டொயோட்டா லிவா மற்றும் எட்டியாஸ் மீதான தள்ளுபடிகள் - முழு விவரம்

Written By:

டொயோட்டா நிறுவனம் தரமான கார் மாடல்களை வழங்குவதில் புகழ் பெற்றுள்ளது. ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள், இந்திய வாகன சந்தைகளில் விற்பனையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், டொயோட்டா நிறுவனம் தங்களின் லிவா மற்றும் எட்டியாஸ் போன்ற சில தயாரிப்புகள் மீது தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். இதனால், டொயோட்டா நிறுவனத்தின் மாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லையோ என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் ஒரு சில புதிய மாடல்களை செய்ய உள்ளனர்.

டொயோட்டா நிறுவனம், எந்த மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடிகளை வழங்குகின்றனர் என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

தள்ளுபடிக்கான காரணம்;

தள்ளுபடிக்கான காரணம்;

டொயோட்டா நிறுவனம், பொலிவு கூட்டப்பட்ட புதிய லிவா மற்றும் எட்டியாஸ் ஆகிய மாடல்களை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளனர். புதிய லிவா மற்றும் எட்டியாஸ் மாடல்கள் ஏற்கனவே பிரேசிலில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த புதிய மாடல்களின் அறிமுகத்திற்கு முன்பு, பழைய ஸ்டாக்குகளை கிளியர் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய டொயோட்டா லிவா மற்றும் எட்டியாஸ் வெகு விரைவிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றம்;

தோற்றம்;

பொலிவு கூட்டப்பட்ட புதிய டொயோட்டா லிவா மற்றும் எட்டியாஸ், தற்போது விற்பனையில் உள்ள மாடல்களை காட்டிலும் கூடுதல் கூர்மையானவையாகவும், பிரிமியம் தோற்றத்துடனும் காணப்படுகிறது.

தள்ளுபடிகள்;

தள்ளுபடிகள்;

மும்பையில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்கள் 15,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி அளிக்கின்றனர்.

டெல்லியில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்கள், எட்டியாஸ் மீது 12,500 ரூபாய் தள்ளுபடியையும், லிவா மீது 10,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியையும் வழங்குகின்றனர்.

புக்கிங்;

புக்கிங்;

புதிய டொயோட்டா லிவா மற்றும் எட்டியாஸ் அறிமுகம் குறித்த செய்திகள் வெளியாகி வருகிறதே தவிர, இவற்றின் புக்கிங் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் டொயோட்டா டீலர்ஷிப்கள் இது வரை மேற்கொள்ளவில்லை.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

டொயோட்டா நிறுவனம் எப்போதுமே, சிறந்த தரம், புதுமை மற்றும் உயர்தர தொழில்நுட்பங்கள் கொண்ட கார்களையே வழங்கி வந்துள்ளனர்.

புதிய டொயோட்டா லிவா மற்றும் எட்டியாஸ் மாடல்களும் டொயோட்டாவின் பாரம்பரியத்தை அப்படியே தொடரும் என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆகஸ்ட் மாதத்தில் கார் நிறுவனங்களின் அசத்தலான தள்ளுபடிகள்

ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அதிரடியாக குறைப்பு

70% தள்ளுபடியில் பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Toyota is offering discounts on Etios and Liva. Already, New facelifted Etios and Liva have been launched in Brazil. Toyota will be bringing new facelifted Etios and Liva to India soon. In order to make way for new facelifted Etios and Liva, current Etios and Liva Stocks should be cleared. Hence, Discounts are offered in existing stocks of current models. To know more, check here...
Story first published: Friday, August 12, 2016, 7:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark