9 மில்லியன் ஹைப்ரிட் கார்களை விற்று டொயோட்டா நிறுவனம் சாதனை

Written By:

டொயோட்டா ஹைப்ரிட் கார்களின் விற்பனை 9 மில்லியன் கார்கள் என்ற அளவிலான விற்பனையை தாண்டி தொடர்ந்து முன்னேறி கொண்டே இருக்கிறது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம், முதன் முதலாக கோஸ்டர் ஹைப்ரிட் இவி என்ற எலக்ட்ரிக் காரை ஆகஸ்ட் 1997-ல் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து, அடுத்த 4 மாதத்தில் பிரையஸ் மாடலை அறிமுகம் செய்தது.

டொயோட்டா நிறுவனம், இந்த 9 மில்லியன் கார்கள் என்ற அளவிலான விற்பனையை ஏபரல் 30, 2016-ஆம் தேதி கடந்தது. கடைசியாக, 8 மில்லியன் கார்கள் என்ற அளவில் இருந்த ஹைப்ரிட் கார்களின் விற்பனையை, 9 மில்லியன் கார்கள் என்ற அளவிலான விற்பனை சாதனையாக மாற்ற, வெறும் 9 மாதங்களே ஆனது.

டொயோட்டா நிறுவனம், இந்த 9 மில்லியன் கார்கள் என்ற விற்பனை சாதனை குறித்து மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தியது. மேலும், டொயோட்டா நிறுவனம், தங்களின் ஹைப்ரிட் கார்கள், கரியமில வாயுவின் (CO2) உமிழ்வை குறைப்பதில் மிகுந்த பங்காற்றி வருகிறது என கூறுகிறது.

"டொயோட்டா ஹைப்ரிட் கார்களை போன்ற அதே அளவிலான வழக்கமான கார்களை உபயோகிப்பதை காட்டிலும், டொயோட்டாவின் ஹைப்ரிட் கார்களை உபயோகிப்பதனால், ஏப்ரல் 30, 2016-ஆம் தேதி வரை மட்டுமே, உலகத்தை வெப்பமயமாக்கும் சுமார் 67 மில்லியன் டன் கரியமில வாயுவின் உமிழ்வு தடுக்கபட்டுள்ளது.

toyota-hybrid-cars-sales-figures-crossed-9-million

மேலும், இதே கிளாஸ் வாகனங்களை உபயோகிக்க தேவைப்படும் சுமார் 25 மில்லியன் கிலோலிட்டர் கேஸோலின் உபயோகம் தடுக்கபட்டுள்ளது" என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது வரை, டொயோட்டா நிறுவனம் மூலம் விற்கபடுள்ள 9 மில்லியன் ஹைப்ரிட் கார்களில், 4 மில்லியன் ஹைப்ரிட் கார்கள் பிரையஸ் வகையை சேர்ந்ததாகும்.

English summary
Japanese Carmaker Toyota has sold over 9 million hybrid vehicles, since they first launched their Coaster Hybrid EV in August 1997. Following that, Prius was launched 4 months later. Toyota crossed the 9 million mark on April 30, 2016. The latest million sprint, from eight to nine million, took just nine months. Out of 9 million hybrids sold, over 4 million is from Prius hybrids...
Story first published: Tuesday, May 24, 2016, 7:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more