பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் படங்கள் வெளியிடப்பட்டது

By Ravichandran

டொயோட்டா நிறுவனம் தங்களின் பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்...

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம் தான் இந்த டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானை வழங்கி வருகிறது.

இது உலக அளவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக சாதனை படைத்துள்ளது. பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என்று இருந்த நிலையில், இந்நிறுவனம், இந்த மாடலின் படங்களை வெளியிட்டுள்ளது.

ஸ்டைலிங் மற்றும் அம்சங்கள் பொருத்த வரை, பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்படும்.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரின் முன் பகுதியில், சிங்கிள் ஸ்லாட் கிரில்லும், அதன் 2 பக்கங்களிலும் மெல்லிய ஹெட்லேம்ப்கள் பொருத்தபட்டுள்ளது.

பெரிய ஏர் டேம் தெரியும் வகையில், இதன் ஃபிரண்ட் பம்பரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் பின் பகுதியில், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் பொருத்தபட்டுள்ளது.

மேலும், இதன் பம்பரும் மறுவடிவமைக்கபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானுக்கு புதிய அல்லாய் வீல்கள் பொருத்தபட்டுள்ளது.

மேலும், இதன் மெல்லிய ஹெட்லேம்ப்களுடன் டிஆர்எல் எனப்படும் டே டைம் ரன்னிங் லைட்கள் பொருத்தபட்டுள்ளது. ஆனால், இந்த வசதி, இந்த செடானின் டாப் வேரியன்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானில், டிபார்ச்சர் அலர்ட், ஆட்டோமேட்டிக் ஹை பீம் மற்றும் ப்ரீ-கொள்ளிஷன் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

ப்ரீ-கொள்ளிஷன் சிஸ்டம்;

ப்ரீ-கொள்ளிஷன் சிஸ்டம்;

ப்ரீ-கொள்ளிஷன் சிஸ்டம் என்பது, தவிர்க்க முடியாத கிராஷ் நிகழும் நேரத்தில், சீட் பெல்ட் தானாக இறுக்கமாக ஆகிவிடுவதும், பிரேக்குகளை ப்ரீ சார்ஜிங் செய்து கொள்ளும் வசதி ஆகும்.

இதனால், விபத்துகள் நிகழும் பட்சத்தில் பாதிப்புகளாவது குறைவாக இருக்கும்.

விவரக்குறிப்புகள்;

விவரக்குறிப்புகள்;

தற்போதைய நிலையில், பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் விவரக்குறிப்புகள் குறித்த எந்த விதமான அதிகார்பபூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

பொலிவு கூட்டப்பட்ட புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், சர்வதேச அளவில் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யபட்ட பின், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாடல்;

பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான், 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலும், ப்ரீ-கொள்ளிஷன் சிஸ்டத்துடனும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வரவேற்பு;

நல்ல வரவேற்பு;

பொலிவு கூட்டப்பட்ட புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும், இதன் ஹைப்ரிட் வேரியன்ட்டிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

டெல்லியில் டீசல் வாகனங்களுக்கான விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கு எந்த தடையும் இல்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியா வரும் 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் அறிமுகம்!

கரொல்லா தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Japan based Carmaker Toyota has revealed the pictures of Facelifted Corolla Altis Prior to its Global Debut. On safety front, Toyota has upgraded features such as lane departure alert, automatic high beam, and pre-collision system. New Toyota Corolla Altis may have 1.8-litre petrol and 1.4-litre diesel engines and might get pre-collision system. To know more, check here...
Story first published: Tuesday, June 21, 2016, 18:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X