டொயோட்டா கார்களுக்கான டிசம்பர் தள்ளுபடி சலுகைகள்!

Written By:

டிசம்பர் மாதத்தில் விற்பனையை ஊக்குவிப்பதற்காக முன்னணி கார் நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனமும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

டொயோட்டா கார் நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களுக்கு இப்போது சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அந்த சலுகை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

 டொயோட்டா லிவா

டொயோட்டா லிவா

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா லிவா காருக்கு சிறப்பு சேமிப்பை பெறும் அரிய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புடைய சேமிப்பை இப்போது பெற முடியும்.

 டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

லிவா காரை போலவே மேம்படுத்தப்பட்டு வந்திருக்கும் புதிய டொயோட்டா எட்டியோஸ் காருக்கும் சேமிப்புச் சலுகைகள் பெறும் வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ரூ.45,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

 புதிய டொயோட்டா இன்னோவா

புதிய டொயோட்டா இன்னோவா

வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய தலைமுறைக்கு மாறி இருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா காரை வாங்க விரும்புவோருக்கு தற்போது சிறப்பு ஆஃபர் இருக்கிறது. ஆம். புதிய டொயோட்டா இன்னோவா காருக்கு விலையில் 100 சதவீத கடன் வசதி சலுகை வழங்கப்படுகிறது. இது நிச்சயம் இன்னோவா கனவுடன் காத்திருப்போருக்கு சிறப்பானதாக இருக்கும்.

புதிய கரொல்லா ஆல்டிஸ்

புதிய கரொல்லா ஆல்டிஸ்

புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான் காருக்கும் இப்போது அதிரடி சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது கரொல்லா ஆல்டிஸ் காரை முன்பதிவு செய்தால், அதிகபட்சமாக ரூ.70,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

முன்பதிவுக்கு விரையுங்கள்

முன்பதிவுக்கு விரையுங்கள்

வரும் 31ந் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இருப்பு இருக்கும் கார்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் பெற முடியும். எனவே, உடனே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

English summary
Remember December offer by Toyota has been introduced to boost sales during 2016-end. Only select models and variants will be included with exciting offers and benefits during December 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark