டீசல் கார்களுக்கு இணையாக அதிக மைலேஜ் தரும் டாப் 5 பெட்ரோல் கார்கள்!

By Saravana Rajan

டீசல் கார்கள் மீது விதிக்கப்பட்ட தடை மற்றும் அச்சம் காரணமாக பெட்ரோல் கார்கள் மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. விலை கூடுதல், எதிர்காலத்தில் டீசல் கார்களின் ஆயுளை அரசாங்கம் குறைத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதே இதற்கு காரணம். கூடுதல் விலை, அதிக பராமரிப்பு செலவு போன்ற பிரச்னைகள் இருந்தாலும் டீசல் கார்களை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் அதிக மைலேஜ் தரும் என்பதே.

இந்தநிலையில், பல லட்சம் போட்டு டீசல் கார்களை வாங்கும்போது எதிர்காலத்தில் மதிப்பு தடாலடியாக குறைந்துவிடுவோ என்ற அச்சம் இருக்கிறது. எனவே, இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள தைரியமில்லாத நிலையில், டீசல் கார்களை போன்றே சிறப்பான மைலேஜ் தரும் 5 பட்ஜெட் விலையிலான பெட்ரோல் கார் மாடல்களின் விபரங்களை இங்கே வழங்கியிருக்கிறோம். அவற்றை தொடர்ந்து காணலாம்.

05. டாடா டியாகோ

05. டாடா டியாகோ

கொடுக்கும் பணத்திற்கு சிறந்த பட்ஜெட் கார் மாடலாக டாடா டியாகோ கார் வந்திருக்கிறது. டிசைன், சிறப்பம்சங்கள், வசதிகளில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எஞ்சின் செயல்திறனை சூழலுக்கு ஏற்ப மாற்றி இயக்கும் வசதி போன்றவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்கள். இதையெல்லாம் விடுங்க, மைலேஜ் எவ்வளவு என்கிறீர்களா?

டியாகோ மைலேஜ்

டியாகோ மைலேஜ்

டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. அது சோதனை நிலைகளில் கணக்கிடப்பட்ட மைலேஜ். ஆனால், நடைமுறையிலும் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜுக்கு மேல் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதாவது, டீசல் கார்களுக்கு இணையானதாகவே இதன் மைலேஜ் இருக்கும். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வழங்கும்.

04. மாருதி ஆல்ட்டோ கே10

04. மாருதி ஆல்ட்டோ கே10

இந்தியாவின் பிரபலமான பட்ஜெட் கார் பிராண்டு மாருதி ஆல்ட்டோ. அந்த காரின் சக்திவாய்ந்த மாடலாக இது விற்பனையில் உள்ளது. சாதாரண ஆல்ட்டோவைவிட கூடுதல் வசதிகள் உள்ளன. சீட் பெல்ட் வார்னிங் வசதி, திருட்டு எச்சரிக்கை அலாரம், டாக்கோமீட்டர், பெரிய அளவு டயர்கள், பனி விளக்குகள் போன்றவை இதில் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது. இதெல்லாம் சரி, மைலேஜ், மைலேஜ் எவ்வளவு?

ஆல்ட்டோ கே10 மைலேஜ்

ஆல்ட்டோ கே10 மைலேஜ்

மாருதி ஆல்ட்டோ கே10 கார் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாருதி கார்கள் மைலேஜில் ஏமாற்றம் தராது என்பதால், நம்பி தேர்வு செய்யலாம். எனவே, இந்த காரும் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜுக்கு மேல் தரும். இந்த காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

 03. மாருதி ஆல்ட்டோ 800

03. மாருதி ஆல்ட்டோ 800

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டு. நகர்ப்புறத்திற்கு ஏற்ற அடக்கமான கார். விலை, பராமரிப்பு செலவு என மாருதி வாடிக்கையாளர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் மாடல். அனைத்தையும் தாண்டி இந்த கார் இந்தளவு வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருப்பதற்கு மைலேஜும் முக்கிய காரணம்.

ஆல்ட்டோ 800 மைலேஜ்

ஆல்ட்டோ 800 மைலேஜ்

மாருதி ஆல்ட்டோ 800 கார் லிட்டருக்கு 24.7 கிமீ மைலேஜ் தருவதாக மாருதி தெரிவிக்கிறது. இந்த காரில் இருக்கும் 796சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வழங்கும். பேஸ் மாடல் ரூ.2.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

02. டட்சன் ரெடிகோ

02. டட்சன் ரெடிகோ

ரெனோ க்விட் கார் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட டட்சன் ரெடிகோ கார் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் தோற்றம் போட்டியாளர்களிடத்திலிருந்து வேறுபட்டு இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. சரி, பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறதே, அப்படியானால் மைலேஜ் எவ்வளவோ என்று கேட்கிறீர்களா?

ரெடிகோ கார் மைலேஜ்

ரெடிகோ கார் மைலேஜ்

டட்சன் ரெடிகோ கார் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது. ஓட்டுதல் முறையை பொறுத்து நடைமுறையில் லிட்டருக்கு 20 முதல் 21 கிமீ மைலேஜ் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த காரில் இருக்கும் 799சிசி பெட்ரோல் எஞ்சின் 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

01. ரெனோ க்விட்

01. ரெனோ க்விட்

இப்போது மார்க்கெட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் ரெனோ க்விட் கார்தான். டிசைன், நவீன தொழில்நுட்ப சாதனங்கள், பூட் ரூம் இடவசதி, விலை என அனைத்திலும் மிகச் சிறந்த மதிப்பை தருகிறது. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

க்விட் மைலேஜ்

க்விட் மைலேஜ்

டட்சன் ரெடிகோ காருடன் எஞ்சினை பகிர்ந்துகொண்டிருப்பதால், ரெனோ க்விட் காரும் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை எதிர்பார்க்கலாம். இந்த காரில் இருக்கும் 799சிசி எஞ்சின் 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ரூ.2.60 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!

 
Most Read Articles

English summary
Top 5 Best Mileage Petrol Cars In India — Value For Money Propostion.
Story first published: Saturday, August 20, 2016, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X