டொயோட்டா இந்தியா நிறுவனம் நடத்தும் சர்வீஸ் முகாம் துவங்கியது

Written By:

டொயோட்டா இந்தியா நிறுவனம் நடத்தும் சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவங்கியது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், க்யூ சர்வீஸ் ஃபெஸ்ட்டிவ் செலப்ரேஷன் ("Q Service Festive Celebration") என்ற பெயரில் சர்வீஸ் முகாம்களை துவக்கியுள்ளது. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்கலின் குறைகளை தீர்க்க இத்தகைய சர்வீஸ் முகாம்களை நடத்துகின்றனர்.

டொயோட்டா இந்தியா நிறுவனம் நடத்தும் சர்வீஸ் முகாம்களை தேய்ந்து கொள்ள, இங்கே பார்க்கவும்.

சர்வீஸ் முகாம்;

சர்வீஸ் முகாம்;

டொயோட்டா இந்தியா நிறுவனம் நடத்தும் சர்வீஸ் முகாம்கள் அக்டோபர் 1-ஆம் தேதி துவங்கி, இந்த மாதம் முழுவதும் 31-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த சர்வீஸ் முகாம்களின் போது, ஏராளமான சலுகைகளையும், சேவைகளையும் வழங்குகின்றனர்.

சலுகைகள்;

சலுகைகள்;

டொயோட்டா இந்தியா நிறுவனம், கார் கேர் ட்ரீட்மெண்ட்களில் 20% தள்ளுபடி, பேட்டரி வாங்கும் போது நிச்சய பரிசுகள், டயர்கள் எக்ஸ்டண்டட் வாரண்டி பேக்கேஜ் மற்றும் எக்ஸ்பிரஸ் மெயிண்டனன்ஸ் பேக்கேஜ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றனர்.

உயர்அதிகாரி கருத்து;

உயர்அதிகாரி கருத்து;

"கஸ்டமர் ஃபர்ஸ்ட் ("Customer First") எனப்படும் வாடிக்கையாளர்களே பிரதானம் என்ற அடிப்படையில், தொடர்ந்து ஈர்க்கும் வகையிலான சலுகைகளை கொண்டு வருகிறது. மேலும், பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருப்பதனால், இந்த சேவை முகாம்கள் மற்றும் சலுகைகள் வாடிக்கையாளர்களை அதிக சந்தோஷப்படுத்தும்" என டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் உயர்அதிகாரியான பி பத்மநாபா தெரிவித்தார்.

குறிக்கோள்;

குறிக்கோள்;

"வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்கள் இல்லாத வாகனம் இயக்கும் அனுபவத்தை வழங்குவது தான், இத்தகைய சர்வீஸ் முகாம்களை நடத்துவதும், சலுகைகளை வழங்குவதன் முக்கிய நோக்கமாக உள்ளன என டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் உயர்அதிகாரியான பி பத்மநாபா கூறினார்.

சிறப்பு சலுகைகள்;

சிறப்பு சலுகைகள்;

முன்னதாக, டொயோட்டா நிறுவனம், டொயோட்டா எக்ஸ்டண்டட் வாரண்டி ("Toyota's Extended Warranty") என்ற ஒரு சலுகையை வழங்கியது. டொயோட்டா நிறுவனம், 3 வருடங்கள் அல்லது 100,000 கிலோமீட்டர் என்ற வெஹிகிள் வாரண்டியை ஸ்டாண்டர்ட்-டாக வழங்குகிறது. டொயோட்டா எக்ஸ்டண்டட் வாரண்டி எனப்படும் இந்த புதிய வாரண்டியின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களின் வாரண்டியை 7 வருடங்கள் அல்லது 180,000 கிலோமீட்டர் வரை நீட்டித்து கொள்ளலாம்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor (TKM) organises month-long service camp starting from October 1, 2016. The service camp will include wide range of offers and services. Toyota has named this service camp as "Q Service Festive Celebration". Offers include 20% discounts on car care treatments, assured gifts on purchase batteries, tyres, and extended warranty packages and express maintenance package. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos