ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸுக்குப் போட்டியாக வரும் புதிய டொயோட்டா கார்!

Written By: Krishna

மிட் - சைஸ் செடான் எனப்படும் நடுத்தர ரக சொகுசு வாகனங்களுக்கு இந்தியாவில் தனி ஆடியன்ஸ் உள்ளது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹுண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட மாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.

பல முன்னணி நிறுவனங்கள், அந்த செக்மெண்டில் தங்கள் தயாரிப்புகளை மார்க்கெட்டில் களமிறக்கியிருந்தாலும், டொயோட்டா மட்டும் அந்த வரிசையில் இடம்பெறாமலேயே இருந்தது.

டொயோட்டா வியோஸ்

இந்நிலையில் அந்தக் குறையைப் போக்கும் வகையில், நடுத்தர ரக செடான் மாடலில் புதிய கார் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

ஏற்கெனவே காம்பேக்ட் செடான் மற்றும் ஹேட்ச்பேக் செக்மெண்ட்களில் முறையே எட்டியாஸ், எட்டியாஸ் லிவா ஆகிய கார்களை டொயோட்டா களமிறக்கியுள்ளது. மேலும் வியோஸ் என்ற செடான் மாடலை இந்தியாவில் ஆய்வுக்காக அந்நிறுவனம் இறக்குமதி செய்தது.

அந்த மாடல் இங்கு அறிமுகப்படுத்தக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த முடிவை டொயோட்டா அண்மையில் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்துதான் இப்போது புதிய மிட் ரேஞ்ச் செடானை சர்வதச அளவில் புதிதாக அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதலில் பிரேசில் மார்க்கெட்டில் அந்த மாடல் தடம் பதிக்கும் எனத் தெரிகிறது. அதன் பிறகு 2017-இல் இந்திய மார்க்கெட்டில் புதுவரவாக அது வரக் கூடும். முழுக்க, முழுக்க எட்டியாஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு அந்த கார் வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செடான் காரின் எஞ்சின் திறன் மற்றும் சிறப்பம்சங்களை சிதம்பர ரகசியம் போல வெளிவிடாமல் இருக்கிறது டொயோட்டா நிறுவனம். கிட்டத்தட்ட எட்டியாஸில் உள்ள எஞ்சின் திறன்தான் புதிய மாடலுக்கும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் என இரு மாடல்களில் 6 மேனுவல் கியர்களுடன் முதலில் அறிமுகலாம் என்றும் அதன் பிறகு ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் கொடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் டொயோட்டாவின் புதிய செடான் கார் அறிமுகமானால், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் ஆகிய மாடல்களுடன் கடுமையான யுத்தத்துக்கு அது தயாராக வேண்டியிருக்கும் என்பது உறுதி.

English summary
Toyota Etios-based Sedan To Compete With Honda City & Maruti Ciaz.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark