புதிய இன்னோவாவை தனி நபர் விமானத்திற்கு இணையாக மாற்றிய டிசி டிசைன்!

By Saravana Rajan

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. மேலும், விலை அதிகரிக்கப்பட்டாலும் மிகவும் பிரிமியம் மாடலாக வந்திருப்பதும் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது.

இந்தநிலையில், புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் சொகுசுக்கு சொகுசு சேர்க்கும் விதத்தில் கஸ்டமைஸ் செய்து வெளியிட்டிருக்கிறது டிசி டிசைன் நிறுவனம். மேலும், சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த கஸ்டமைஸ் வசதியை பெற்றுக் கொள்ளளாம் என்றும் தெரிவித்துள்ளது.

பிரபலம்

பிரபலம்

பழைய இன்னோவா காருக்கு டிசி நிறுவனம் வெளியிட்ட பல கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களிடத்தில் வெகு பிரபலம். இதனால், புதிய இன்னோவா காருக்கு டிசி நிறுவனம் எப்போது கஸ்டமைஸ் வசதியை வெளியிடும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

டீசர்

டீசர்

கடந்த மே மாதம் முதல்முறையாக புதிய இன்னோவா காருக்கான கஸ்டமைஸ் வசதியை விரைவில் வெளியிட இருப்பதாக டிசி நிறுவனம் தகவல் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, ஜூன் மாதத்தில் கம்ப்யூட்டரில் வரையப்பட்ட டீசர் படங்களையும் வெளியிட்டது. இது வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது.

வெளியீடு

வெளியீடு

இந்தநிலையில், தற்போது புதிய இன்னோவா காருக்கான கஸ்டமைஸ் ஆப்ஷனை வெளியிட்டிருக்கிறது. இந்தமுறை இன்னோவாவின் அழகை குலைத்துவிடாத வகையில் மிகவும் எச்சரிக்கையாக வண்ணக் கலவையை தேர்வு செய்துள்ளது.

வண்ணக் கலவை

வண்ணக் கலவை

க்ரீம் மற்றும் கருப்பு வண்ணக் கலவையுடன் இன்டீரியர் கவர்கிறது. மேலும், கதவுகள், தடுப்புகள் மற்றும் தரைப்பகுதியில் மரத்தாலான அலங்கார தகடுகள் பதிக்கப்பட்டிருப்பது பிரிமியமாக காட்டுகிறது.

ராஜ இருக்கை

ராஜ இருக்கை

ஒவ்வொரு பயணத்தையும் சொகுசாக மாற்றுவதற்கு இருக்கை மிக முக்கியம். அதன்படி, இரண்டு வரிசை இருக்கைகளை தூக்கி விட்டு, சாய்மான வசதியுடன் கூடிய சொகுசான இரண்டு ராஜ இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனை படுக்கை போல சாய்த்துக் கொண்டு பயணிக்க முடியும்.

விளக்குகள்

விளக்குகள்

ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதுடன், அதற்கான சுவிட்சுகள் ஆர்ம் ரெஸ்ட் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், முன் வரிசை இருக்கை பகுதி தடுக்கப்பட்டிருக்கிறது. லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைப்பதற்கான ரகசிய அறையும் உண்டு.

பொழுதுபோக்கு வசதிகள்

பொழுதுபோக்கு வசதிகள்

பொழுதுபோக்கு வசதிக்காக முன்புற தடுப்பில் டிவி திரை பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், பயணங்கள் உற்சாகம் குறையாமல் செல்லும். அதற்கான சுவிட்சுகள் கூரை மீது பொருத்தப்பட்டிருக்கின்றன.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

வெளிப்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஏனெனில், சில மாடல்களின் வெளிப்புறத்தில் டிசி டிசைன் லோகோவுடன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். ஆனால், அதுகுறித்த படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கட்டணம்

கட்டணம்

இதுபோன்ற வசதிகளுடன் புதிய இன்னோவா காரை கஸ்டமைஸ் செய்து தருவதற்கு ரூ.4.95 லட்சம் கட்டணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.13.72 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார் கிடைப்பதையும் குறிப்பிட வேண்டும். ஆன்ரோடு விலை ரூ.15 லட்சமாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 லட்சம் இருந்தால் புதிய இன்னோவாவின் பேஸ் மாடலை இவ்வாறு மாற்றிவிடலாம்.

தொடர்புக்கு...

தொடர்புக்கு...

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழ்க்கண்ட மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  • சென்னை - 9952925248
  • பெங்களூர் - 9741414433
  • ஹைதராபாத் - 9030000890
  • மும்பை - 9870133333
  • என்சிஆர் - 9582133333
Most Read Articles
English summary
Toyota Innova Crysta Gets the DC Lounge treatment.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X