விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்!

Written By:

வாடிக்கையாளர் சேவை, கார்களின் நம்பகத்தன்மை, விலை, விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில், கார் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை அமைகிறது.

தரமான கார் மாடல்களை வைத்திருந்தாலும், சேவையின் தரம், பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் சப்ளை மற்றும் அதன் விலை போன்றவையும் விற்பனையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. கடும் சந்தைப்போட்டிக்கு மத்தியிலும் கடந்த ஜூலை மாத நிலவரப்படி, விற்பனையில் முதல் 10 இடங்களை வகிக்கும் கார் நிறுவனங்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 10. ஃபோக்ஸ்வேகன்

10. ஃபோக்ஸ்வேகன்

சிறந்த கட்டமைப்புடைய கார்களை தயாரித்து விற்பனை செய்யும் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தடுமாற்றமான நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தியாவுக்கான அம்சங்களுடன் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய அமியோ காம்பேக்ட் செடான் காரின் விற்பனை அந்த நிறுவனத்திற்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. கடந்த மாதத்தில் 4,301 கார்களை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது. இதில், 2,200 கார்கள் அமியோ காரின் பங்களிப்பு. அதாவது, ஒட்டுமொத்த விற்பனையில் 51 சதவீத பங்களிப்பை அமியோ கொடுத்திருக்கிறது.

09. நிசான்

09. நிசான்

ஏற்றுமதியை வைத்து இந்தியாவில் வர்த்தகத்தை நகர்த்தி வந்த ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்திற்கு கடந்த மாதம் சிறப்பாகவே இருந்தது. அந்த நிறுவனம் தனது டட்சன் துணை பிராண்டில் அறிமுகம் செய்த ரெடிகோ கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால், கடந்த மாதத்தில் 6,418 கார்களை நிசான் விற்பனை செய்திருக்கிறது. இதில், 3,940 கார்கள் டட்சன் ரெடிகோ கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நிசான் விற்பனையில் 61 சதவீத பங்களிப்பை டட்சன் ரெடிகோ கார் வழங்கியிருக்கிறது.

 08. ஃபோர்டு

08. ஃபோர்டு

கடந்த மாதத்தில் 8வது இடத்தை அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 7,088 கார்களை ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது. இதில், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிதான் ஃபோர்டு நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.

 07. ரெனோ

07. ரெனோ

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம் மிக குறுகிய காலத்தில் இந்திய மார்க்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக மாறியிருக்கிறது. கடந்த மாதத்தில் 11,968 கார்களை ரெனோ விற்பனை செய்திருக்கிறது. இந்தியாவின் பிளாக் பஸ்டர் மாடலாக வலம் வரும் க்விட் கார்தான் ரெனோ விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் ரெனோ கார்களில் மூன்றில் இரண்டு க்விட் என்பது குறிப்பிடத்தக்கது.

06. டொயோட்டா

06. டொயோட்டா

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா 6வது இடத்தில் உள்ளது. டெல்லியில், 2,000சிசி திறனுக்கும் அதிகமான டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் டொயோட்டாவின் வர்த்தகம் வெகுவாகவே பாதிக்கப்பட்டது. அப்படியிருந்தும் கடந்த மாதத்தில் 12,404 கார்களை டொயோட்டா விற்பனை செய்திருக்கிறது. இதில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.

05. டாடா மோட்டார்ஸ்

05. டாடா மோட்டார்ஸ்

கடந்த ஜூலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. மாதத்திற்கு மாதம் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகனப் பிரிவின் விற்பனை சரிந்த நிலையில், அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா டியாகோ காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது, அந்த நிறுவனத்துக்கு ஆறுதலை தந்துள்ளது. முன்பதிவும் கணிசமாக இருப்பதால் தொடர்ந்து டியாகோ கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

04. ஹோண்டா கார்ஸ்

04. ஹோண்டா கார்ஸ்

கடந்த மாதத்தில் 14,025 கார்களை விற்பனை செய்து 4வது இடத்தில் ஹோண்டா கார் நிறுவனம் உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியும் நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் 3,333 பிஆர்வி எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது அந்த நிறுவனத்தின் விற்பனையில் 24 சதவீத பங்களிப்பாகும். அதற்கடுத்து, சிட்டி , ஜாஸ் மற்றும் அமேஸ் கார்களும் தொடர்ந்து நல்ல பங்களிப்பை வழங்கி வருகின்றன.

03. மஹிந்திரா

03. மஹிந்திரா

எஸ்யூவி வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 16,337 கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருக்கிறது. கேயூவி100, பொலிரோ ஆகிய எஸ்யூவி மாடல்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன.

 02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

இரண்டாவது இடத்தில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இடம்பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 41,201 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் உள்ள மஹிந்திராவுக்கும், இரணடாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்துக்கு விற்பனை எண்ணிக்கை மிக அதிக வித்தியாசத்தை கொண்டிருப்பதை காணலாம். கிராண்ட் ஐ10 கார்தான் ஹூண்டாய் நிறுவனத்துக்கு அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது. அடுத்து எலைட் ஐ20 மற்றும் க்ரெட்டா கார்களும் ஹூண்டாய் விற்பனையில் தோள் கொடுத்து வருகின்றன.

 01. மாருதி சுஸுகி

01. மாருதி சுஸுகி

இந்தியாவின் நம்பர்-1 கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி. யாருமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கிறது. கடந்த மாத்தில் 1,25,778 கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது. ஆல்ட்டோ, டிசையர், வேகன் ஆர், ஸ்விஃப்ட் ஆகிய மாடல்கள் மாருதிக்கு மிக அதிக பங்களிப்பை வழங்கி வருவதுடன், இந்தியாவின் டாப் 10 கார்களின் பட்டியலிலும் முன்னிலை வகிக்கின்றன.

பிரச்னைகள் குறைவான நம்பகமான கார்கள்

பிரச்னைகள் குறைவான நம்பகமான கார்கள்

 
English summary
Top 10 Selling Passenger Vehicle Brands In India During July 2016.
Story first published: Wednesday, August 3, 2016, 9:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark