கம்மியான விலையில் டாப் 5 டீசல் கார்கள்: சிறப்புத் தொகுப்பு

By Saravana Rajan

டீசல் கார்களுக்கான மவுசு உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். அதிக மைலேஜ், டார்க்கை வெளிப்படுத்தும் திறனில் டீசல் கார்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், அதன் பட்ஜெட்தான் பலரையும், பெட்ரோல் கார் பக்கம் திருப்பி விட்டு விடுகிறது.

ஆனால், டீசல் கார்தான் நமக்கு பெட்டர் என்று கருதுபவர்களுக்காக, இந்த செய்தித் தொகுப்பில் குறைவான விலையில் கிடைக்கும் 5 சிறந்த டீசல் கார்களின் விபரங்களை வழங்கியிருக்கிறோம்.

 01. டாடா டியாகோ

01. டாடா டியாகோ

சமீபத்தில் விற்பனைக்கு வந்த டாடா டியாகோ சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. அருமையான டிசைன், குறைவான விலை, நிறைவான வசதிகள் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும், அதிக மைலேஜ் தரும் பட்ஜெட் கார்களில் ஒன்றாகவும் இதனை கூறலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டாடா டியாகோ டீசல் மாடலில் இருக்கும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் டீசல் கார் வாங்குவதற்கு முக்கிய காரணமே மைலேஜ்தான். ஆம். இந்த கார் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது. நடைமுறையில் எப்படியும் லிட்டருக்கு 20 கிமீ.,க்கும் குறையாமல் மைலேஜ் தரும் என்று நம்பலாம். மேலும், இந்த காரின் பேஸ் மாடல் ரூ.4.58 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி செலிரியோ டீசல்

மாருதி செலிரியோ டீசல்

பட்ஜெட் விலையில் டீசல் வாங்குவோரின் முதல் சாய்ஸ் மாடலாக அடித்துக் கூறலாம். மாருதியின் தயாரிப்பு என்ற மிகப்பெரிய பலம், குறை சொல்ல முடியாத வடிவமைப்பு, சரியான விலை, குறைவான பராமரிப்பு செலவு போன்றவை இந்த காருக்கான சிறப்பம்சங்கள்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மாருதி செலிரியோ காரின் டீசல் மாடலில் 2 சிலிண்டர்கள் கொண்ட 793சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 47.65 பிஎஸ் பவரையும், 125 என்எம் டார்க்கையும் வழங்கும். அராய் சான்றுபடி, லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி மாடல்கள் மைலேஜுக்கு பெயர் போனவை என்பதால், இந்த காரும் லிட்டருக்கு 20 கிமீ.,க்கு குறையாத மைலேஜை வழங்கும். ரூ.5.42 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 செவர்லே பீட்

செவர்லே பீட்

நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற விலை குறைவான டீசல் கார் மாடல்களில் செவர்லே பீட் சிறப்பானதாக இருக்கும். இதன் டிசைன் அனைவரையும் கவரும் என்று கூற முடியாது. ஆனால், சிறிய குடும்பத்தினருக்கு ஏற்ற மாடல்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் இருக்கும் 1.0 லிட்டர் ஸ்மார்ட்டெக் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 57.1 பிஎஸ் பவரையும், 142.5 என்எம் டார்க்கையும் வழங்கும். அராய் சான்றுபடி, லிட்டருக்கு 25.44 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறந்த மைலேஜ் தரும் என்பது இதன் பலம். ரூ.6.50 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

மார்க்கெட்டில் இருக்கும் பட்ஜெட் டீசல் கார்களில் சிறந்த டிசைன், அதிக வசதிகள் கொண்ட ஹேட்ச்பேக் கார். மேலும், தரமான பாகங்கள் இதன் மதிப்பை உயர்த்துவதோடு, யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் இந்த காருக்கு தனி மதிப்பு உண்டு.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 70 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க்கையும் வழங்கும். அராய் சான்றுபடி, லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும். சென்னையில் ரூ.6.58 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி100

மஹிந்திரா கேயூவி100

என்ன சார் கிட்டத்தட்ட 6 லட்சம் பட்ஜெட் போட்டாலும், ஒரே மாதிரியான ஹேட்ச்பேக் கார்கள்தான் சாய்ஸாக இருக்கிறதே. ஒரு பந்தாவான தோற்றம் இல்லையே என்று கருதுபவர்களுக்காக, இந்த பட்டியலில் இதே பட்ஜெட்டில் கிடைக்கும் மஹிந்திரா கேயூவி10 மினி எஸ்யூவியை சேர்த்திருக்கிறோம். மினி எஸ்யூவி என்றாலும், இங்கே பார்த்த ஹேட்ச்பேக் கார்களைவிட நீங்கள் எதிர்பார்க்கும் சற்று பிரம்மாண்டமான தோற்றம், 6 பேர் வரை செல்வதற்கான இருக்கை வசதி இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்பம்சங்கள்

இதில், பொருத்தப்பட்டிருக்கும் புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 25.32 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் 243 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. சென்னையில் ரூ.6.24 லட்சம் ஆன்ரோடு விலையிலேயே கிடைக்கிறது.

சிறந்தது எது?

சிறந்தது எது?

மாருதி செலிரியோவின் 2 சிலிண்டர் எஞ்சின் நெடுஞ்சாலை பயணங்களின்போது போதிய பவரை அளிக்காது. குறைவான விலையில் சிறந்த மாடல் டாடா டியாகோ. ஆனால், டாடாவின் சர்வீஸ் மீது நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் இன்னும் நீங்கியபாடில்லை. செவர்லே பீட் மற்றும் மஹிந்திரா கேயூவி100 டிசைன் அனைவரையும் கவரும் வகையில் இல்லை. எனவே, இந்த பட்டியலில் சிறப்பான டிசைன், வசதிகள் கொண்டது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார். நகர்ப்புற பயன்பாடு மட்டுமல்லாது, நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் ஏற்ற கார் மாடல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10. சரியான விலை மற்றும் மறுவிற்பனை மதிப்பிலும் சிறந்த சாய்ஸ்.

Most Read Articles
English summary
Top 5 Most Affordable Diesel Cars In India.
Story first published: Saturday, July 2, 2016, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X