மைலேஜில் நம்பர்-1 காம்பேக்ட் செடான் கார் எது தெரியுமா?

Written By:

காம்பேக்ட் செடான் ரக கார்களின் முக்கிய வாடிக்கையாளர் இலக்கு நடுத்தர வருவாய் பிரிவினர்தான். குறைவான பராமரிப்பு செலவு, தோதான விலை, அதிக மைலேஜ் என்று பல காரணங்களை அடுக்கலாம். தினசரி பயன்பாடு, நீண்ட தூர பயன்பாடு என இரண்டிற்குமே காம்பேக்ட் செடான் கார்கள் ஏற்றது. பார்க்கிங் எளிது, ஓட்டுவது எளிது என்பதுடன், ஹேட்ச்பேக் கார்களைவிட அதிக மைலேஜ் தரும் மாடல்களாக காம்பேக்ட் செடான் கார்கள் உள்ளன.

இந்த நிலையில், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் காம்பேக்ட் செடான் கார்களை டீசல் மாடலை வைத்து மைலேஜின் அடிப்படையில் வரிசைப்படுத்தியிருக்கிறோம். விரைவில் வரும் ஃபோக்ஸ்வேகன் அமியோ காருக்கும் முன்பதிவு துவங்கப்பட்டு விட்டதால், அதனையும் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.

 05. டாடா ஸெஸ்ட்

05. டாடா ஸெஸ்ட்

மைலேஜ்

டீசல் - 23.0 கிமீ/லி

பெட்ரோல் - 17.6 கிமீ/லி

மார்க்கெட்டில் சிறப்பான வசதிகளுடன் கிடைக்கும் காம்பேக்ட் செடான் கார். கவர்ச்சிகரமான டிசைனும் இதற்கு வலு சேர்க்கும் அம்சம். எல்இடி பகல்நேர விளக்குகள் இதன் தோற்றத்தின் பொலிவை கூட்டும் அம்சமாக இருக்கிறது. ஹார்மன் மியூசிக் சிஸ்டம், உயர் வேரியண்ட்டுகளில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இருக்கின்றன. எல்லாவற்றையும் விட சிறப்பான இடவசதி கொண்ட காம்பேக்ட் செடான் மாடல்.

ஸெஸ்ட் எஞ்சின்

ஸெஸ்ட் எஞ்சின்

டாடா ஸெஸ்ட் காரில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இருவிதமான மாடல்களில் கிடைக்கிறது. ஒன்று 89 பிஎச்பி பவரையும் மற்றொன்று 74 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதுடன் வெவ்வேறு செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் தேர்வு செய்து வாங்க முடியும். ரூ.5.55 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

 04. ஹூண்டாய் எக்ஸென்ட்

04. ஹூண்டாய் எக்ஸென்ட்

மைலேஜ்

டீசல் - 24.4 கிமீ/லி

பெட்ரோல் - 19.1 கிமீ/லி

பிற ஹூண்டாய் கார்களை போன்று டிசைனில் ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தள்ள முடியாது. இந்த காரின் மிக முக்கிய அம்சம், 407 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதி. போட்டியாளர்களைவிட அதிகம். வசதிகள், இடவசதி, விலை என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மதிப்பு மிக்க மாடலாக கூறலாம்.

 எக்ஸென்ட் எஞ்சின்

எக்ஸென்ட் எஞ்சின்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் செடான் வெர்ஷன் என்பதால், அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான். பெட்ரோல் மாடலில் 81 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 71 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.1 லிட்டர் எஞ்சினும் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. ரூ.5.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

03. ஹோண்டா அமேஸ்

03. ஹோண்டா அமேஸ்

மைலேஜ்

டீசல் - 25.8 கிமீ/லி

பெட்ரோல் - 17.8 கிமீ/லி

காம்பேக்ட் செடான் கார்களிலிலேயே சிறப்பான டிசைன், அதிக இடவசதி, பவர்ஃபுல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் மாடல் என்பதால், அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. தவிரவும், 400 லிட்டர் கொள்ளளவு உடைய பூட்ரூம் உள்ளது. ஏற்கனவே இருந்த ஹோண்டா அமேஸ் காரின் உள்புற வடிவமைப்பு மிக எளிமையாக இருந்தது. ஆனால், சமீபத்தில் வந்த ஹோண்டா அமேஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்புற டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், இப்போது உட்புறமும் கவர்ச்சியாக இருக்கிறது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

ஹோண்டா அமேஸ் காரில் இருக்கும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, பெட்ரோல் மாலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎஸ் பவரை அளிக்கும். போட்டியாளர்களைவிட பல விதத்தில் சிறப்பானதாகவே இருக்கிறது அமேஸ். மேனுவல் கியர்பாக்ஸ், ஆட்டோமேட்டி மாடலிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மாடல் ரூ.5.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்தும், டீசல் மாடல் ரூ.7.34 லட்சம் ஆரம்ப விலையிலிருந்தும் கிடைக்கிறது.

02. ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

02. ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

மைலேஜ்

டீசல் - 25.8 கிமீ/லி

பெட்ரோல் - 18.1 கிமீ/லி

இந்த பட்டியலில் இருக்கும் கார்களில் சிறப்பான கட்டுமானத் தரம் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக கூறலாம். அத்துடன், இந்த கார் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. குறிப்பாக, ஃபோர்டு சிங்க் அப்ளிகேஷன் தொடர்பு வசதிகளுக்கும், அவசர காலத்திற்கு உதவும் விதத்திலும் அமைந்திருக்கிறது. வசதிகள், டிசைன், விலை, பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் சிறந்த கார். ஆனால், ஃபோர்டு நிறுவனத்தின் சர்வீஸ் பில்லை நினைத்து பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும் வழங்கும். காம்பேக்ட் செடான் கார்களில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றிருக்கும் கார்களில் ஒன்று. ரூ.5.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

01. மாருதி டிசையர்

01. மாருதி டிசையர்

மைலேஜ்

டீசல் - 26.5 கிமீ/லி

பெட்ரோல் - 20.8 கிமீ/லி

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 காம்பேக்ட் செடான் கார் டிசையர்தான். நடுத்தர மக்களின் வருவாய்க்கு தோதான மாடல் என்பதே இதன் முக்கிய பலம். அத்துடன், அனைத்து நகரங்களிலும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் மாருதி சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

மாருதி டிசையர் காரில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரை அளிக்கும். பெட்ரோல், டீசல் என இரு மாடல்களின் மைலேஜும் சிறப்பாக அமைந்திருப்பதும் இந்த காரின் வெற்றி ரகசியங்களில் ஒன்று. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் கிடைக்கிறது. ரூ.5.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ

ஃபோக்ஸ்வேகன் அமியோ

எதிர்பார்க்கப்படும் மைலேஜ்

டீசல் - 24.5 கிமீ/லி

பெட்ரோல் - 21.0 கிமீ/லி

பெட்ரோல் மாடல்களில் மிக அதிக மைலேஜ் தரும் காம்பேக்ட் செடானாக ஃபோக்ஸ்வேகன் அமியோ வரும் வாய்ப்புள்ளது. டிசைன், வசதிகள், பாதுகாப்பு, விலை, சிறந்த கட்டுமானத் தரம் என அனைத்திலும் சிறப்பான மாடலாக இருக்கும் என நம்பலாம்.

 அமியோ எஞ்சின் ஆப்ஷன்

அமியோ எஞ்சின் ஆப்ஷன்

அமியோ காரில் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்களில் வர இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வருகிறது. விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!

 
English summary
Top 5 Most Fuel Efficient Compact Sedans In India.
Story first published: Wednesday, June 1, 2016, 12:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark