன் மிக்க எஞ்சினும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

குறைவான பட்ஜெட்டில் சிறந்த அம்சங்களை கொண்ட கார் மாடல். கடந்த மாதத்தில் 15,556 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார் மாடல்.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

மாருதி டிசையர் காரின் மவுசு அனைவரும் அறிந்ததே. கடந்த மாதத்தில் 17,218 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பது இதன் மிகப்பெரிய பலம்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதம் செல்லாது அறிவிப்பு வந்தபோதிலும் நிறைவான விற்பனை எண்ணிக்கையை மாருதி வழங்கியிருக்கிறது ஆல்ட்டோ கார். கடந்த மாதத்தில் 23,320 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறைவான விலையில் கிடைக்கும் நம்பகமான கார் மாடல்.

English summary
Tata Tiago has entered the top 10 selling cars for the month of November 2016 with sales of 6,008 units and has contributed 47 percent of the total passenger car sales for Tata Motors.
Story first published: Saturday, December 3, 2016, 13:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark