டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் அறிமுக நிலை ஸ்பை படங்கள் வெளியாகியது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தான், இந்த 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி தயாரித்து வருகிறது. கொஞ்ச காலமாகவே, 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர்...

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர்...

டொயோட்டா நிறுவனம் இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை 2015 அக்டோபர் முதல் இறக்குமதி செய்ய துவங்கியது. சாலைகளில் இதன் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, டீலர்ஷிப்களுக்கு கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியாகிறது. இதன் மாடல் ஒன்று அஹமதாபாத் நகர டீலர்ஷிப்பில் காணப்பட்டது.

விற்பனை;

விற்பனை;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, ஏற்கனவே இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிசைன்;

டிசைன்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, புதிய டிசைன் மொழி அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, டொயோட்டாவின் டொயோட்டாவின் புதிய குளோபல் ஆர்கிடெக்சர் (Toyota's New Global Architecture (TNGA)) அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் எக்ஸ்டீரியர், குரோம் பூச்சு செய்யப்பட்ட கிரில், எல்இடி டிஆர்எல்கள் உடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட்கள், புதிய 18-இஞ்ச் அல்லாய் வீல்கள், மறுவடிவமைக்கப்பட்ட டெயில்லைட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, 2 டீசல் இஞ்ஜின்கள் மற்றும் 1 பெட்ரோல் இஞ்ஜின் ஆகிய இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலை போல் டீசல் இஞ்ஜின் தேர்வில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்-1;

டீசல் இஞ்ஜின்-1;

இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலிலும் காணப்படும் 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின், 148 பிஹெச்பியையும், அதிகப்படியாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

டீசல் இஞ்ஜின்-2;

டீசல் இஞ்ஜின்-2;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் 175 பிஹெச்பியையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின்கள் இரண்டுமே 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

வாகன இரைச்சலால் செவித் திறனை இழக்கும் டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சி ரிப்போர்ட்...

சூரியனை பற்றி ஆராய்வதற்காக தயாராகும் விண்கலம்- சிறப்புத் தகவல்கள்!

விமானங்களுக்கான இந்தியாவின் புதிய நேவிகேஷன் சிஸ்டம்... தாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது...!!

Spy Pictures Credit ; www.team-bhp.com

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota is in plans for launching 2016 Toyota Fortuner in India. 2016 Toyota Fortuner was been spotted testing on public roads too. According to latest reports, 2016 Toyota Fortuner has started eaching dealerships in India. It was spotted at a dealership in Ahmedabad. 2016 Fortuner features all-new design language as is built on Toyota's New Global Architecture (TNGA). To know more, check here...
Story first published: Monday, October 3, 2016, 16:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X